எந்த கிழமையில் பிறந்தவர்கள் எதை செய்தால் அதிஷ்டம் உண்டாகும்

astrology

பொதுவாக ஒவ்வொரு கிழமையில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு குணம் இருக்கும். அதோடு அந்த கிழமைக்குரிய செயல்களை செய்வதன் மூலம் அவர்களுக்கு அதிஷ்டம் வந்து சேரும். வாருங்கள் ஒவ்வொரு கிழமையில் பிறந்தவர்களின் பொது குணங்களும் அவர்கள் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பது பற்றியும் பார்ப்போம்.

ஞாயிற்றுக்கிழமை

sunday

அடுத்தவர் மிகவும் கஷ்டப்பட்டு செய்யும் செயலைக்கூட அசால்டாக செய்யும் திறன் கொண்டவர்கள் ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள். எதிலும் வெற்றி கண்டே தீர வேண்டும் என்று கடினமாக உழைக்கும் குணம் இவர்களிடம் சற்று அதிகமாக இருக்கும். பிறரை ஏமாற்றாமல் நேர் வழியில் உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்ற குணமுடைய இவர்கள் தங்களால் இயன்றவரை பிறருக்கு உதவக்கூடியவர்கள்.

இவர்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் கோதுமையால் ஆனா பலகாரத்தை இறைவனுக்கு நைவேத்தியம் செய்வதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம். அதோடு ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு ‘ஆதித்ய ஹ்ருதயம்’ பாராயணம் செய்வதன் மூலம் நோயற்ற வாழ்வை பெறலாம்.

திங்கள்கிழமை

- Advertisement -

monday

திங்கட்கிழமையில் பிறந்தவர்கள் தங்களது வசீகரமான பேச்சால் அனைவரையும் கவரும் ஆற்றல் கொண்டவர்கள். நண்பர்களை அதிகம் கொண்ட இவர்கள், தன்  நட்பிற்காக எதையும் செய்வார்கள்.  பொதுவாக இவர்கள் வீட்டில் சொந்தங்களோடு இருப்பதை விட வெளியில் தன் நண்பர்களோடு தான் அதிக நேரம் இருப்பார்கள். நல்ல குணம் கொண்ட இவர்களிடம் தெய்வ பக்தியும் அதிகமாக இருக்கும்.   .

இவர்களுக்கு பெற்ற தாயே சிறிநத தெய்வம். ஆகையால் திங்கட்கிழமையில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு உங்கள் தாயின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய பின்பு வெள்ளை நிற பூக்களை கொண்டு அம்மனுக்கு அர்ச்சனை செய்வதால் வாழ்வில் வளங்களை பெறலாம். வெள்ளை நிற ஆடைகள் உங்களுக்கு மேன்மையை தரும்.

செவ்வாய்க்கிழமை

tuesday

செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்களுக்கு மூக்கிற்கு மேல் கோவம் வரும். ஆனால் கோவம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்பது போல இவர்களின் குணத்திற்காகவே பலர் இவர்களோடு நட்பு வைத்திருப்பர். இவர்களிடம் விவாதிக்கும்போது சற்று உஷாராக இருப்பது அவசியம். சரியான ஆதாரங்களோடு பேசுவதில் இவர்கள் வல்லவர்களாக இருப்பார்கள்.

முருகனுக்கு உரிய நாள் செவ்வாய்க்கிழமை. ஆகையால் செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு அரளிப்பூ மாலையை முருகனுக்கு சார்த்தி வழிபடுவது சிறப்பு. அதோடு அன்று மாலை துவரம் பருப்பால் செய்த பலகாரத்தை பைரவருக்கு நைவேத்தியம் செய்வதன் மூலம் பல அறிய பலன்களை பெறலாம்.

புதன்கிழமை

wednesday

புதன்கிழமையில் பிறந்தவர்கள் பொதுவாக சற்று கூச்ச சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் அனைத்தையும் அறிந்துகொள்ளும் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் தன் நண்பர்களை தேர்ந்தெடுத்து பழகுவார்கள். ஆனால் ஒருவரை நட்பாக ஏற்றுக்கொண்ட பிறகு அவருக்காக உயிரையும் கொடுப்பார்கள்.

இவர்கள் புதன் கிழமை அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு பகவான் விஷ்ணுவின் சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்வதன் மூலம் சகல செல்வங்களையும் பெறலாம். இவர்கள் தன் தாயோடு பிறந்த அண்ணன் தம்பிகளிடம்(தாய் மாமன்களிடம்) ஆசிர்வாதம் பெறுவது மேலும் சிறப்பு.

இதையும் படிக்கலாமே:
எந்த ராசிக்காரர் எந்த மந்திரம் சொன்னால் திருமண தடை நீங்கும்

வியாழக்கிழமை

thursday

வியாழக்கிழமையில் பிறந்தவர்கள் பொதுவாக அமைதியான மனிதர்களாக இருப்பார்கள். இவர்கள் தான் இருக்கும் இடத்திலேயே அனைத்தையும் அறிந்துகொள்வார்கள். நல்ல அறிவுத்திறனோடும் எதையும் சரியாக திட்டமிடும் திறமையும் இவர்களிடம் இருக்கும். இவர்கள் அவ்வளவு எளிதில் எந்த ஒரு பிரச்னையிலும் சிக்கிக்கொள்ள மாட்டார்கள்.

வியாழக்கிழமை தட்சணாமூர்த்திக்கு உகந்தநாள் ஆகையால் இவர்கள் வியாழக்கிழமையில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு தட்சணாமூர்த்திக்கு மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்வதன் மூலம் பல அறிய பலன்களை பெறலாம். இவர்கள் தங்கள் குருவிடம் பயபக்தியோடு நடந்துகொள்வதன் மூலம் வாழ்வில் உன்னத நிலையை அடைவர்.

வெள்ளிக்கிழமை

friday

வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் சுற்றுலா பிரியர்களாக இருப்பார்கள். அதோடு இவர்கள் தங்களுக்கு எது வேண்டுமோ அதை அடைந்தே தீரும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். சுருக்கமாக இவர்களை பற்றி சொல்ல வேண்டுமானால் சகல செல்வங்களோடு வாழ்க்கையை சந்தோசமாக அனுபவிக்க பிறந்தவர்கள் இவர்கள்.

இவர்கள் வெள்ளிக்கிழமை அதிகாலையில் குளித்துவிட்டு பால், பழம், கற்கண்டு, தேன் ஆகியவற்றை அம்பிகைக்கு நைவேத்தியம் செய்து வழிபடுவதன் மூலம் வாழ்வில் உள்ள தடைகள் அனைத்தும் நீங்கி இன்பமாக வாழலாம்.

சனிக்கிழமை

saturday

சனிக்கிழமை பிறந்தவர்கள், எதையும் சற்று அலட்சியமாகவே என்னும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். நண்பர்களுக்காக எதையும் செய்யும் குணம் கொண்ட இவர்கள் எதை பற்றியும் பெரிதாக கவலை படமாட்டார்கள். சில நேரங்களில் சுறுசுறுப்போடும் சில நேரங்களில் சோம்பேறிகளாகவும் இவர்கள் இருப்பார்கள். எதையும் இவர்கள் வித்யாசமாக யோசிக்கும் திறன் கொண்டவர்கள்.

இவர்கள் சனிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு சிவன் கோயிலிற்கு சென்று வில்வ மாலையை சாற்றி வாழ்விப்படுவதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம். அதோடு சனிக்கிழமைகளில் காகத்திற்கு அன்னமிடுவதன் மூலம் வாழ்வில் உள்ள தடைகள் அனைத்தும் விலகும்.