உங்களது வாழ்க்கையில் நடக்கப்போகும் நல்லது கெட்டதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் ஆற்றலை நீங்கள் பெற வேண்டுமா? 3 நிமிட சுலபமான பயிற்சி!

yoga1

உங்களுடைய வாழ்க்கையில் நடக்கப்போகும் நல்லது கெட்டதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், முதலில் உங்களைப் பற்றி, உங்களுக்கே நன்றாக தெரிந்து இருக்க வேண்டும். இரண்டாவதாக உங்களை சுற்றி உள்ளவர்களை பற்றியும் நன்றாக புரிந்து கொள்ளும் திறனை பெற்றிருக்க வேண்டும். உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களை பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதாவது உங்கள் சுற்றுச்சூழலில் நடக்கும் எல்லா செயல்களை பற்றிய தெளிவையும் நீங்கள் பெற வேண்டும் என்றால், உங்களை சுற்றி இருக்கும் காந்த சக்தியை ஈர்க்கும் திறனை நீங்கள் பெறவேண்டும் இதற்கு என்ன பயிற்சியை, எப்படி செய்ய வேண்டும்? என்ற சூட்சும ரகசியத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Thiyanam

இந்த பயிற்சி பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. அது என்ன பயிற்சி என்பது இந்த பதிவின் ஆரம்பத்திலேயே உங்களுக்கு நன்றாக புரிந்துவிடும். அதாவது சில விலங்குகளுக்கு, பிற்காலத்தில் நடக்கக் கூடியதை முன்கூட்டியே சொல்லும் சக்தி இருக்கிறது என்று சொல்வார்கள். பல வருடங்களுக்கு  முன்பெல்லாம், நரி ஊளையிடும் சத்தம் அபசகுனமாக சொல்லப்பட்டது. இந்த காலகட்டத்தில் நாய்கள் அழுதாலும் அல்லது வித்தியாசமான சத்தத்தை எழுப்பினாலும், அது ஏதோ ஒரு கெட்ட விஷயத்தை சொல்ல வருவதாக ஒரு சாஸ்திரம் உள்ளது. இது நாம் எல்லோரும் அறிந்தது தான்.

நாய், சில சமயங்களில் பாதி கண்களை மூடி வைத்துக் கொண்டு படுத்திருக்கும். ஆனால் அதன் அருகில் யாராவது சென்றால் உடனே எழுந்து ஓடி விடும். அது பாதி கண்களை மூடி இருக்கும் சமயத்தில் அந்த விலங்கு தூங்கிக் கொண்டிருக்கிறது என்பது அர்த்தம் கிடையாது. அது தியானத்தில்  இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட ஒரு பயிற்சியை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Munivar

சில பெரிய பெரிய மகான்கள் கூட பாதி கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்வதை நாம் அவர்களது திரு உருவப் படங்களில் கண்டிருக்கின்றோம். அதற்காக இப்படிப்பட்ட தியானத்தை மேற்கொள்பவர்கள் எல்லாமே ஞானியாகி விடமுடியும் என்று சொல்லிவிட முடியாது. நம்மை சுற்றி என்ன நடக்கிறது? நாம் ஒரு செயலில் ஈடுபட்டால், அது வெற்றியடையுமா? தோல்வியில் போய் முடியுமா? அடுத்தவர்கள் நம்மைப்பற்றி என்ன சிந்திக்கிறார்கள் என்பதை பற்றிய விழிப்புணர்வு நமக்கு ஏற்படுத்தும் பயிற்சி தான் இந்த பயிற்சி.

- Advertisement -

இந்த பயிற்சியை தொடங்குவதற்கு முன்பு உங்களது மனதை அமைதியாக வைத்துக் கொண்டு, கிழக்கு பக்கம் பார்த்தவாறு சம்மணம் போட்டு அமர்ந்து கொள்ளலாம் அல்லது வசதியாக இருக்க வேண்டுமேயானால் நாற்காலியிலும் அமர்ந்து கொள்ளலாம்.

nose

முதலில் உங்களது கட்டை விரலை உங்கள் மூக்கின் நுனிப் பகுதியில் வைத்து மேல்நோக்கி லேசாக அழுத்தி விட வேண்டும். கீழே படத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த நுனிப்பகுதியில் தான் உங்களது கட்டை விரலை வைக்க வேண்டும். இப்படியாக ஏழு முறை அழுத்தம் கொடுத்து உங்களது கைகளை எடுக்க வேண்டும். லேசான அழுத்தம் தான். வேகம் கூடாது.

அடுத்ததாக உங்களது இரண்டு கைகளிலும் சின் முத்திரையை வைத்துக்கொள்ளுங்கள். உங்களது ஆள்காட்டி விரலும், கட்டை விரலையும் சேர்த்து வைத்து, மற்ற மூன்று விரல்களை விரித்தவாறு வைத்துக்கொள்ளவேண்டும்.

babaji

Step 1
உங்களது கண்களை முதலாவதாக முக்கால்பாகம், மூடிக்கொள்ள வேண்டும். கால்பகுதி கண்கள் மட்டுமே திறந்த நிலையில் இருக்க வேண்டும். கண்களின் கருவிழி மேல் நோக்கியவாறு இருக்க வேண்டும். உங்களது கருவிழி மூக்கை பார்க்கக்கூடாது. தரையையும் நோக்கக் கூடாது. வானத்தை நோக்கியபடி தான் இருக்க வேண்டும். 20 வினாடிகள், அதாவது 20 செகண்ட்ஸ் இதே நிலையில் இருக்க வேண்டும். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும் பயிற்சி செய்யச் செய்ய சுலபமாகிவிடும்.

Step 2
அதன் பின்பு மெதுவாக கண்களை திறந்துவிட வேண்டும். உங்களது கருவிழிகளை மேல் நோக்கியவாறு பார்த்து, கண்கள் திறக்கும் படியே இருக்க வேண்டும். (கண்களை மூடக்கூடாது. உங்களது விழி திறந்த படி, கருவிழி மேல் பார்த்தவாறு.) இதே போல் 20 வினாடிகள் இருக்க வேண்டும். அதாவது 20 செகண்ட்ஸ்.

eyes-closed

Step 3
அதன் பின்பு உங்களது கண்களை சாதாரணமான நிலையில் வைத்துவிட்டு, கண்களை மூடி, உங்களது இரு உள்ளங்கைகளாலும், உங்களது கண்களை மூடிக் கொள்ளுங்கள். 10 வினாடிகள் கழித்து, கைகளை எடுத்து விடுங்கள்.

step 1, step 2, step 3 பயிற்சியை, இதே முறைப்படி இரண்டாவது முறை செய்ய வேண்டும். இப்படி கண்களில் பயிற்சி செய்யும் போது, உங்களது 2 கைகளிலும் கட்டாயமாக சின்முத்திரை இருக்க வேண்டும். மொத்தமாக இந்த பயிற்சியை செய்ய மூன்று நிமிடங்கள்தான் தேவைப்படும்.

yoga

பயிற்சி இவ்வளவு தான். இந்த பயிற்சியை காலை வேலையில் நீங்கள் மன அமைதியோடு இருக்கும் நேரத்தில் செய்வது மிகவும் நல்லது. மீண்டும் மதியம் ஒரு முறை, மாலை ஒரு முறை. ஒரு நாளைக்கு மூன்று முறை இந்த பயிற்சியை செய்யலாம்.

இந்த பயிற்சியை செய்து முடித்தவுடன் உங்கள் மனதில் இருக்கும் கோரிக்கைகளை மனதார நினைத்து இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள். தொடர்ச்சியான இந்த பயிற்சியின் மூலம் உங்கள் வாழ்க்கையில் நடக்க போகும் நல்லது கெட்டதுகளையும், உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் திறமையானது உங்களிடம் வரும் என்பது உண்மை. ஆனால் முறையான பயிற்சி அவசியம் தேவை.

Thiyanam

தொடர்ந்து 48 நாட்கள் இந்த பயிற்சியை செய்து வந்தால், சுலபமாக, தினந்தோறும் செய்யும் பழக்கத்தை நாம் பெற்றுவிடலாம். இப்பயிற்சியை உங்கள் ஆழ்மனதிற்குள் கொண்டு சென்று, உணர்வுபூர்வமாக செய்யும் பழக்கம் வரும்வரை தொடர்ந்து முயற்சி செய்து வந்தால், பயிற்சியில் முழுமையான வெற்றியை அடைய முடியும். உள் உணர்வை உங்களால் உணர முடியும். மனோ ஆற்றல் அதிகரிக்கும். மன உறுதி பிறக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இதையும் படிக்கலாமே
நீங்கள் கற்பனை செய்து வைத்திருக்கும் உங்கள் வாழ்க்கையை, நிஜத்திலும் வாழவேண்டும் என்று நினைக்கிறீர்களா? சக்தி சக்கர பயிற்சி!

இது போன்ற யோக முத்திரைகள் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Thiyanam benefits Tamil. Thiyanam palangal. Thiyanam seivadhu eppadi. Yoga mudras Tamil.