இப்படி கூட எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு வைக்கலாமா? இந்த மாதிரி உங்க வீட்லயும் ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்களேன்.

ennai-katharikai
- Advertisement -

நாம ஒவ்வொருத்தரோட வீட்லயும், எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு ஒவ்வொரு மாதிரியாக வைப்போம். அந்த வரிசையில், ஒரு புதுவிதமான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பை எப்படி வைப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். காரசாரமான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு வைத்துவிட்டு, சுடச்சுட சாப்பாட்டில் போட்டு பிசைந்து சாப்பிட்டால், போதும். நாம் வடிக்கும் சாப்பாடு பத்தாது. அந்த அளவிற்கு வீட்ல இருக்கிறவங்க நல்லா சாப்பிடுவாங்க. சரி, இந்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு எப்படி வைப்பது பார்க்கலாமா?

ennai-kathrikai

Step 1:
முதலில் அடுப்பில் கடாயை வைத்து, 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, சீரகம் – 1 ஸ்பூன், சோம்பு – 1 ஸ்பூன் போட்டு, அடுத்தபடியாக, பெரிய வெங்காயம் – 2 பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், இஞ்சி – 4 துண்டு, பூண்டு – 5 பல், மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன், மல்லித்தூள் – 1/2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன், சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்கினால் போதும். அடுத்ததாக பழுத்த பெரிய தக்காளி – 2 பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

கடாயில் இருக்கும் வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கி விழுது போல், ஒரு தொக்கு போல் தயாரான பின்பு, இறுதியாக தேங்காய் துருவல் 2 ஸ்பூன் சேர்த்து, இந்தக் கலவையை நன்றாக ஆற வைத்துவிடுங்கள். அதன் பின்பாக ஒரு மிக்ஸி ஜாரில் இந்த கலவையை போட்டு மைய விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். இது அப்படியே இருக்கட்டும்.

bringal-cutting

Step 2:
மேலே குறிப்பிட்டுள்ள மசாலா பொருட்களுக்கு, சிறிய அளவிலான கத்திரிக்காய் 6 லிருந்து 7 எடுத்துக்கொள்ளலாம். கத்திரிக்காயை, நன்றாக கழுவி, மேலே இருக்கும் காம்புகளை மட்டும் வெட்டி எடுத்துவிட வேண்டும். அதன்பின் கத்திரிகையை நான்கு துண்டுகளாக வெட்ட வேண்டும். கத்திரிக்காய் கொத்தாக இருக்க வேண்டும். 4 துண்டு பிரிந்து வரக்கூடாது. அனேகமாக எண்ணெய் கத்திரிக்காய்க்கு கத்தரிக்காய் வெட்டுவது நாம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் அல்லவா.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து, அதில் 5 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். கொஞ்சம் நல்லெண்ணெய் அதிகமாகத்தான் தேவைப்படும். எண்ணெய் நன்றாக சூடான பின்பு, தயாராக வெட்டி வைத்திருக்கும் கத்தரிக்காய்களை அந்த எண்ணெயில் போட்டு வதக்கவேண்டும். அடுப்பை சிம்மில் வைத்து விடுங்கள். 10 நிமிடங்கள் வரை கத்தரிக்காய் அந்த நல்லெண்ணெயில், வதக்கி, வெந்து தோலெல்லாம் சுருங்கி, வரவேண்டும். தயாரான கத்திரிக்காயை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

bringal-cutting1

Step 3:
கத்திரிக்காய் வதக்கிய எண்ணெய் மீதம் இருக்கும். அதே எண்ணெயில், வெங்காய வடகம் அல்லது கடுகு போட்டு தாளித்து கொள்ளுங்கள். அடுத்தபடியாக 1/2 ஸ்பூன் வெந்தயம், கருவேப்பிலை – 1 கொத்து, சின்ன வெங்காயம் – 10 பல், சேர்த்து, பெருங்காயம் 1/2 ஸ்பூன் சேர்த்து, ஒரு நிமிடம் வரை வதக்க வேண்டும். இப்போது அரைத்து வைத்திருக்கும், விழுதை கடாயில் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வரை வதக்கி விடுங்கள்.

- Advertisement -

puli-karaisal

அடுத்தபடியாக ஒரு சிறிய எலுமிச்சைப்பழ அளவு புளி தண்ணீர் கரைசலை, கரைத்து கடாயில் சேர்த்து கொள்ளுங்கள். குழம்புக்கு தேவையான அளவு தண்ணீரையும் இந்த இடத்தில் ஊற்றிக் கொள்ளவேண்டும். குழம்பிற்கு தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொண்டு, குழம்பை கொதிக்க விடுங்கள். இந்த இடத்தில், உப்பு காரம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து, தேவைப்பட்டால் மிளகாய்த்தூளை, சேர்த்துக் கொள்ளலாம்.

ennai-kathrikai1

கடாயில் இருக்கும் குழம்பானது, முக்கால்வாசி தயாராகி வந்ததும், வதக்கி வைத்திருக்கும் கத்தரிக்காய்களை குழம்போடு சேர்த்து, ஒரு மூடி போட்டு, மிதமான தீயில் 10 நிமிடங்கள் வரை கத்தரிக்காய்களை வேக வைத்தால் போதும். சூப்பரான காரசாரமான, புதுவிதமான, எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு தயார். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் உங்களுடைய வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
முடி கொட்டாமல் இருக்க தலைக்கு எதுவும் தடவாதிங்க! 10 நாள் இத குடிச்சாலே போதும்!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -