எண்ணெய் தேய்த்து குளித்த பின்பு தெரியாமல் கூட இதை செய்து விடாதீர்கள்! எண்ணெய் தேய்த்து குளித்தால் ஆண், பெண் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன?

lakshmi-oil-bath
- Advertisement -

பொதுவாக தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் நிறையவே நன்மைகளை அடையலாம் என்பது நம் முன்னோர்கள் சொல்லி வந்த ஒரு நல்ல விஷயமாகும். ஆனால் இப்போதைய கால கட்டங்களில் தலைக்கு எண்ணெய் வைத்து ஊற வைத்து பின்னர் குளிக்க எல்லாம் யாருக்கும் நேரமில்லாமல் போய்விட்டது. இதனால் எல்லோருக்கும் ஒரு அளவுக்கு உடல் உஷ்ண பிரச்சனைகள் உண்டு. எண்ணெய் தேய்த்து குளித்தால் ஆண், பெண் செய்யக் கூடாத விஷயங்கள் என்னென்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிய இருக்கிறோம்.

உடலை எப்போதும் குளிர்ச்சியாக சரியான சீதோஷ்ண நிலையில் வைத்திருக்க வேண்டும். உஷ்ணம் அதிகரித்தால் உள்ளுறுப்புகள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, ஆரோக்கிய பிரச்சினையும் அதிகமாக தலை தூக்க ஆரம்பிக்கும். உடலின் உள்ளேயும், உடலின் வெளியேயும் ஒரே உஷ்ணம் இருக்க வேண்டும். உள்ளுக்குள் ஜில்லென்றும், வெளியில் சூடாகவும் இருக்கக் கூடாது.

- Advertisement -

பெண்கள் பொதுவாக செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமையில் தலைக்கு நல்லெண்ணெய் வைத்து ஊற வைத்து பின் தலையை சீயக்காய் போட்டு அலசினால் தலைமுடி பிரச்சனையும், சரும பிரச்சனைகள், உடல் உஷ்ண பிரச்சனையும் தீரும். இதனால் இயல்பாகவே பெண்களுக்கு உண்டாகும் எல்லா வியாதியும் குணமாகும். ஆண்களைப் பொருத்தவரை புதன் கிழமையும், சனிக்கிழமையும் தலைக்கு நல்லெண்ணெய் வைத்து ஊற வைத்து தேய்த்து குளிப்பது உடல் உஷ்ணத்தை தனித்து ஆண்மை பலப்படும்.

இன்று பெரும்பாலானோர் அமர்ந்த இடத்திலேயே அதிக நேரம் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். இப்படி ஒரு இடத்தில் அமர்ந்து நாள் முழுவதும் வேலை செய்பவர்கள் கட்டாயம் இது போல் வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் கண் தொடர்பான பிரச்சனைகள் வராது. மேலும் குழந்தைப் பேறு உண்டாவதிலிருக்கும் பிரச்சனையும் உண்டாகாமல் இருக்கும்.

- Advertisement -

அது போல சாதாரண நாட்களில் பெண்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்த பின்பு பிண்ணிக் கொண்டு விட வேண்டும். அதற்கு பதிலாக தலைவிரி கோலமாக இருக்கக்கூடாது. இப்படி இருந்தால் வீட்டில் தரித்திரம் ஏற்படும், செல்வ வளம் குறையும், மகாலட்சுமி ஆனவள் வெளியேறிவிடுவாள் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் நீங்கள் தலைக்கு குளிக்க செல்லும் முன்பு, தலைக்கு எண்ணெய் வைத்து இருந்தால் அந்த சமயத்தில் வீட்டில் இருக்கும் யாரையும் வழி அனுப்ப கூடாது. குடும்பத்தில் இருந்து யாராவது வெளியில் புறப்படும் பொழுது தலையில் எண்ணெய் வைத்துக் கொண்டு நிற்கக் கூடாது. இதனால் கெட்ட சகுனங்கள் உண்டாக வாய்ப்புகள் உண்டு எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.

மேலும் குடும்பத்தில் இருக்கும் யாராவது ஒருவர் வெளியூருக்கு புறப்படுகிறார்கள் என்றால் அன்றைய நாளும் பெண்கள் எண்ணெய் தேய்த்து தலைக்குக் குளிக்கக் கூடாது. ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு குடும்பத்தினர் செல்லும் பொழுது இது போன்ற காரியங்களை கூடுமான வரை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக கணவன் வெளியூர் செல்லும் பொழுது மனைவி தலைக்கு எண்ணெய் தேய்த்து தலை முழுக கூடாது. இது ஆன்மீக ரீதியாக அபசகுனமாக கருதப்படும். அது போல் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க போகிறீர்கள் என்றால், அந்த எண்ணெய் தலையுடன் வீட்டு வாசலில் நிற்க கூடாது.

- Advertisement -