உப்பு கரையை சுலபமாக நீக்கும் ஈனோ சால்ட்! இதை வைத்து பாத்ரூமை எப்படி சுத்தம் செய்வது? தெரிந்து கொள்வோமா?

bathroom
- Advertisement -

குளியலறையில் லேசாகப் படிந்திருக்கும் உப்பு கரையை நீக்குவதற்கு ஈனோ சால்ட்டை எப்படி பயன்படுத்தலாம் என்று தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை உங்களுடைய குளியலறையை இப்படி சுத்தம் செய்து கொண்டால் உப்பு கரை படியாமல் இருக்கும். நாள்பட்ட உப்பு கரையாக இருந்தால் அதை ஈனோ சால்ட் மூலம் உடனடியாக நீக்கி முடியாது.

bathroom-tiles-cleaning

முதலில் ஒரு சிறிய பவுல் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 1 பாக்கெட் ஈனோ சால்ட், 1 எலுமிச்சை பழத்தின் சாறு, வினிகர் இரண்டு ஸ்பூன், சேர்த்து இந்த மூன்று பொருட்களையும் நன்றாக கலந்து விட்டு, ஒரு ஸ்டீல் நாரில் இந்த கலவையை தொட்டு உங்களுடைய பாத்ரூம் கதவு, பாத்ரூம் தரையில் ஒட்டி வைத்திருக்கும் டைல்ஸ், சுவரில் ஒட்டி வைத்திருக்கும் டைல்ஸ் இவைகளை லேசாக தேய்த்து கொடுத்தாலே போதும். லேசாக ஒட்டியிருக்கும் உப்பு கரைகள் அத்தனையும் நீங்கிவிடும். உப்பு தண்ணீர் கரை பாத்ரூமில் படியாது. பாத்ரூமை சுலபமாக சுத்தம் செய்துவிடலாம்.

- Advertisement -

அடுத்தபடியாக, டாய்லட்டில் பயன்படுத்தும் ஃபிளஷில் உப்புத்தண்ணீர் படிந்திருந்தால், அந்த ஃபிளஷில் இருந்து தண்ணீர் வேகமாக வெளி வராமல் அடைத்துக் கொண்டிருக்கும். ஒரு சிறிய ஜங்கில் ஈனோ சால்ட் ஒரு பாக்கெட், இரண்டு ஸ்பூன் வினிகர், இரண்டு ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு ஊற்றி நன்றாக கலந்து விட்டு, ஃபிளஷ் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, இதில் ஃபிளஷை மூழ்க வைத்து விடுங்கள். இந்தத் தண்ணீரில் ஃபிளஷ் ஒருநாள் இரவு முழுவதும் அப்படியே ஊற வேண்டும். மறுநாள் காலை அதன் உள்ளே இருக்கும் அடைப்பு அனைத்தும் நீங்கி விடும். இப்போது ஃபிளஷ் செய்து பாருங்கள். தண்ணீர் ஃபோர்ஸாக வெளியாகும்.

toilet

இதேபோல் தான் உங்கள் வீட்டு சுவற்றில் இருக்கும் குழாய்களிலும் உப்பு தண்ணீர் அடைப்பு இருந்தால், மேலே சொன்னபடி ஈனோ சால்ட் வினிகர் லெமன் சேர்த்த கலவையை தயார் செய்து ஒரு கவரில் ஊற்றி, அந்த கவரை அப்படியே டேப்பில் ஒரு நாள் இரவு முழுவதும் கட்டி வைத்துவிடுங்கள். இப்படி செய்தால் டேப்பில் இருக்கும் அடைப்பு சரியாகிவிடும்.

- Advertisement -

உங்கள் வீட்டில் இருக்கும் பாத்ரூம் கதவுகளை நீங்கள் சுத்தம் செய்துவிட்டு, அந்த கதவில் லேசாக தேங்காய் எண்ணெயை தடவி வைத்துவிட வேண்டும். ஒரு சிறிய காட்டன் துணியில் தேங்காய் எண்ணெய்யை தொட்டு கதவு முழுவதும் தடவிக் கொள்ளலாம். இப்படி செய்தால் நீங்கள் குளிக்கின்ற தண்ணீர் கதவுகளின் மேலே படும்போது அந்த தண்ணீர் கதவுகளில் அவ்வளவு சீக்கிரத்தில் ஒட்டாது. கதவுகளில் உப்புத்தண்ணீர் படியாமல் பாதுகாப்பாக இருக்கும்.

cleaning5

இதேபோல சால்ட் வினிகர் லெமன் சேர்த்த கலவையை தொட்டு உங்கள் வீட்டு சமையலறையில் மேடையையும் 10 நாட்களுக்கு ஒரு முறை தேய்த்து கழுவி வந்தால், கருப்பு நிறத்தில் இருக்கும் அந்தக் சமையலறை மேடையில் உப்புக் கறை வெள்ளையாக படியாமல் இருக்கும். பாத்ரூமில் இருக்கும் குளிப்பதற்கு பயன்படுத்தும் பிளாஸ்டிக் பக்கெட், ஜக் இவைகளில் படிந்திருக்கும் உப்புக்கரையையும் இந்த கலவையானது நீக்கும். நாள்பட்ட உப்பு கரையை ஈனோ சால்ட் வைத்து நீக்க முடியாது. உப்பு கரை படியாமல் இருக்க, லேசாக இருக்கும் உப்பு கரையை நீக்க இந்த டிப்ஸ் உங்களுக்கு உபயோகமானதாக இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -