- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு திருஷ்டி

சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு திருஷ்டி

- Advertisement -

குழந்தைகளும் இருக்கும் மிகப்பெரிய குறும்புத்தனம் சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிப்பதுதான். இது தாய்மார்களுக்கு பெரும் சவாலாக அமையும். எவ்வளவு கஷ்டப்பட்டு புதிது புதிதாக சமைத்துக் கொடுத்தாலும் வாயை திறக்க மாட்டேன் எனும் குழந்தைகளை திருஷ்டிகள் நிறைய இருக்கும் என்று நம் முன்னோர்கள் கூட கேட்டிருப்போம். இவ்வாறான திருஷ்டிகளை கழிக்க எரி எண்ணெய் காய்ச்சி ஊத்துவது நல்ல பலனை கொடுக்கும் என்று நம்பிக்கை உண்டு. இதை எப்படி செய்வது? என்னும் சிறு தொகுப்பினை தான் இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் தொடர்ந்து காண இருக்கிறோம்.

‘கல்லடி பட்டாலும் கூட பட்டுவிடலாம் ஆனால் கண்ணடி படக்கூடாது’ என்று கூறுவார்கள். கொழு கொழுவென்று இருக்கும் குழந்தைகளை பார்த்தாலே எல்லோரின் கண்களுக்கு விருந்தாக தான் அமையும். நம்மை அறியாமல் திருஷ்டிப்படும் குழந்தைகள் இயல்பாகவே சாப்பிடுவதற்கு அடம்பிடிக்கிறது. சாப்பிடாமல் போவதற்கு வேறு பல காரணங்கள் இருந்தாலும் என்னவென்று நம்மால் கண்டுபிடிக்க முடியாதது தான் வருத்தமாக இருக்கும்.

- Advertisement -

இதற்கெல்லாம் தீர்வாக சில பகுதிகளில் இதுபோன்ற எரி எண்ணெய் கொண்டு திருஷ்டி கழிப்பது உண்டு. நீங்கள் சாப்பிட ஊட்டும் பொழுது குழந்தை சாப்பிடாமல் இருந்தாலும், இல்லை வாயில் வாங்கிக் கொண்டு அதை துப்பி விட்டாலும் உடனே அந்த சாப்பாடு தட்டை அரிசி அளக்கும் ஆழாக்கின் மீது வைக்க வேண்டும். இந்த ஆழாக்கை கொண்டு போய் தலைவாசலின் நடுவில் வையுங்கள்.

இப்போது அடுப்படிக்கு சென்று ஒரு நீளமாக இருக்கக்கூடிய கரண்டியை எடுத்துக் கொள்ளுங்கள். கடுகு தாளிக்க பயன்படுத்தும் கரண்டியை கூட எடுக்கலாம். இதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி புகை வர நன்கு காய்ச்ச வேண்டும். எண்ணெய் காய்ந்து நெருப்பு எண்ணெயை பிடித்துக் கொள்ளும், இந்த சமயத்தில் சட்டென அடுப்பை அணைத்துவிட்டு கையில் கரி துணியை பிடித்துக் கொண்டு பாதுகாப்பாக கரண்டியை எடுங்கள்.

- Advertisement -

எரியும் எண்ணெயை கொண்டு போய் அழகின் மீது வைத்துள்ள குழந்தையின் உணவின் மீது மூன்று முறை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்ற வேண்டும். நெருப்பு என்பதால் கவனமுடன் கையாளுங்கள். இவ்வாறு உணவின் மீது ஊற்றியதும் கையில் இருக்கும் கரண்டியில் இருக்கும் நெருப்பு அணைந்து விடும். இப்போது கரண்டியை குழந்தையை சுற்றி திருஷ்டி கழிப்பது போல மூன்று முறை வலது புறமும், இடது புறமும் ஆக சுற்றி கொண்டு போய் சிங்கில் போட்டு விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
கறி சுவையில் மீல்மேக்கர் 65 எளிதான செய்முறை

உணவின் மீது நீங்கள் ஊற்றிய எரி எண்ணெயால் புகை பரவும். இந்தப் புகையை குழந்தை முகர்ந்து பார்க்கும் படி செய்யுங்கள். அவ்வளவுதான் கடைசியாக எண்ணெயை நீக்கிய உணவு பகுதியில் இருந்து ஒரு சிறு துண்டை எடுத்து குழந்தைக்கு கொடுங்கள். இது போல திருஷ்டி கழிப்பதால் இனி குழந்தை அடம் பிடிக்காமல் சமத்தாக சாப்பிடும் என்று அக்கால நம்பிக்கையாக இருந்து வருகிறது. தஞ்சை, கும்பகோணம் போன்ற பகுதிகளில் உள்ள மக்கள் இதை பெரும்பாலும் கடைப்பிடிப்பது உண்டு. அடுத்த முறை குழந்தைக்கு உணவு புதிதாக தயாரித்து கொடுக்கும் பொழுது அடம்பிடிக்காமல் சாப்பிடும். நீங்களும் இதே போல ஒருமுறை திருஷ்டி கழித்து பாருங்கள், உங்கள் குழந்தையும் இனி சமத்தாக சாப்பிட்டு விடும்.

சற்று முன்