அசைவ சுவையை மிஞ்சக் கூடிய வகையில் சில சைவ உணவு வகைகள் பட்டியலில் மீல் மேக்கரும் ஒன்று. சோயா சங்ஸ் எனப்படும் மீல் மேக்கரை கொண்டு இந்த வகையில் 65 செய்து சாப்பிட்டால் கறி சுவை கூட தோற்றுப் போய்விடும். அந்த அளவிற்கு மேலே மொறுமொறுவென்று, உள்ளே ஜூசியாக ரொம்ப டேஸ்ட்டியாக இருக்கக்கூடிய இந்த மீல்மேக்கர் 65 ரெசிபி எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் தொடர்ந்து கற்றுக் கொள்ள இருக்கிறோம்.
மீல்மேக்கர் 65 செய்ய தேவையான பொருட்கள்:
- மீல் மேக்கர் – 100 கிராம்
- சில்லி சிக்கன் பவுடர் – ஒரு ஸ்பூன்
- தனி மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- அரிசி மாவு – இரண்டு ஸ்பூன்
- கடலை மாவு – ஒன்றரை ஸ்பூன்
- கான்பிளவர் மாவு – ஒரு ஸ்பூன்
- சமையல் எண்ணெய் – தேவையான அளவு
மீல்மேக்கர் 65 செய்முறை விளக்கம்:
மீல் மேக்கர் 65 செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 100 கிராம் அளவிற்கு பெரிய அளவிலான மீல் மேக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். கொதிக்கும் சுடுதண்ணீர் ஊற்றி ஒரு ஐந்து நிமிடம் நன்கு ஊற விடுங்கள். பிறகு வடிகட்டி விட்டு ஆறியதும் நன்கு தண்ணீரை இறுக பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். பிழிந்து எடுத்த மீல் மேக்கருடன் இப்பொழுது ஒரு ஸ்பூன் சில்லி சிக்கன் தூள், ஒரு ஸ்பூன் தனி மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கொஞ்சம் போல உப்பு போட்டு நன்கு எல்லா இடங்களிலும் படும்படி கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு அப்படியே ஒரு மூடி போட்டு பத்து நிமிடம் ஊற வேண்டும். பத்து நிமிடம் கழித்து அரிசி மாவு, கடலை மாவு, கான்பிளவர் மாவு மேற்கூறிய அளவின்படி சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். அவ்வளவுதான் இப்பொழுது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கலந்து வைத்துள்ள மீல் மேக்கர் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து எண்ணெயில் போட்டு நன்கு பொரிய விட வேண்டும்.
மிதமான தீயில் அடுப்பை வைத்து உள்ளேயும் நன்கு வேகும்படி சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள். எல்லா மீல் மேக்கர்களையும் லேசாக திருப்பிப் போட்டு ஒன்று போல சிவக்க வறுபட்டதும், அந்த எண்ணெயிலேயே கொஞ்சம் கருவேப்பிலையை போடுங்கள். ரெண்டு பச்சை மிளகாயை காம்பு நீக்கி விட்டு அப்படியே போடுங்கள். இது நல்ல ஒரு பிளேவர் கொடுக்கும். கருவேப்பிலை, பச்சை மிளகாய் பொரிந்ததும் சிறிய ஜர்னியில் வடித்து எடுங்கள்.
இதையும் படிக்கலாமே:
சனி மகா பிரதோஷம் நிலை வாசல் பரிகாரம்
அவ்வளவுதாங்க மணக்க மணக்க மீல் மேக்கர் 65 சைவத்திலேயே கறி சுவையை மிஞ்சும் அற்புதமான சுவையில் இப்பொழுது தயார்! நீங்களும் இதே போல செஞ்சு கொடுத்து பாருங்க எல்லோருமே உங்களை நிச்சயம் பாராட்டுவாங்க. எல்லா வகையான சாதத்துக்கும் தொட்டுக்கொள்ள இது ரொம்பவே நல்லதொரு காம்பினேஷன் ஆக இருக்கும். ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆகவும் சாப்பிடலாம்.