- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஉங்கள் கஷ்டங்கள் தீர, இந்த ஒரே 1 பொருளை மட்டும் எறும்புக்கு தானமாக கொடுத்தால் போதும்.

உங்கள் கஷ்டங்கள் தீர, இந்த ஒரே 1 பொருளை மட்டும் எறும்புக்கு தானமாக கொடுத்தால் போதும்.

- Advertisement -

மனிதர்கள் பல பிரச்சனைகளையும், சவால்களையும், சமாளித்து தான் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். நாம் இவ்வளவு பாடுபட்டு உழைப்பதே கொஞ்சமாவது நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காகத் தான். ஆனால் சிலருக்கு என்னதான் கோவில், குளம் என்று சென்று வந்தாலும், பரிகாரங்களை செய்து வந்தாலும், வீட்டில் கஷ்ட நிலை என்பது மாறவே மாறாது. ஏன் சிலர் உண்ணும் உணவுக்கு கூட கஷ்டப்படுவார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் உள்ளவர்கள் பெரிய அளவில் யாருக்கும் தான, தர்ம காரியங்களோ, கோவில் புண்ணிய காரியங்களுக்கோ, ஏதாவது நன்கொடை தருவது என்பதெல்லாம் இயலாத காரியம். அப்படியானால் இப்படிப்பட்டவர்களின் கஷ்டங்கள் தீர வழியே இல்லையா? ஏன் இல்லை, இருக்கிறது.

தானம் என்பது மனிதனுக்கு மனிதன் கொடுத்து கொள்வது மட்டுமல்ல, நாம் வாழும் பூமியில் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்கின்றன. இதில் கண்ணுக்குத் தெரிபவை, தெரியாதவை, என்று இறைவன் படைப்பில் அத்தனை உயிரினங்களும் இந்த பூமியில் வாழ்வதற்காகவே படைக்கப்பட்டவை.

- Advertisement -

அப்படி உள்ள சிறு, சிறு உயிர்கள் குறிப்பாக எறும்புகளுக்கு நீங்கள் இந்த வெல்ல தானத்தை செய்தாலே போதும். உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் நீரில் கரையும் வெல்லம் போல் கரைந்து காணாமல் போய்விடும். இதற்காக நீங்கள் பெரிதாக எந்த ஒரு பூஜையும் செய்ய வேண்டியதில்லை. இது மிக மிக எளிமையான ஒரு பரிகாரம் தான்.

தினமும் இரவு உறங்க செல்லும் முன் உங்கள் வீட்டின் நிலை வாசலுக்கு வெளியே வந்து, உங்களுக்கு வலது புறமாக சிறிதளவு வெல்லத்தை தூவி விட்டு, பின் நிலக்கதவை சாத்திவிட்டு உறங்க செல்லுங்கள். அதன்பிறகு மறுநாள் காலை தான் நிலக்கதவை திறக்க வேண்டும். எனவே அனைத்து வேலைகளையும் முடித்து உறங்க செல்வதற்கு முன் இதை செய்தால் போதும். கண்டிப்பாக காலையில் நீங்கள் பார்க்கும் போது எறும்பு அல்லது ஏதாவது ஒரு உயிரினம் நீங்கள் இட்ட இந்த வெல்லத்தை நிச்சயம் உண்டு இருக்கும். அப்படி இல்லை என்றாலும் கவலை கொள்ள வேண்டாம். நீங்கள் எப்போதும் போல் வாசல் பெருகி தெளித்து கோலமிட்டு உங்களின் அன்றாட பணிகளை தொடங்கலாம்.

- Advertisement -

இதுபோல நீங்கள் கோவில்களுக்கு செல்லும்போதும் கையில் கொஞ்சம் வெல்லத்தை எடுத்துக் கொண்டு செல்லுங்கள். கோவில் பிரகாரத்தில் எங்காவது ஒரு மூலையில் இந்த வெல்லத்தை வைத்து விட்டு வாருங்கள். ஏனெனில் கோவிலில் இருக்கும் எறும்பு போன்ற சிறு சிறு உயிர்கள் இது போன்று நாம் இடும் உணவை நம்பி தான் உயிர் வாழ்கின்றன. அது மட்டுமில்லாமல் இதில் குறிப்பிட்டு எறும்பை கூறுவதற்கான காரணம், எறும்பு தான் உண்ணும் உணவை இட்டவர் யாரோ அவருக்காக ஒரு நிமிடம் இறைவனை நோக்கி தவம் செய்யும் என்கிற ஒரு ஐதீகம் உண்டு. எனவே இவைகளுக்கு நீங்கள் இப்படி வெல்லம் வைக்கும் போது உங்களின் வாழ்வு சிறக்க, உங்களின் பிரச்சனைகள் தீர எறும்புகள் உங்களுக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்ளும்.

அதனால் தான் இந்த வெல்ல பரிகாரத்தை எறும்புகளுக்கு இட சொல்லி இருக்கிறார்கள். இதை தினமும் செய்தால் நல்லது, அல்லது வாரத்திற்கு இரண்டு முறை, முடியாதவர்கள் மாதத்திற்கு ஒரு முறையாவது கட்டாயம் இதுபோன்று செய்து வாருங்கள். அதன் பிறகு உங்கள் கஷ்டங்கள் போன இடம் எங்கே என்று உங்களுக்கே தெரியாமல் போகும்.

சற்று முன்