எவ்வளவு பெரிய எதிரியாக இருந்தாலும் ஒரே நாளில் அந்த எதிரியை, நம் வழிக்கு கொண்டு வர முடியும். இந்த சூட்சும பரிகாரத்தை செய்து பாருங்கள்.

venkadugu-amman

ஒரு மனிதனால் கட்டாயமாக எதிரி தொல்லை இல்லாமல் வாழ முடியாது. நட்பு வட்டத்தில் எதிரி, வேலை செய்யக்கூடிய இடத்தில் எதிரி, அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் எதிரி, என்று எதிரிகளின் பட்டியலை அடிக்கிக் கொண்டே போகலாம். பலம் உள்ளவர்கள், பலம் இல்லாதவர்களை கஷ்டப்படுத்துவதும் தவறுதான். நாம் ஒருவரிடம் போட்டி போட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது என்றால், நமக்கு இணையான ஒருவரிடம் தான் போட்டி போட வேண்டும். நம்மை விட தகுதியில் உயர்ந்தவர்களிடம் போட்டிப் போட்டால் கூட தவறு கிடையாது. நம்மைவிட தகுதி குறைந்தவர்களிடம், நம்முடைய வலிமையை காட்டுவது என்பது மிகமிக கோழைத்தனம். இப்படி உங்களுக்கு எந்த பிரச்சனை இருந்தாலும் சரி, அதை சரிசெய்ய இந்த ஒரு பரிகாரத்தை செய்து பாருங்கள்.

ethiri-astro

எதிரிகளை, பகைவர்களை, துஷ்ட சக்திகளை கெட்ட சக்திகளை அடித்து நொறுக்குவதில் எப்போதுமே உக்கிர தெய்வங்களுக்கு தான் முதலிடம். அந்த வரிசையில் நாம் மகிஷாசுரமர்தினியை மனதில் நினைத்து இந்த வழிபாட்டை செய்யப்போகின்றோம். பொதுவாகவே வென்கடுகுக்கு எதிரிகளையும், கெட்ட சக்திகளையும் வீட்டில் இருந்து அடித்து விரட்டக் கூடிய சக்தி அதிகமாக உள்ளது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான்.

பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள். கொஞ்சம் வெண்கடுகை வாங்கி ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு பூஜை அறையில் வைத்து விட்டு, மகிஷாசுரமர்தினியை மனதார வேண்டிக்கொண்டு, உங்கள் எதிரி உங்கள் பக்கம் தலை வைத்து படுக்கக்கூடாது. உங்களை விட்டு தூர விலகி செல்ல வேண்டும் என்ற பிரார்த்தனையை வைத்து, அந்த கிண்ணத்தில் இருக்கும் வெண்கடுகை எடுத்து உங்களுடைய வீட்டில் நான்கு மூலைகளிலும் தூவி விடவேண்டும். தூவும் போது எதிரியுடைய பெயரைச் சொல்லி தூவி விடுங்கள்.

venkadugu

24 மணி நேரம் அந்த வெண்கடுகு அப்படியே உங்களுடைய வீட்டில் இருக்கட்டும். அதன் பின்பு ஒரு துடைப்பத்தை எடுத்து கூட்டி எல்லாவற்றையும் வாரி, ஒரு கவரில் கொட்டி உங்கள் வீட்டில் இருந்து கொஞ்சம் தூரமாக கால் படாத இடத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கொண்டுபோய் போட்டுவிடுங்கள்.

இதே போல மூன்று வாரம் ஞாயிற்றுக் கிழமைகள் செய்து வரும் பட்சத்தில், உங்களுடைய எதிரி தொல்லையிலிருந்து விடுபட்டு விடலாம். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலமாக உங்களுடைய எதிரிக்கோ, எதிரியின் குடும்பத்திற்க்கோ, உயிருக்கு எந்த ஆபத்தும் வராது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

mahishasuramarthini

இதோடு சேர்த்து  செவ்வாய்க் கிழமைகளில் துர்க்கை அம்மன் வழிபாடு செய்து வருவது மிகவும் நல்லது. வாழ்க்கையில் எதிரிகளால் ஏற்படக்கூடிய தடைகள் விலகி, வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மன் வழிபாடு நல்ல பலன்களைக் கொடுக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.