எதிரிகள் தொல்லை நீங்க மந்திரம்

durai manthiram
- Advertisement -

ஒவ்வொரு மனிதனையும் தினம் தினம் பாடாய்படுத்தும் பிரச்சனைகள் பல இருந்தாலும் அதில் முக்கியமானதாக சொல்லப்படுவது இந்த எதிரிகள் தொல்லை தான். நாமே எவ்வளவு கஷ்டப்பட்டு துன்பப்பட்டு ஒவ்வொரு படியாக முன்னேறிக் கொண்டிருப்போம். அந்த முன்னேற்றத்தை தடுப்பதற்காகவே எங்கிருந்து தான் வருவார்களோ தெரியாது.

இது ஒரு புறம் இருந்தால் இந்த கண் திருஷ்டியும் கெட்ட எண்ணங்களும் இதைவிட கொடுமை. இவர்களாவது ஏதாவது செய்ய நேரம் எடுத்துக் கொள்வார்கள். இந்த கண் திருஷ்டியும் கெட்ட எண்ணங்களும் உடனே நம்மை ஒன்றும் இல்லாமல் செய்து விடும். இவற்றிலிருந்து வெளிவரக் கூடிய எளிமையான ஒரு மந்திர முறையை தான் மந்திரம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

எதிரி தொல்லை கண் திருஷ்டி நீங்க மந்திரம்

இந்த எதிரி தொல்லையும் கண் திருஷ்டியும் நிச்சயம் நம்மை ஒரு வழி செய்யாமல் விடாது. எதிரி தொல்லை நம் வேலைகளை நிம்மதியாக செய்ய விடாது நம்மை முன்னேறவும் விடாது. கண் திருஷ்டியானது நாம் ஏதோ கொஞ்சம் நன்றாக இருந்தால் போதும். அவர்களின் பார்வை நம்மை அடுத்த கட்டத்தை நோக்கி நகர விடாமல் செய்து விடும் . இவற்றை சரி செய்ய எளிய இந்த வழிமுறைகளை பின்பற்றலாம்.

இதற்கு நாட்டு மருந்து கடையில் வெண்கடுகு கிடைக்கும் அதை வாங்கிக் கொள்ளுங்கள். அதை கையில் கொஞ்சம் எடுத்து உங்கள் நிலைவாசலுக்கு வெளியே வலது புறமும் இடது புறமும் கொஞ்சமாக வெண்கடுகை வைக்க வேண்டும். போது ஓம் தும் துர்காய நமஹ என்ற மந்திரத்தை சொல்லியபடி வைக்க வேண்டும் இது உங்கள் வீட்டை தீய சக்திகள் இருந்தும் கண் திருஷ்டியில் இருந்தும் காக்கும்.

- Advertisement -

அடுத்து பூஜை அறையில் ஒரு வெற்றிலையை வைத்து அதன் மேல் இந்த வெண்கடுகை வையுங்கள். அந்த வெண்கடுக்கிற்கு மேல் கொஞ்சம் குங்குமத்தையும் வைக்க வேண்டும். இப்படி குங்குமம் வைக்கும் போது ஓம் துர்காய நமக என்ற மந்திரத்தை சொல்லுங்கள். அதன் பிறகு வெற்றிலையுடன் இதை ஒரு பொட்டலமாக கட்டி உங்கள் பாக்கெட் வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த வெற்றிலை பொட்டலத்துடன் நீங்கள் வெளியில் எங்கு செல்வதானாலும் செல்லுங்கள். இது உங்களை பாதுகாக்கும் ஒரு கவசமாக இருக்கும். அது மட்டும் இன்றி தடைகளையும் தகர்த்தெறியும். இதே போல் வெற்றிலை வைத்து மஞ்சள் அட்சதையை வைத்தும் வழிபடலாம். மஞ்சள் அட்சதையை வைக்கும் போது ஓம் நரசிங்காய நமக என்ற நாமத்தை சொல்லுங்கள்.

- Advertisement -

இந்த வழிப்பாட்டு முறைகளுடன் ஆலயத்திற்கு செல்லும் பொழுதும் ஆலயத்தில் துவார பாலகர்கள் சிலை இருக்கும் அவர்களிடம் மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். எந்த ஒரு இடத்திலும் நின்று காக்கக் கூடிய தெய்வங்களை நாம் வணங்கும் போது நம்முடைய எதிரி தொல்லைகள் அனைத்தும் நீங்கும்.

இதையும் படிக்கலாமே: செல்வம் பெருக ஏகாதசி வழிபாடு

ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் எதிரி தொல்லை நீங்கவும் கண்திருஷ்டி தீய சக்திகள் விலகவும் சொல்லப்பட்டுள்ளது. இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்தால் நல்ல பலனை பெறலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -