பில்லி சூனியம் ஏவல் போன்ற எவ்வளவு பெரிய எதிர்மறை ஆற்றலாக இருந்தாலும், அதை 1 நாளில் வீழ்த்தி விட முடியும். இந்த வழிபாட்டை செய்து பாருங்கள்!

amman

நம்முடைய வாழ்க்கையில் கஷ்டங்கள் நேருக்கு நேர் வந்தால் அதை சமாளித்து விடலாம். எதிரிகள் நம் கண் முன்னே வந்து நின்று, எதிரே சண்டை போட்டாலும் பரவாயில்லை அதையும் சமாளித்து கொள்ளலாம். ஆனால் சில எதிரிகள் நம்முடைய முதுகுக்குப் பின்னால் குத்தி விடுகிறார்கள். பொதுவாகவே நம்முடன் இருக்கும் நண்பர்களாக இருந்தாலும் சரி, அல்லது நம்முடைய உறவினர்களாக இருந்தாலும் சரி, நம்மை விட அவர்கள் அதிவேகமாக, அதி விரைவாக முன்னேற்றம் அடையும் போது கூடவே இருக்கும் நமக்கு நிச்சயமாக லேசாக ஒரு பொறாமை குணம் வருவது இயற்கை தான். பெரும்பாலும் இது எல்லோருக்கும் இருக்கும். அந்த பொறாமை குணமானது, போட்டியாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, பொறாமை குணமே படிப்படியாக மேலே உயர்ந்து, அந்த பொறாமை கொஞ்சம் கொஞ்சமாக பகையாக மாறி விடவே கூடாது.

enemy1

அந்தப் பகை காலப்போக்கில் ஏவல் பில்லி சூனியம் வைக்கும் அளவிற்கு முத்தி போய்விடும். ஒருவன் தன்னை விட வாழ்க்கையில், அதி விரைவாக முன்னேற்றம் அடைகின்றான் என்றால், அவனை நாம் போட்டி போட்டு தான் வெல்ல வேண்டுமே தவிர, சூழ்ச்சி செய்து என்னாளும் வெல்ல வேண்டும் என்று நினைக்கவே கூடாது. நீங்கள் இப்படிப்பட்ட கண்ணுக்குத் தெரியாத ஏதேனும் எதிர்மறை ஆற்றலின் மூலம் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால், இந்த வழிபாட்டை மேற்கொண்டு பலனை அடையலாம் அது, என்ன வழிபாடு எப்படி செய்வது பார்த்து விடலாமா?

கண்ணுக்குத்தெரியாத எதிர்மறை ஆற்றலை அதிவிரைவாக வீழ்த்த கூடிய சக்தி என்பது சூலாயுதத்திற்கு  உண்டு. அம்மன் கைகளில் இருக்கும் அல்லவா? சூலம் அதுதான். பொதுவாகவே அம்மன் கோவில்களுக்கு சென்று அம்மன் கோவில் வாசலில் இருக்கக்கூடிய சூலத்தில் ஒரு எலுமிச்சை பழத்தை குத்தி, நமக்கு இருக்கும் எதிரிகளின் தொல்லை விலக வேண்டும் என்று வேண்டிக் கொண்டாலே போதும். எதிரி பிரச்சனையில் இருந்து நாம் விடுபட்டு விடலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

enemy

ஆனால், உங்களுடைய பிரச்சனை எதிரியை எல்லாம் தாண்டி, ஏவல் பில்லி சூனியம் வைக்கும் அளவிற்கு போய் இருந்தால் என்ன செய்யலாம். சிறிய அளவு சூலம் ஒன்றை வாங்கி உங்களுடைய வீட்டு பூஜையறையில் வைத்துக் கொள்ளுங்கள். புதியதாக வாங்கிய சூலத்தை முதலில் பன்னீரால் கழுவி விட வேண்டும். அதன் பின்பு சந்தன அபிஷேகம் செய்ய வேண்டும். அதன்பின்பு தண்ணீரைக் கொண்டு அபிஷேகம் செய்து அந்த சூலத்தை உங்களுடைய வீட்டு பூஜை அறையில் பிரதிஷ்டை செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு எலுமிச்சம் பழத்தின் மேல் அந்த சூலத்தை சொருகி, உங்கள் வீட்டு பூஜை அறையில் நிற்க வைக்க வேண்டும். தொடர்ந்து 11 நாட்கள் அந்த சூலத்திற்கு முதலில் பால் அபிஷேகம் செய்யவேண்டும் இரண்டாவதாக, குங்குமத்தை தண்ணீரில் கரைத்து அபிஷேகம் செய்து வர வேண்டும். அபிஷேகம் செய்த சூலத்தை மீண்டும் தண்ணீரை கொண்டு கழுவி விடக்கூடாது. சிவப்பு நிறத்தில் இருக்கும் அந்த சூலத்தை அப்படியே பூஜை அறையில் வைத்து, உங்களுக்கு இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல் பிரச்சனைகள் முழுமையாக விலக வேண்டும் என்று எந்த அம்பாளை வேண்டிக்கொள்ளலாம். துர்க்கை, அங்காள பரமேஸ்வரி, காளி இப்படியாக கோபமாக இருக்கக்கூடிய எந்த அம்மனை நினைத்தும், ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து அந்த சூலாயுதத்தை நடுவே குத்தி வேண்டிக் கொள்ள வேண்டும்.

sulam

நீங்கள் அடுத்த நாள் பூஜையை தொடங்கும் போது அந்த சூலத்திற்கு பாலபிஷேகம், தண்ணீர் அபிஷேகம் செய்து, அதன் பின்பு குங்குமத்தால் அபிஷேகம் செய்து மீண்டும் ஒரு எலுமிச்சம் பழத்தை இந்த சூலாயுதத்தில் மீண்டும் சொருகி, பழைய எலுமிச்சம்பழத்தை கால் படாத இடத்தில் தூரப் போட்டு விட வேண்டும்.

kungumam

இப்படியாக குங்குமம் அபிஷேகம் செய்த அந்த சூலத்தை, பதினோராவது நாள் பூஜை முடிந்ததும், கொண்டுபோய் அம்மன் கோவில்களில் இருக்கும் பாம்புப் புற்றின் அருகில் வைத்துவிட்டு வந்து விடுங்கள். உங்களை பிடித்த, உங்கள் வீட்டை பிடித்த எப்பேர்பட்ட, எவ்வளவு பெரிய எதிர்மறை ஆற்றலாக இருந்தாலும் சரி, அது உங்களை விட்டு விலகிவிடும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. நம்பிக்கை உள்ளவர்கள் தாராளமாக இந்த வழிபாட்டை முயற்சி செய்து பார்க்கலாம். நிச்சயம் நல்லதே நடக்கும்.