- Advertisement -

யோகம் தரும் மந்திரம்

- Advertisement -

பலருக்கும் ஒரு பயம் இருக்கும், இந்த ஜூன் மாதம் நமக்கு நன்மைகள் ஏற்படுமா? அதிலும் இந்த ஆண்டு பிறந்த மாதம் அனைத்திலும் தோல்வியை சந்தித்தவர்களுக்கு இந்த ஜூன் மாதத்தை பற்றி மிகவும் பயம் இருக்கும். அத்தகைய பயத்தை போக்கவும், ஜூன் மாதத்தில் வரும் ஒவ்வொரு நாளும் யோகமாக அமைய இருக்கும் சிறந்த ஒரு மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

ஜூன் மாதம் யோகம் தரும் மந்திரம்

இந்த மந்திரத்தை 1 இருந்து 30 தேதிக்குள் சொல்லி முடிக்க வேண்டும். இதை உங்கள் சவுரியத்திற்கு ஏற்றவாறு எப்பொழுது வேண்டுமானாலும் சொல்லலாம். எமகண்டம் மற்றும் ராகு காலம் தவற எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சொல்லலாம். இதனை நடந்து கொண்டு அல்லது வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது சொல்லக்கூடாது. ஒரு இடத்தில் அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்திக் கொண்டு சொல்ல வேண்டும்.

- Advertisement -

தரையில் ஒரு விரிப்பை விரித்துக்கொண்டு வடக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து கொண்டு இந்த மந்திரத்தை கூற வேண்டும். இவ்வாறு இதை அனைத்தையும் பின்பற்றி அந்த மந்திரத்தை சொல்லிவர, இந்த ஜூன் மாதம் உங்களுக்கு யோகமான மாதமாக அமையும். நீங்கள் தொடங்கும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறும். நீங்கள் செய்யக்கூடிய செயலுக்கு முழுமையான இறையருள் கிடைக்கும்.

“ஓம் சிவ சம்போ ஓம் சிவ சம்போ”

என்ற இந்த மந்திரத்தை 3333 முறை இந்த ஜூன் மாதத்தில் மட்டும் சொல்லி வர உங்களுக்கு யோகம் கூடும் என கூறப்படுகிறது.
இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும் என்று கூறிவிட்டார்கள், கூறினால் என்ன நடக்கும் என்று சொல்லிவிட்டார்கள், ஆனாலும் இந்த மந்திரத்தின் முழு பொருள் தெரியாமல் எப்படி ஒருவரால் இதை நம்பி கூற முடியும்? எனவே இப்பொழுது அந்த மந்திரத்திற்கான பொருளை தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

சம்போ என்ற வார்த்தையிலேயே நமக்கு ஒரு புது சக்தி கிடைக்கிறது. அதிலும் சிவ சம்போ என்ற வார்த்தையை உச்சரிக்கும் போது மன அமைதி மற்றும் மன நிம்மதி கிடைக்கிறது. இது சிவபெருமானின் மந்திரம். சிவபெருமான் அனைவருக்கும் ஆற்றலை தரக்கூடியவர். எனவே அவரின் நாமத்தை நாம் உச்சரிக்கும் போது நமக்கும் ஆற்றல் கிடைக்கும். சிவ சம்போ என்று கூறிக்கொண்டு சிறிது நேரம் தியானம் செய்வதன் மூலம் நம் உடல் சக்தி வாய்ந்த ஆற்றலை வெளியிடுகிறது.

இதையும் படிக்கலாமே: பணம் சேர குரு ஹோரையில் செய்ய வேண்டியது

மந்திரத்தின் சக்தியை உணர்ந்தவர்கள் அதன் மேல் முழு நம்பிக்கை வைத்திருப்பவர்கள் முழு மனதுடன் இந்த மந்திரத்தை உச்சரித்து இந்த ஜூன் மாதத்தை மிகவும் சிறப்பு மிகுந்த மாதமாக மாற்றி வாழ்வில் எல்லா யோகங்களையும் பெறவும்.

சற்று முன்