கண்ணுக்குத் தெரிந்த, கண்ணுக்குத் தெரியாத எதிரிகளையும் சுலபமாக சமாளிக்க இத மட்டும் செஞ்சா போதும். கண்ணுக்கு தெரியாத பாதுகாப்பு வட்டம் எப்போதுமே உங்களை சுற்றி இருக்கும்.

kalli
- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றம் அடையும் போது, நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள சில வழிபாட்டு முறைகளை நாம் மேற்கொண்டு தான் ஆக வேண்டும். ஒருவருக்கு சாதாரணமாக, படிப்படியான முன்னேற்றம் இருந்தாலே, அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடமிருந்தும், உங்களுடைய உறவினர்களின் கண் திருஷ்டியில் இருந்தும் பாதுகாப்பைத் தேடிக் கொள்வது மிக அவசியம். இப்படி இருக்க, சில பேருக்கு முன்னேற்றம் என்பது அதி விரைவாக இருக்கும். அதி விரிவான முன்னேற்றத்தை எவரொருவர் அடைகிறாரோ, அவருக்கு அதேசமயம், அதிவிரைவான கஷ்டங்களும் பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது என்பது தான் அர்த்தம்.

chandika-devi-amman1

அந்த கஷ்டமானது உங்களுடைய கண்ணுக்கு தெரிந்த, கண்ணுக்கு தெரியாத எதிரிகளின் மூலமும் வரலாம். கண்ணுக்கு தெரியாத எதிர்மறை ஆற்றல், கண்திருஷ்டி போன்ற பிரச்சினைகள் மூலமாகவும் வரலாம். சில சமயங்களில், சீக்கிரமே பணத்தை சம்பாதிப்பவர்களது வீட்டின், எதிர்பாராத உயிரிழப்பு ஏற்படுவதை கூட நாம் கண்டிருப்போம் அல்லவா? பெரிய பெரிய பணக்காரர்களும் கோடீஸ்வரர்களும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சில தந்திர வழிகளை பின்பற்றி கொண்டுதான் வருகிறார்கள். ஆனால் ரகசியமான முறையில்.

- Advertisement -

சிலருக்கு இது தெரிவதில்லை. உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால், இந்த சுலபமான பரிகாரத்தை வீட்டிலிருந்தபடியே செய்யலாம். எதிரிகளிடமிருந்து தப்பித்துக்கொள்ள உக்கிர தெய்வத்தின் வழிபாடு தான் சிறந்தது. பத்ரகாளி அம்மன், அங்காள பரமேஸ்வரி, வனபத்ரகாளி, மகிஷாசுரமர்தினி போன்ற தெய்வங்களை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

Varahi amman

அமாவாசை தினத்தன்று இந்த பரிகாரத்தை செய்யுங்கள். இந்த பரிகாரத்திற்க்கு தேவையான பொருட்கள் ஒரு மண் அகல்விளக்கு, சதுர வடிவில் இருக்கும் கருப்பு நிறத் துணி, சிறிய சிறிய அளவில் இருக்கும் வேப்பங்குச்சி, கற்பூரம் ஒரு துண்டு, வேப்பெண்ணை ஒரு ஸ்பூன் அளவு இது போதும். இதை உங்கள் வீட்டு நிலை வாசற் படிக்கு வெளியே செய்ய வேண்டும். காம்பவுண்ட் சுவருக்கு உள் பக்கம் செய்தால் தவறு கிடையாது. ஆனால் நிலவடிகும் உள்ளே செய்யக்கூடாது. (பச்சை வேப்ப குச்சிகளை கொஞ்சமாக வெயிலில் போட்டு உலர்த்தி எடுத்துக் கொள்ளுங்கள்.)

- Advertisement -

வீட்டிற்குள் செய்யக்கூடாத பரிகாரம் என்பதால் இதை கண்டு யாரும் பயப்பட வேண்டாம். எதிர்மறை ஆற்றலை விரட்டுவதற்காக நாம் செய்யக்கூடிய பரிகாரம் என்பதால் தான் இதை வீட்டிற்குள் செய்ய வேண்டாம் என்று சொல்லப்பட்டுள்ளது. ஒரு மண் அகல் தீபத்தை வீட்டிற்கு வெளி பக்கத்தில் வைத்து விடுங்கள். நீங்கள் எடுத்து வைத்திருக்கும் கருப்பு நிற காட்டன் துணியில், சிறு சிறு துண்டுகளாக வேப்ப குச்சிகளை உடைத்து போட்டு, ஒரு முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். இந்த முடிவினை மண் அகல் தீபத்தில் வைத்து, அதன் உள்ளே ஒரு கற்பூரத்தை வைத்து, வேப்பெண்ணை ஒரு ஸ்பூன் அளவு ஊற்றி, அந்த கற்பூரத்தை பற்ற வைத்து விடுங்கள்.

neruppu

இப்போது அந்த கருப்பு துணி அதன் உள்ளே இருக்கும் வெப்பம் குச்சு எல்லாமே எரிய ஆரம்பிக்கும். அந்த நெருப்பை பார்த்து உக்கிர அம்மனை மனதார வேண்டிக்கொண்டு, உங்களுக்கு இருக்கக்கூடிய கண்ணுக்குத் தெரிந்த, கண்ணுக்குத் தெரியாத எதிரிகளின் மூலம் உங்களுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று வேண்டிக்கொள்ளுங்கள். ‘ஓம்சக்தி’ என்று கூட மனதிற்குள் உச்சரித்து கொள்ளலாம். இப்படியாக இந்த பரிகாரத்தை தொடர்ந்து 11 நாட்கள் செய்தால் கூட போதும்.

- Advertisement -

veppa-mara-kuchi

அந்த அக்னியை பார்த்து வேண்டுதல் வைக்கும் போது, உங்களுக்கு தெரியாமல் உங்களை சுற்றி ஒரு பாதுகாப்பு வட்டம் உண்டாகி விடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அதன் பின்பு உங்களது முன்னேற்றத்தைப் பார்த்து கண் வைப்பவர்களாக இருந்தாலும், உங்கள் முன்னேற்றத்தை வீழ்த்த சதி செய்பவர்களாக இருந்தாலும், அவர்கள் உங்கள் பக்கம் தலை வைத்து கூட பார்க்கமாட்டார்.

veppa-ennai

மற்றபடி இந்த பரிகாரம் செய்வதன் மூலம் உங்களுடைய எதிரிகளுக்கு எந்த ஒரு வீழ்ச்சியும், உயிருக்கு ஆபத்தும், உங்கள் எதிரிகளுடைய குடும்பத்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் கட்டாயம் வராது என்பது மட்டும் உறுதி. தெய்வம் உங்கள் எதிரிகளிடம் இருந்து உங்களை காக்குமே தவிர, அந்த எதிரிகளை என்றைக்குமே தண்டித்து விடாது. சில சமயம் நமக்கு நாமே கூட எதிரிதான். அப்போது இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நமக்கு பாதிப்பு ஏற்பட்டு விடுமா என்ன? நம்பிக்கையோடு பரிகாரம் செய்பவர்களுக்கு நிச்சயம் பலன் உண்டு என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
கோவில்களில் மட்டுமே செய்ய வேண்டிய பரிகாரங்கள்! இதனை தவறியும் வீட்டில் செய்து விடாதீர்கள்! குடும்பத்திற்கு நல்லதல்ல.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -