வியாபாரம், சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு, சக வியாபாரிகளுடன் போட்டி பொறாமைகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். மார்க்கெட்டில் நம்மை போல வியாபாரம் செய்பவர்கள் எல்லாம், நமக்கு நிகரான போட்டியாளர்களாகத் தான் இருப்பார்கள். அவர்களை எல்லாம் எதிரியாக பார்க்கக்கூடாது. ஆரோக்கியமாக இவர்களோடு போட்டி போட்டு, எப்படி ஜெயிப்பது என்று தான் சிந்திக்க வேண்டும்.
அந்த வகையில் உங்களுடைய வியாபாரத்திலும் பெரிய பெரிய போட்டி இருக்கிறதா. அதன் மூலம் பொறாமை உண்டாகிறதா. வியாபாரத்தில் எவ்வளவுதான் போட்டி போட்டாலும் உங்களால் ஜெயிக்க முடியவில்லை, வியாபாரத்தில் இருக்கும் எதிரிகளை எப்படி சமாளிப்பது. இன்னும் சொல்லப்போனால் வியாபாரத்தில் இருக்கும் எதிரியை எப்படி வீழ்த்துவது? இந்தப் பிள்ளையாரை கும்பிட்டுப் பாருங்கள். வியாபாரத்திலும் தொழிலிலும் இருக்கும் எதிரிகளை சுலபமாக எதிர்கொள்வீர்கள்.
வியாபாரத்தில் இருக்கும் எதிரிகளை வீழ்த்த
இதற்கு விநாயகர் வழிபாடு தாங்க சிறப்பான வழி. செவ்வாய் கிழமை வரும் சூரிய ஹோரையில், விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும். எப்படி தெரியுமா? கொஞ்சம் தூள் உப்பு எடுத்துக் கொள்ளுங்கள், அல்லது இந்து உப்பு எடுத்து தட்டில் கொட்டி, அதை மஞ்சள் பிள்ளையார் பிடிப்பது போல கொஞ்சம் அழுத்தம் கொடுத்து பிடித்தால், உப்பு பிள்ளையார் பிடிக்க வரும். அந்த உப்பு பிள்ளையாருக்கு சந்தன குங்குமம் வைத்து, பூஜை அறையில் வைத்து மனம் உருகி வியாபாரத்தில் இருக்கும் எதிரிகள் விலக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
குறிப்பிட்டு உங்களோடு போட்டி போடும் அந்த எதிரி யார் என்பது உங்களுக்கு தெரியும் அல்லவா. அந்த எதிரி பெயரைச் சொல்லியே இந்த வழிபாட்டை நீங்கள் மேற்கொள்ளலாம். வழிபாட்டை முடித்துவிட்டு ஒரு மணி நேரம் கழித்து, சுத்தமான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த உப்பு பிள்ளையாரை எடுத்து அந்த தண்ணீரில் கரைத்து விடுங்கள்.
இந்த உப்பு தண்ணீரில் கரைந்து காணாமல் போவது போல, என்னுடைய எதிரியும், என்னை விட்டு தூர விலகி செல்ல வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் தொழிலில் போட்டி போடும் அந்த எதிரியின் உயிருக்கு ஆபத்து ஏதும் ஏற்படாது. அவரும் தன்னுடைய தொழிலில் தோற்றுப் போய் நொடிந்து போக மாட்டார். ஆனால் வியாபாரத்தில் உங்களோடு போட்டி போட்டு உங்களுடைய வியாபாரத்தை கெடுக்க உங்கள் வாழ்க்கையில் குறுக்க வரவே மாட்டாரு. இத ட்ரை பண்ணி பாருங்க.
இதையும் படிக்கலாமே: நியாயமான வேண்டுதல் நிறைவேற
செவ்வாய்க்கிழமை சூரிய ஹோரை எப்போது வரும்
செவ்வாய்க்கிழமை காலை 7 – 8, செவ்வாய்க்கிழமை இரவு 9 – 10 சூரியஹோரை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு மணி நேரத்தில் மேலே சொன்ன விநாயகர் பூஜையை எப்போது வேண்டுமென்றாலும் வீட்டில் இருந்து செய்யலாம். நம்பிக்கையோடு செய்யுங்கள். தொடர்ந்து மூன்று வாரம் செய்யுங்கள். நிச்சயம் தொல்லை கொடுக்கும் எதிரிகளிடமிருந்து விடுபடலாம்.