எதிரிகள் தொல்லை நீங்க அமாவாசை வழிபாடு

durgai valipadu
- Advertisement -

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை எடுப்பார். அப்படி முன்னேறிக் கொண்டு செல்லும் பொழுது உடன் இருப்பவர்களோ அல்லது அவர்களின் முன்னேற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களோ அவர்களுக்கு எதிரியாக மாறுவார்கள். அவர்களின் முன்னேற்றத்தை தடை செய்வதற்காக பல வழிகளை பின்பற்றுவார்கள். அப்படிப்பட்ட எதிரிகளால் பல பிரச்சனைகளை சந்தித்து வாழ்வாதாரத்தையே இழந்து நின்றவர்கள் பலர் இருக்கிறார்கள். இப்படி எதிரிகளால் பாதிக்கப்பட்டவர்கள் அமாவாசை நாளில் துர்க்கை அம்மனை எந்த முறையில் வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

உக்கிர தெய்வங்களை நாம் வழிபடுவதன் மூலம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் துர்க்கை அம்மன், பிரத்தியங்கிரா தேவி, பைரவர், வராகி அம்மன், காளியம்மன் போன்ற தெய்வங்கள் உக்கிரமான தெய்வங்களாகவும் அவர்களை வழிபடும் பொழுது நம்முடைய வாழ்வில் இருக்கக்கூடிய கடன் பிரச்சனை, நோய், எதிரிகள் தொல்லை போன்றவை அனைத்தும் நீங்கும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

அப்படி நம்முடைய பிரச்சினைகள் நீங்க வேண்டும் என்றால் உக்கிர தெய்வங்களுக்கு உகந்த நாட்களில் அந்த தெய்வத்தை நாம் வழிபட வேண்டும். அந்த வகையில் எதிரிகளின் தொல்லை நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் துர்க்கை அம்மனை அமாவாசை தினத்தில் வழிபட வேண்டும்.

அமாவாசை தினத்தன்று காலையில் அருகில் இருக்கக்கூடிய துர்க்கை அம்மன் இருக்கும் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு இருக்கக்கூடிய துர்க்கை அம்மனுக்கு இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து சிவப்பு நிற மலர்களால் துர்க்கை அம்மனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். சகஸ்ரநாமம் அர்ச்சனை செய்ய இயன்றவர்கள் செய்யலாம். இயலாதவர்கள் 108 முறை சாதாரண அர்ச்சனையை செய்து கொள்ளலாம்.

- Advertisement -

மேலும் குங்குமத்தால் அர்ச்சனை செய்வதும் மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. இப்படி அர்ச்சனை செய்வதன் மூலம் எதிரிகளால் ஏற்ப ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். அர்ச்சனை செய்த குங்குமத்தை வாங்கி வந்து வீட்டிலும், தொழில் செய்யும் ஸ்தாபனத்திலும் நிலை வாசலில் வைப்பதோடு மட்டுமல்லாமல் தினமும் நெற்றியில் வைத்துக் கொள்வதன் மூலம் பிற்காலத்தில் எதிரிகளால் பாதிப்பு ஏற்படாமல் தடுத்துக் கொள்ள முடியும்.

இது மட்டுமல்லாமல் பவள மல்லியால் துர்க்கை அம்மனை அர்ச்சனை செய்யும் பொழுது எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்குவதோடு மட்டுமல்லாமல் எதிரிகளே இல்லாத வாழ்க்கை அமையும் என்று கூறப்படுகிறது. இந்த வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடாக திகழ்கிறதால், நம் மேல் எந்தவித தவறும் இல்லை எதிரிகளால் நமக்கு பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதில் நாம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் தான் இந்த வழிபாட்டை நாம் மேற்கொள்ள வேண்டும்.

- Advertisement -

அம்மனுக்கு அர்ச்சனை நடைபெறும் பொழுது எதிரிகளால் நமக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் என்ன என்பதை அம்மனிடம் கூற வேண்டும். மேலும் அந்தப் பிரச்சினைகளில் இருந்து என்னை காப்பாற்றுங்கள் தாயே என்று முறையிட வேண்டும். இந்த வகையில் தொடர்ந்து 5 அமாவாசை தினங்கள் இந்த வழிபாட்டை மேற்கொண்டால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய எதிரிகளின் தொல்லை முற்றிலும் நீங்கும்.

இதையும் படிக்கலாமே: பணப் பிரச்சனை தீர துர்க்கை அம்மன் வழிபாடு

நியாயமாக நமக்கு பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கிறது என்னும் பட்சத்தில் முழு நம்பிக்கையுடன் துர்க்கை அம்மனை அமாவாசை தினத்தில் வழிபட நமக்கு பாதிப்பு கொடுத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டனைக்குள் ஆவார்கள்.

- Advertisement -