பொறாமைப்படும் எதிரிகள் தொல்லை ஒழிய இந்த சில பொருட்களை கோவிலில் இருந்து கொண்டு வந்து வீட்டில் வைத்துக் கொள்வது எவ்வளவு நல்லது தெரியுமா?

sivan-viboothi
- Advertisement -

நம்முடன் இருப்பவர்கள் எல்லோருமே நமக்கு நன்மைகளை செய்யக் கூடியவர்கள் என்று கூறி விட முடியாது. உடனிருப்பவர்களே நமக்கு துரோகம் செய்யும் வாய்ப்புகள் கூட உண்டு எனும் பொழுது எவரையும் எளிதாக நம்பி விட முடியாது. நம் கண் முன்னே நமக்கு தெரிந்து விடும் பகைவர்களை கூட நாம் மன்னித்து விடலாம். ஆனால் இனிக்க இனிக்க பேசி வலிக்க வலிக்க கொள்ளும் துரோகிகளை ஒருநாளும் மன்னிக்க முடியாது. இத்தகைய துரோகிகளையும், பகைவர்களையும் ஒழிக்க கோவிலில் இருந்து நாம் இந்த சில பொருட்களை கொண்டு வந்து வீட்டில் வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. அப்படியான பொருட்கள் என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

gopuram-2

கோவிலில் கொடுக்கும் இந்த பிரசாதங்களை கோவிலிலேயே விட்டு வருவது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது. கடவுள் அருள் நிறைந்து இருக்கும் கோவிலில் இருந்து நீங்கள் ஒரு சிறு துண்டு இலையை எடுத்து வந்தால் கூட அதிலிருந்து நிறைய நன்மைகளைப் பெறலாம். அப்படி இருக்கும் பொழுது நம் பகைவர்கள் தொல்லை ஒழிய நாம் கோவிலில் இருந்து என்ன கொண்டு வரலாம்?

- Advertisement -

சிவன் சொத்து குலநாசம் என்பார்கள். சிவன் கோவிலில் இருந்து கொண்டு வரப்படும் திருநீறு குலத்தை நாசம் செய்யும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அது உண்மை அல்ல. சிவன் கோவிலிலிருந்து விபூதியை கொண்டு வந்து நம் வீட்டின் பூஜை அறையில் வைத்து தினமும் அதனை நெற்றியில்இட்டுக் கொண்டால் நம்மிடம் இருக்கும் கெட்ட அதிர்வலைகள் நீங்கி நல்ல அதிர்வுகள் பெருகும். சிவன் அருளால் நம்மை மற்றவர்களுடைய பொறாமை பார்வையில் கூட ஒன்றுமே செய்ய முடியாமல் போய்விடும்.

viboothi

சிவன் கோவிலில் விபூதி மட்டுமல்ல இவ்வகையில் பைரவர் கோவிலில் கொடுக்கப்படும் விபூதியும் மிகுந்த நன்மைகளை செய்யக் கூடியது ஆகும். பைரவர், சிவன் கோவில்களில் கொடுக்கும் விபூதியை அங்கேயே போட்டுவிட்டு வராமல் அதனை வீட்டிற்கு எடுத்து வந்து பூஜை அறையில் வைத்து விடுங்கள். இதே போல அம்மன் கோவில்களில் கொடுக்கப்படும் எலுமிச்சையை கொண்டு வந்து வீட்டில் வைப்பதால் எத்தகையவர்களுடைய கண் திருஷ்டியும் நம்மை விட்டு நீங்கும்.

- Advertisement -

குறிப்பாக பகைவர்களை அழிக்கும் உக்கிர கோவில்களில் வீற்றிருக்கும் அம்மன் கோவில்களில் கொடுக்கும் எலுமிச்சை பழத்தை வைத்து கொண்டால் நம்மை சுற்றியிருக்கும் சூழ்ச்சிகளை எளிதாக முறியடித்து விடும். சுற்றி எப்பொழுதும் பகைவர்களின் தொல்லை இருந்து கொண்டே இருந்தால் காளி கோவிலில் கொடுக்கும் எலுமிச்சை பழம் மற்றும் குங்குமத்தை கொண்டு வந்து வீட்டில் வையுங்கள். சில கோவில்களில் விசேஷமாக கைகளில் கட்டிக் கொள்ள கயிறு கொடுப்பார்கள்.

kayiru

அவ்வகையான கயிற்றைக் கட்டிக் கொண்டால் உங்கள் பகைவர்களால் உங்களை ஒன்றுமே செய்ய முடியாது. இதனால் தான் கைகளில் கருப்பு கயிறு போன்றவற்றை எப்போதும் அணிந்து கொள்ள நம் முன்னோர்கள் வலியுறுத்தி வந்தனர். இது போன்ற கயிற்றை நாம் கடைகளில் சென்று வாங்கி வருவதை விட கோவில்களில் இருந்து வாங்கி வருவது இன்னும் சிறப்பு. துர்க்கை அம்மன் சன்னிதியில் இருக்கும் துர்க்கை பாதத்தில் வைத்த குங்குமத்தை தினமும் பெண்கள் நெற்றியில் இட்டுக் கொண்டால் புது தன்னம்பிக்கையும், தைரியமும் பிறக்கும்.

- Advertisement -