வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை நேர்மறை ஆற்றலாக மாற்ற உதவும் தீபம்

positive energy in home
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் அவருக்கு நேர்மறை எண்ணங்கள் இருக்க வேண்டும் என்று கூறுவோம். எந்த அளவிற்கு நாம் நேர்மறை எண்ணங்களை சிந்திக்கிறோமோ அந்த அளவிற்கு நேர்மறையான செயல்கள் நமக்கு நடைபெறும் என்று கூறப்படுகிறது. இது நம்முடைய எண்ணத்தை பொறுத்து மட்டும் அல்லாமல் நம்மை சுற்றி இருக்கக்கூடிய ஆற்றல்களை பொருத்தும் அமையும்.

ஒருவரை சுற்றி எதிர்மறை ஆற்றல்கள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவருக்கு எதிர்மறையான எண்ணங்களே தோன்றும். இதே நேர்மறை ஆற்றல்கள் அதிகமாக இருந்தால் நேர்மறை எண்ணங்கள் தோன்றும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களை நேர்மறை ஆற்றல்களாக மாற்றுவதற்கு உதவக்கூடிய தீபத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

ஒரு கோயிலுக்கு நாம் செல்லும் பொழுது எந்த அளவிற்கு நேர்மறையான எண்ணங்கள் தோன்றுகிறதோ அந்த அளவிற்கு ஒரு சிலருக்கு அவர்களுடைய வீட்டிற்கு செல்லும் பொழுது தோன்றாது. அதற்கு முக்கியமான காரணம் அந்த இடத்தில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் தான். இந்த எதிர்மறை ஆற்றல்கள் நம்முடைய எண்ணத்தாலோ அல்லது பிறரின் எண்ணங்களால் நமக்கு ஏற்படும் கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம் இது போன்ற தீய சக்திகளாலும் ஏற்படும்.

இப்படி எதிர்மறை ஆற்றல்கள் ஏற்பட்டு விட்டால் அந்த குடும்பத்தில் எந்தவித சந்தோஷமும் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளே இருக்காது. எதற்கெடுத்தாலும் சண்டை சச்சரவுகள் என்று நிம்மதியற்ற சூழ்நிலையை உண்டாகும். இந்த நிம்மதியற்ற சூழ்நிலையை மாற்றுவதற்கு எதிர்மறை ஆற்றல்களை நேர்மறை ஆற்றல்களாக மாற்ற வேண்டும். அதற்கு ஏற்றக்கூடிய தீபத்தை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

பொதுவாக எதிர்மறை ஆற்றலாக இருந்தாலும் சரி நேர்மறை ஆற்றலாக இருந்தாலும் சரி அந்த ஆற்றலானது நம்முடைய தலைவாசலின் வழியாக தான் நம் வீட்டிற்குள் வரும். அதனால்தான் பலரும் தங்களுடைய நிலை வாசலில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க செய்யக்கூடிய சில காரியங்களை மேற்கொள்வார்கள். எதிர்மறை ஆற்றல்கள் வீட்டிற்குள் வரக்கூடாது என்பதற்காக பல பொருட்களை நிலை வாசலில் வைப்பார்கள். இவை அனைத்தையும் செய்வதோடு நாம் தினமும் மாலை நேரத்தில் நிலை வாசலில் இந்த முறையில் தீபம் ஏற்று வழிபட்டோம் என்றால் நம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கிவிடும்.

இதற்கு இரண்டு அகல் விளக்குகள் வேண்டும். அகல் விளக்கில் ஏற்றுவது தான் மிகவும் சிறப்பு. இந்த அகல் விளக்கை சுத்தம் செய்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். இந்த அகல் விளக்கை வைப்பதற்கு இரண்டு சிறிய தாம்பாளங்களை எடுத்து சுத்தம் செய்து அதற்கும் சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். இந்த தாம்பாளத்தின் நடுவே மஞ்சளால் கோலம் போட வேண்டும்.

- Advertisement -

சிறிய அளவில் ஒரு பூக்கோலம் அல்லது நட்சத்திர கோலம் என்று ஏதாவது ஒரு கோலத்தை போட்டுவிட்டு அதற்கு மேலே வேப்ப இலையை வைக்க வேண்டும். இந்த வேப்ப இலையின் நுனியானது வடக்கு அல்லது கிழக்கு பார்த்த மாதிரி இருக்க வேண்டும். இரண்டு வேப்ப இலைகளை வைத்து அந்த வேப்ப இலைக்கும் மேலே அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

இந்த தீபத்தை காலையில் ஏற்றுவதைவிட மாலையில் ஏற்றுவது மிகவும் சிறப்புக்குரியது. தினமும் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். இயன்றவர்கள் காலையிலும் ஏற்றலாம். அதில் எந்த தவறும் கிடையாது. இப்படி நாம் தினமும் நம்முடைய நிலை வாசலில் இந்த தீபத்தை ஏற்றி வழிபடுவதன் மூலம் நம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கி நேர்மறை ஆற்றல்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: வாழ்வை வளமாக்கும் அட்சய திருதியை

மிகவும் எளிமையான இந்த தீப வழிபாட்டை நாமும் மேற்கொண்டு நம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களை நேர்மறை ஆற்றல் ஆக மாற்றுவோம்.

- Advertisement -