வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் சந்தோஷத்துடனும் நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். அப்படி நிம்மதியுடன் வாழ்வதற்கு வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்க வேண்டும். நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்க வேண்டும் என்றால் எதிர்மறை ஆற்றல்கள் நீங்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கக் கூடிய தரித்திர நிலையும் மாற வேண்டும். இவை அனைத்தும் நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எந்த முறையில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பொதுவாக மகாலட்சுமிக்கு பிடித்தமான வீட்டில் தான் மகாலட்சுமி குடியிருப்பாள். அப்படி மகாலட்சுமி குடியிருக்கும் போது அந்த வீட்டில் அஷ்ட ஐஸ்வர்யங்களும் நிலையாக நிலைத்திருக்கும். அதற்கு மாறாக மகாலட்சுமியின் சகோதரி வீட்டிற்குள் வந்து விட்டால் வீட்டில் தரித்திர நிலை தாண்டவம் ஆடும். இப்படி தரித்திரம் ஏற்பட்டிருந்தாலும் எதிர்மறை சக்திகள் என்று கூறக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகள் நீங்கவும் செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பார்ப்போம்.
வாஸ்து ரீதியாக ஒவ்வொரு மூலைக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கும் அந்த மூலைக்கேற்றவாறு நாம் பொருட்களை வைப்பதாக இருந்தாலும் சரி வேறு ஏதாவது பரிகாரம் செய்வதாக இருந்தாலும் சரி, அதனால் நமக்கு பல நன்மைகளை நடக்கும். அதை தவிர்த்து எந்த இடத்தில் எதை செய்யக்கூடாது என்று இருக்கிறதோ அதை செய்தால் அதனால் நமக்கு பிரச்சினைகளை ஏற்படும்.
அந்த வகையில் அக்னி மூலையில் சமையலறையும், தென்மேற்கு மூலையில் பீரோ வைப்பது, வடகிழக்கு மூலையில் தண்ணீர் தொட்டி வைப்பது போன்ற பல விஷயங்களை நாம் அறிந்திருப்போம். அதன் அடிப்படையில் தான் இன்றைய பரிகாரமும் இருக்கப் போகிறது. வீட்டின் அக்னி மூலையாக திகழக்கூடிய தென்கிழக்கு மூலையில் ஒரு கண்ணாடி அல்லது பீங்கான் அல்லது மண்சட்டி இவை மூன்றில் ஏதாவது ஒன்றை புதிதாக வாங்கிக் கொள்ளுங்கள்.
அது நிறைய கல்லுப்பை நிரப்பி அதற்கு மேல் ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை காலையிலும் மாலையிலும் ஏற்ற வேண்டும். இயலாதவர்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமையில் மட்டுமாவது இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். இப்படி நாம் தீபம் ஏற்றுவதன் மூலம் நம் வீட்டில் இருக்கக்கூடிய ஏவல், பில்லி, சூனியம், கண் திருஷ்டி போன்ற எதிர்மறை சக்திகள் அனைத்தும் நீங்கும். அதோடு மட்டுமல்லாமல் நம் வீட்டில் இருக்கக்கூடிய தரித்திர நிலை நீங்கும்.
எதிர்மறை ஆற்றல்களும் தரித்திர நிலையும் நீங்கி விட்டால் பிறகு என்ன? வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். அதன் மூலம் மகாலட்சுமியின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். எதை எடுத்தாலும் தடைகள் ஏற்படுகிறது, வெற்றியே கிடைப்பதில்லை, பணத்தட்டுப்பாடு, வறுமை என்று பல கஷ்டங்களை சுமந்து கொண்டு இருப்பவர்கள் இந்த தீபத்தை ஏற்றுவதன் மூலம் நல்ல பலனை பெற முடியும்.
இதையும் படிக்கலாமே: திருமணம் நடக்க வெள்ளிக்கிழமை துர்க்கை வழிபாடு
மிகவும் எளிமையான இந்த தீப வழிபாட்டை நாமும் நம் இல்லங்களில் செய்து எதிர்மறை ஆற்றல்களில் இருந்து விடுபட்டு மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாக பெறுவோம்.