எதிரி, நமக்கு எதிராக ஒரு போதும் யோசிக்கக்கூட கூடாது. தீமையை கூட நன்மையாக மாற்றும் வரம் தரும் வரமிளகாய்.

- Advertisement -

வாழ்க்கையில் எதிரிகள் இல்லை என்றால் சுவாரசியம் இருக்காது. நமக்கு இருக்கும் எதிரிகளை எதிர்த்துப் போராடி ஜெய்பதில் இருக்கக்கூடிய சந்தோஷம் வேறு எதிலும் கிடைக்காது. எதிரிகளை எதிர்த்து சண்டை போட்டு முட்டிமோதி காணக்கூடிய வெற்றியில் கிடைக்கும் சந்தோஷத்தை, ஒருவர் சொல்லி அடுத்தவரால் உணரமுடியாது. ஒருமுறை உங்களுடைய எதிரியோடு போராடி வாழ்க்கையில் ஜெயித்து காட்டுங்கள். ஜெய்பதில் இருக்கக்கூடிய மகிழ்ச்சியை உங்களால் நிச்சயம் உணர முடியும்.

enemy1

எதிரியை எதிர்த்து ஜெயிப்பது என்றால், எதிரியை அழிப்பது கிடையாது. எதிரியை வாழவைத்து நாமும் வாழ வேண்டும். எதிரி அழிந்து போகவேண்டும் என்று நினைக்காதீர்கள். நீங்கள் அழிய வேண்டும் என்று நினைப்பவர்களை விட, ஒருபடி மேலே வாழவேண்டும் என்று தான் நினைக்க வேண்டும். சரி, வாழ்க்கையில் எதிரிகளால் பிரச்சனை, எதிரிகள் கொடுக்கும் தொல்லையால் பிரச்சனை, எதிரிகள் நம்மை அழிப்பதற்காக ஏவி விடப்படும் எதிர்மறை ஆற்றலால் பிரச்சினை, எதிரியின் வயிற்றெரிச்சலால் பிரச்சனை, எதிராளியின் கண் திருஷ்டியால் பிரச்சனை.

- Advertisement -

நமக்கு எதிராக செயல்படும், நமக்கு கெடுதலை தரும் இந்த எதிரி தொல்லையில் இருந்து நாம் எப்படி தப்பிப்பது? ஒரு சிறிய பரிகாரம் உங்களுக்காக. ஒரு சிறிய கண்ணாடி பௌலில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை போட்டுக் கொள்ள வேண்டும். நீலமாக இருக்கும் ஒரு வரமிளகாயை எடுத்து அந்த உப்புக்கு நடுவில் அப்படியே சொருகி வைக்க வேண்டும். காம்பு பகுதி மேலே பார்த்தவாறு இருக்க வேண்டும்.

enemy

இப்படி மிளகாயை, உப்பிற்குள் சொருகி வைக்கும் போது உங்களுக்கு வாழ்க்கையில் எந்த எதிரியால் பிரச்சனை இருக்கின்றதோ, அந்த குறிப்பிட்ட எதிரியின் பெயரை சொல்லி ‘அந்த நபர் என்னுடைய முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கக்கூடாது. அந்த நபரால் ஏவி விடப்படும் எந்த ஒரு பேய் பிசாசு பில்லி சூனியம் கண் திருஷ்டி ஆக இருந்தாலும் அது எனக்கு வந்து கெடுதலை கொடுக்கக்கூடாது’ என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

தயார் செய்த இந்த கண்ணாடி பவுலை அப்படியே உங்கள் வீட்டு வரவேற்பறையில் ஏதாவது ஒரு இடத்தில் கண்ணுக்கு தெரியாமல் வைத்துவிடுங்கள். வாரம் ஒரு நாள் இந்த கிண்ணத்தில் இருக்கும் உப்பு வர மிளகாய் இரண்டு பொருட்களையும் எரிகின்ற நெருப்பில் போட்டுப் பொசுக்கி விடுங்கள். மீண்டும் இதே போல் தயார் செய்து வரவேற்பறையில் வைத்துக் கொள்ளலாம்.

milagai

மிளகாயை உப்பில் சொருகும் போது உங்கள் மனதார நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அது நிச்சயம் நடக்கும். இந்த இரண்டு பொருட்களையும் எடுத்து நெருப்பில் போட்டு பொசுக்கும் போது உங்களுக்கு இருக்கக்கூடிய அத்தனை கஷ்டங்களும் பொசுங்கும். இதனால் எதிராளிக்கு ஏதேனும் பிரச்சனை வருமா என்று பயப்படவேண்டாம். எதிராளியின் உயிருக்கும் முன்னேற்றத்திற்கு எந்த ஒரு ஆபத்தும் வராது.

neruppu

ஒன்று, எதிராளி உங்களின் நண்பனாக மாறலாம். இல்லை எதிராளி உங்கள் பக்கம் தலை வைத்து படுக்காமல் அவர் வேலையை மட்டும், அவர் பார்த்துக் கொள்வார். எதிரி தொல்லை என்று மட்டும் கிடையாது . உங்கள் வாழ்க்கையில் எந்த கெடுதல் நடந்தாலும் சரி, அந்த கெடுதல் சரியாக வேண்டும் என்று இந்த பரிகாரத்தை செய்தால் தீமையும் நன்மையாக மாறிவிடும். முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -