முருகப்பெருமானுக்கு உகந்த மாதங்களில் ஒன்றாக திகழ்வதுதான் பங்குனி மாதம். பங்குனி மாதத்தில் முருகப்பெருமானுக்கு உகந்த பங்குனி உத்திரம் என்பது வரும். மேலும் இந்த பங்குனி மாதத்தை நாம் மங்களகரமான மாதம் என்றும் கூறுகிறோம். பங்குனி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு திதியும் மிகவும் சிறப்பு மிகுந்ததாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட பங்குனி மாதம் நிறைவடைவதற்குள் முருகப்பெருமானை நினைத்து எந்த ஒரு பரிகாரத்தை நாம் செய்து வைத்தோம் என்றால் நாம் இழந்த அனைத்தும் கிடைக்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒவ்வொரு விதமான பொருட்களை இழந்து அது திரும்ப கிடைக்காதா? என்ற ஏக்கத்துடன் இருப்போம். அப்படி இருக்கக்கூடிய பொருட்கள் திரும்ப கிடைக்கவும், கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழவும், முருகப்பெருமானை நினைத்து பங்குனி மாதத்தில் இந்த ஒரு பரிகாரத்தை நாம் செய்தால் போதும் எதை இழந்தோம் என்று வருத்தப்பட்டு கொண்டு இருந்தோமோ அது திரும்ப கிடைக்கும். கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் உண்டாவதோடு குடும்பத்தில் சுப நிகழ்வுகளும் நல்ல முன்னேற்றமும் உண்டாகும்.
இந்த பரிகாரத்தை பங்குனி மாதத்தில் வரக்கூடிய எந்த நாள் வேண்டுமானாலும் செய்யலாம். முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக இருந்தாலும் சரி மற்ற நாட்களாக இருந்தாலும் சரி இந்த வழிபாட்டை முழுமனதோடு முருகப்பெருமானை நினைத்து செய்ய வேண்டும். இதற்கு மூன்றே மூன்று பொருட்கள் வேண்டும். அதில் முதலாவதாக இருப்பது செம்பருத்தி இலை. இந்த செம்பருத்தி இலை என்பது முருகப் பெருமானின் வேல் போன்ற வடிவத்தை பெற்றிருக்கிறது. அடுத்ததாக முருகப் பெருமானுக்கு உகந்த தானியமான துவரம் பருப்பு ஒரு ஸ்பூன் வேண்டும். அடுத்ததாக செல்வ வளத்தை ஈர்க்கக்கூடிய பச்சை கற்பூரம் ஒரு துண்டு வேண்டும்.
என்றைக்கு இந்த பரிகாரத்தை செய்கிறோமோ அன்று மாலை 6:00 மணிக்கு வீட்டில் தீபம் ஏற்றுவோம் அல்லவா? அப்பொழுது முருகப்பெருமானின் படத்திற்கு முன்பாக ஒரு தாம்பாள தட்டை வைத்து அதற்கு மேல் செம்பருத்தி இலையை வைக்க வேண்டும். அதற்கு மேல் துவரம் பருப்பு, பச்சை கற்பூரம் இவற்றை வைத்து உங்களுடைய கோரிக்கை என்னவோ வேண்டுதல் என்னவோ அதை முருகப்பெருமானிடம் முழு மனதோடு கூற வேண்டும். மாலை நேரத்தில் எவ்வளவு நேரம் தீபம் எரியுமோ அவ்வளவு நேரம் இது அப்படியே இருக்கட்டும்.
தீபத்தை குளிர வைக்கும் பொழுது ஒரு வெள்ளை நிற பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பேப்பரில் நான்கு மூலைகளிலும் மஞ்சள் குங்குமத்தை தடவி முருகப்பெருமானை மனதார நினைத்துக் கொண்டு இந்த இலை துவரம்பருப்பு பச்சை கற்பூரத்தை அதற்கு நடுவே வைத்து பேப்பரை மடித்து முருகப்பெருமானின் பாதத்தில் வைத்து விடுங்கள். அவ்வளவுதான் பரிகாரம் நிறைவடைந்து விட்டது.
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும் இதற்கு சாம்பிராணி தூபம் காட்ட வேண்டும். மாதத்தில் வரக்கூடிய சஷ்டி திதி அன்றோ அல்லது கிருத்திகை நட்சத்திரம் வரக்கூடிய நாளிலோ இதை திறந்து இதில் இருக்கக்கூடிய பொருட்களை மாற்றி புதியதாக வைக்க வேண்டும். இப்படி நாம் தொடர்ச்சியாக செய்வதன் மூலம் முருகப்பெருமானின் அருளால் கடன் பிரச்சினை முற்றிலும் நீங்குவதோடு, பணவரவு அதிகரிப்பதோடு, நாம் இழந்த அனைத்தையும் திரும்பப் பெறுவோம். மேலும் நம்முடைய குடும்பத்தில் நல்லது மட்டுமே நடக்கும்.
இதையும் படிக்கலாமே: பணம் சேரும் யோகம் உண்டாக
முருகப்பெருமானின் அருளை பரிபூரணமாக பெற்று இழந்த அனைத்தையும் திரும்பப் பெறுவதோடு அனைத்து விதமான நன்மைகளையும் பெற்று சிறப்புடன் வாழ்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்