- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval21 நாளில் இழந்ததை மீட்டு தரும் பரிகாரம்

21 நாளில் இழந்ததை மீட்டு தரும் பரிகாரம்

- Advertisement -

ஒவ்வொருவர் வாழ்க்கையில் ஒவ்வொரு இழப்புகள் இருக்கும். சில பேருக்கு பண இழப்பு, சில பேருக்கு பொருள் இழப்பு, சில பேருக்கு சொத்து சுகம் இழப்பு, சில பேருக்கு மான மரியாதை இழப்பு கூட, இப்படி பல வகையான இழப்புகள் ஒரு மனிதனுக்கு இருக்கும். சில பேர் தன்னுடன் வாழ்ந்த தாய், தந்தை, மனைவி, உடன் பிறந்தவர்கள் இவர்களைக் கூட பிரிந்து இருப்பார்கள்.

இப்படி நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இழந்ததை, உங்கள் வாழ்க்கையில் தொலைத்ததை, மீண்டும் பெற வேண்டும் என்றால் செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டு முறை இருக்கிறது. இதை பெண்கள் 21 நாள் தொடர்ந்து செய்ய வேண்டும். ஆண்களாக இருந்தால் 48 நாள் தொடர்ந்து செய்ய வேண்டும். பெண்களுக்கு இழந்தது 21 நாட்களில் திரும்பவும் கிடைக்கும்.

- Advertisement -

ஆண்களுக்கு இழந்தது 48 நாட்களுக்குள் திரும்பவும் கிடைக்கும். அது என்ன கணக்கு அப்படி என்றெல்லாம் கேள்வி எழுப்பக் கூடாது. பெண்களுக்கு சில கட்டுப்பாடு இருக்கிறது. அவர்களால் தொடர்ந்து 48 நாள் வழிபாட்டை மேற்கொள்ள முடியாது. அதனால் தான் அவர்களுக்கு 21 நாள் சொல்லப்பட்டுள்ளது. சரி, அந்த வழிபாடு என்ன ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

இழந்ததை மீட்டு தரும் பரிகாரம்

தினமும் அதிகாலை 3:00 மணியிலிருந்து 4:30 மணி வரை இருக்கக்கூடிய நேரத்தை அதிபிரம்ம முகூர்த்த நேரம் என்று சொல்லுவார்கள். இந்த பிரம்ம முகூர்த்த நேரத்திற்கு பவர் அதிகம். இந்த குறிப்பிட்ட நேரத்தில் தான் நீங்கள் வழிபாட்டை செய்ய வேண்டும். சிரமம் பாக்காதீங்க. அதிகாலை எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் 2 மண் அகல் விளக்குகளை வைத்து, இலுப்பெண்ணை ஊற்றி தாமரை தண்டு திரி போட்டு பூஜை அறையில் அமர்ந்து நீங்கள் என்ன இழந்தீர்களோ, அது உங்களுக்கு திருப்பி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

ஏதாவது ஒரு விஷயமாகத்தான் பிரார்த்தனை செய்ய வேண்டும். சில பேருக்கு நல்ல வேலை கூட கைவிட்டுப் போய் இருக்கும். சில பேருக்கு நகை நட்டு கூட கைவிட்டு போயிருக்கும். அதெல்லாம் திரும்பவும் கிடைக்க வேண்டும் என்றாலும் கூட இந்த பரிகாரத்தை செய்யலாம். சரி, அது உங்கள் விருப்பம். என்ன வேண்டுதலோ அந்த ஒரு வேண்டுதலை 10 நிமிடங்கள் கண்களை மூடி பிரபஞ்சத்திடம் சொல்ல வேண்டும்.  இதே போல  பெண்கள் 21 நாள் தொடர்ந்து விளக்கு போடுங்கள். ஆண்கள் 48 நாள் விளக்கு போடுங்க.

இந்த 21 நாட்களுக்குள், இந்த 48 நாட்களுக்குள், கூடவே நீங்கள் இன்னொரு வேலையையும் செய்ய வேண்டும். உங்க வீட்டு பக்கத்தில் எருக்கன் செடி எங்கேயாவது இருக்குதா அப்படின்னு பாருங்க. அந்த எருக்கன் செடியில் இருக்கும் பூக்களை உடைக்க வேண்டும். மூன்று பூக்கள். அந்த மொட்டுக்களை அழுத்தினால் பட்டென வெடிக்கும் அல்லவா.

- Advertisement -

அதே போல அழுத்தி வெடிக்க வைக்க வேண்டும். ‘என்னுடைய வேண்டுதலை இந்த பிரபஞ்சம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பிரபஞ்சத்தின் ஆசிர்வாதம் எனக்கு இருக்கிறது. நான் இழந்ததை கட்டாயம் திரும்பவும் மீட்டெடுப்பேன்’. என்று சொல்லி அந்த மூன்று மொட்டுக்களை உடைக்க வேண்டும். விளக்கு போட தொடங்கிய நாள் முதல் மூன்று முறையாவது இந்த எருக்கன் பூ உடைக்கும் பரிகாரத்தை செய்யுங்கள்.

மேலே சொன்ன இரண்டு விஷயங்களை எப்படியாவது செய்து முடித்து விட்டீர்கள் என்றால், நிச்சயமாக உங்களுடைய வேண்டுதல் நிறைவேறிவிடும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை தொடங்குங்கள். வழிபாட்டை வெள்ளிக்கிழமை தொடங்கலாம். புதன்கிழமை தொடங்கலாம். வியாழக்கிழமை தொடங்கலாம்.

இதையும் படிக்கலாமே: 22-08-2024 மஹா சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

உங்களுக்கு எந்த கிழமை சௌகரியமாக இருக்கிறதோ அந்த நாளில் தொடங்கிக் கொள்ளுங்கள். நல்லது நினைப்பவர்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும் இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்