- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval22-08-2024 மஹா சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

22-08-2024 மஹா சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

- Advertisement -

வரும் 22 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று, மஹா சங்கடஹர சதுர்த்தி திதியானது வரவிருக்கின்றது. மற்ற சங்கடஹர சதுர்த்தியில் விநாயகர் வழிபாடு செய்யாதவர்கள் கூட, 22 ஆம் தேதி வரக்கூடிய மகா சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகர் வழிபாட்டை தவிர விடக்கூடாது. உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அத்தனை தடைகளும், உடைய வியாழக்கிழமை விநாயகருக்கு எந்த பொருளை நெய்வேதியமாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும் ஆன்மீக சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

மஹா சங்கடஹர சதுர்த்தி வழிபாடு 2024

மகா சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு. வியாழக்கிழமை அதிகாலை வேலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, ‘ஓம் விக்னங்களை தீர்க்கும் விநாயகா போற்றி’ என்று சொல்லி இன்றைய நாள் விரதம் நல்லபடியாக துவங்கி, நல்லபடியாக முடிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு சங்கடஹர சதுர்த்தி விரதத்தை தொடங்குங்கள்.

- Advertisement -

விரதம் இருக்க முடியாது என்பவர்கள் பால் பழம் ஒரு வேலை உணவு சாப்பிட்டும் வழிபாட்டை மேற்கொள்ளலாம்‌. தவறு கிடையாது. மூன்று வேளை வயிறார சாப்பிட்டும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம் தவறு கிடையாது. சங்கடஹர சதுர்த்தி வழிபாடு என்றால் மாலை நேர வழிபாடு சிறப்பு. மாலை 6:30 மணிக்கு மேல் வீட்டு பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு போங்க.

அருகம்புல், சிதறு தேங்காய்க்கு ஒரு தேங்காய், வெற்றிலை பாக்கு, பூ பழம், இந்த பொருட்களை எல்லாம் வாங்கிக் கொள்ளுங்கள். கூடவே நீங்கள் விநாயகருக்கு என்ன நெய்வேதியம் வாங்கி வைக்க வேண்டும் தெரியுமா. கடலை மிட்டாய். வேர்க்கடலை பர்ஃபி என்று சொல்லுவார்கள் அல்லவா அதை மறக்காமல் வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்களால் இதை வீட்டிலேயே செய்ய முடியும் என்றால் உங்கள் கையாலேயே செய்து எடுத்துச் செல்வது நல்லது. முடியாதவர்கள் கடையில் தாராளமாக ஒரு பாக்கெட் கடலை மிட்டாய் வாங்கிக் கொள்ளலாம் தவறு கிடையாது. இந்த பொருளை எல்லாம் விநாயகருக்கு கொடுத்து உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளவும்.

தேங்காயை வாங்கி பிள்ளையார் கோவிலில் சிதறு தேங்காய் விட்டு விடுங்கள். பிறகு அந்த கடலை மிட்டாயை எடுத்து ஒன்று நீங்கள் சாப்பிட்டுவிட்டு, மற்ற மிட்டாயை எல்லாம் கோவிலுக்கு வரும் குழந்தைகளுக்கு தானமாக கொடுத்து விடுங்கள். கடலை என்பது குரு பகவானுக்கு உரியது. வெல்லம் என்பது சுக்கிர பகவானுக்கு உரியது.

- Advertisement -

இந்த குரு சுக்கிரன் ஒன்றாக சேர்ந்த பொருளை விநாயகப் பெருமானுக்கு வைத்து வழிபாடு செய்யும்போது, உங்கள் வாழ்வில் இருக்கும் நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் தீரும். சுபகாரிய தடைகள் எல்லாம் விளக்கும். முயற்சிகள் எல்லாம் வெற்றி அடையும். அதற்காகத்தான் இந்த பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: ஆவணி மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி நாளில் மேல் சொன்னபடி விநாயகரை வழிபாடு செய்துதான் பாருங்களேன். வாழ்க்கையில் அடுத்தடுத்து வரக்கூடிய நல்ல மாற்றங்களை கண்டு நீங்களே மகிழ்ச்சி அடைவீர்கள். இந்த எளிமையான ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் எல்லோருக்கும் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்