எண்ணெய் வழிந்து கொண்டிருக்கும் முகம் பளிச்சென்று மாற இதோ அருமையான 10 டிப்ஸ்

face
- Advertisement -

ஒரு சிலர் தினமும் நான்கு ஐந்து முறை முகத்தை கழுவினாலும் அவர்களின் முகத்தில் எப்பொழுதும் எண்ணெய் வழிந்து கொண்டுதான் இருக்கும். இதன் மூலம் அவர்களுக்கு முகப்பரு பிரச்சனைகள், கரும்புள்ளி பிரச்சனைகள் அதிகமாக வந்து கொண்டே இருக்கும். என்னதான் முயற்சி செய்தாலும் இவற்றிலிருந்து அவர்களால் எளிதாக விடுபட முடிவதில்லை. எனவே பல மருத்துவர்களிடம் சென்று ஆலோசனை கேட்டு, பலவித க்ரீம்களை பயன்படுத்துவதன் விளைவாக அவர்களின் முகத்தை லேசாக தொடும் பொழுதும் கூட வலிக்கின்ற அளவிற்கு சென்சிடிவா மாறிவிடுகிறது. இவ்வாறு ஆயில் ஸ்கின் பிரச்சனைகளில் இருந்து விடுபட இந்த 10 டிப்ஸ்களை தெரிந்து கொண்டு, அவற்றில் ஏதாவது ஒருசிலவற்றை பின்பற்றி வந்தாலே போதும். உங்களின் ஆயில் ஸ்கின் சருமம் சீக்கிரத்திலேயே அழகாக மாறி பளபளவென மின்ன ஆரம்பிக்கும். வாருங்கள் இந்தப் பத்து டிப்ஸ்களைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.டிப்ஸ்: 1
ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் தெற்கு நன்றாக கலந்துவிட வேண்டும். பிறகு இறுதியாக இதனுடன் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு இதனை லேசாக முகத்தில் தடவி, மசாஜ் செய்து முகத்தை கழுவி விடவேண்டும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தாலும் எண்ணெய் பிசுபிசுப்பு குறைந்து முகம் பளிச்சென்று மாறிவிடும்.

டிப்ஸ்: 2
ஒரு சிறிய கிண்ணத்தில் முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் தனியாக எடுத்து கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இதனை முகத்தில் அப்ளை செய்து பத்து நிமிடத்திற்கு அப்படியே விட்டு, அதன் பிறகு முகத்தை கழுவ வேண்டும்.

- Advertisement -

டிப்ஸ்: 3
ஒரு கைப்பிடி புதினா இலையை மிக்ஸி ஜாரில் சேர்த்து அவற்றை பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் இதனை முகத்தில் தடவி ஊற வைத்து முகத்தை கழுவ வேண்டும்.

டிப்ஸ்: 4
ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல் எடுத்துக் கொண்டு, அதனுடன் ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து, இரவு படுக்கும் முன் முகத்தில் தடவிக் கொள்ள வேண்டும். பிறகு மறுநாள் காலையில் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

- Advertisement -

டிப்ஸ்: 5
இது ஒரு வெள்ளரிக்காயை எடுத்து, அதன் தோலை சீவி எடுத்துவிட வேண்டும். பிறகு இவற்றை மிக்ஸி ஜாகிர் சேர்த்து நன்றாக அரைத்து, அதனை முகத்தில் தடவி விட வேண்டும். பிறகு 20 நிமிடத்திற்கு அப்படியே விட்டு விட்டு முகத்தைக் கழுவிவிட வேண்டும்.

டிப்ஸ்: 6
ஒரு கைப்பிடி வேப்பிலையை மிக்ஸி ஜாகிர் சேர்த்து, அதனுடன் அரை ஸ்பூன் எலுமிச்சை பழச் சாறையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவேண்டும். பிறகு இதனை முகத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, அதன் பிறகு முகத்தை கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்வதால் முகத்தில் இருக்கும் கிருமிகள் அழிந்து எண்ணெய் பசை குறைய ஆரம்பிக்கும்.

- Advertisement -