நீங்க நினைச்சே பார்க்க முடியாத அளவுக்கு உங்க முகத்த, சொடக்கு போடுற நேரத்துல தங்க போல பளபளன்னு மாத்திடலாமே! முகத்துக்கு இன்ஸ்டன்ட்டா இந்த பொருளை வைத்து, பாலிஷ் போடுவது எப்படி?

face3

தங்கத்துக்கும் வெள்ளிக்கும் தானே பாலிஷ் போட்டு பலபலன்னு மாற்ற முடியும். முகத்துக்கு எப்படி பாலிஷ் போடுவது என்று தானே உங்களுக்குள் இருக்கும் சந்தேகம்? முகத்தையும் பாலீஷ் போட்டது போல பளபளவென ஜொலிக்க வைக்க முடியும். மிக மிக சுலபமான இந்த பொருட்களை பயன்படுத்தி இந்த பேக்கை முகத்தில் ஒரு முறை வெறும் 2 நிமிடம் போட்டு மசாஜ் செய்தாலே போதும். உங்களுடைய முகம் பளப்பளப்பாக மாறும் 100% இயற்கையான பொருட்கள். பக்க விளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை. தாராளமாக உங்களுடைய வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க!

face7

உடனே இந்த குறிப்பை பார்த்து விடலாம் வாங்க. வாழைப்பழம் – 1, பச்சைப்பயறு பவுடர் – 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு –  1/2 ஸ்பூன், ஆலிவ் ஆயில் – 1 டேபிள்ஸ்பூன், ஆலிவ் ஆயிலை தவிர்க்க வேண்டாம். கட்டாயம் சேர்க்க வேண்டும். முதலில் வாழைப்பழத்தில் இருக்கும் தோலை நீக்கி விட்டு, மிக்ஸி ஜாரில் போட்டு 2 டேபிள் ஸ்பூன் அளவு தண்ணீரை ஊற்றி நைஸாக அரைத்து ஒரு பௌலில் மாற்றிக்கொள்ள வேண்டும்.

இந்த வாழைப்பழ விழுதுடன்  2 டேபிள்ஸ்பூன் அளவு பச்சைப்பயிறு பொடி எலுமிச்சை பழச்சாறு, ஆலிவ் ஆயில், இவைகளை சேர்த்து திக் பேஸ்டாக தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் ஒரு வாரம் வரை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

pachai_payaru

உங்களுடைய முகத்தில் இந்த க்ரீமை அப்ளை செய்வதற்கு முன்பாக முகத்தை வெதுவெதுப்பான நீரினால் கழுவி துடைத்து விடுங்கள். அதன் பின்பு கொஞ்சமாக இந்த க்ரீமை கையில் எடுத்து உங்களுடைய முகம் முழுவதும் அப்ளை செய்து, வெறும் 2 நிமிடங்கள் லேசாக ஸ்கரப் செய்து மசாஜ் செய்தால் போதும். அதன் பின்பு 5 லிருந்து 10 நிமிடங்கள் இதை காய விட்டு விட வேண்டும்.

அவ்வளவுதாங்க! முகத்தை கழுவிட்டு கண்ணாடியில் பாருங்கள். நிச்சயமா உங்களுடைய முகம் பாலிஷ் போட்ட மாதிரி பளபளன்னு மாறி இருக்கும். நீங்கள் முன்னாடி இருந்த கலருக்கும், இப்போது இருக்கும் முகத்திற்கும் நிச்சயமாக நல்ல, மிகமிக நல்ல வித்தியாசத்தை உணர்வீர்கள். தினமும் இதை பயன்படுத்தி வரலாம். எந்த ஒரு பக்க விளைவுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு கிடையாது.

திடீரென்று எங்கேயாவது வெளியே கிளம்ப வேண்டும் என்றாலும் மேக்கப் போடுவதற்கு முன்பு இதை ஒரு முறை முகத்தில் போட்டு 2 இரண்டு நிமிடம் ஸ்கரப் செய்து முகத்தை கழுவி விட்டு மேக்கப் போட்டால் அது வேற லெவல்ல இருக்கும். முகம் ரொம்ப களைத்துப் போய் இருந்தாலும் இதை முகத்தில் போட்டு ஒரு முறை தேய்த்து கழுவி விட்டாலே போதும். முகம் இன்ஸ்டன்டா பளபளன்னு மாறிடும். அதான் பாலிஷ் போட்ட மாதிரி. ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா மிஸ் பண்ணாதீங்க.