வீட்டிலேயே எளிமையான முறையில் பேசியல் செய்யும் முறை.

facial
- Advertisement -

பொதுவாக பண்டிகை நாட்கள் அல்லது விசேஷ காலங்கள் என்று வரும்பொழுது நாம் அனைவரும் நம் வீட்டை சுத்தம் செய்து வீட்டை புதிது போல மாற்றுவோம். அதேபோல்தான் சிலரோ தங்கள் முகத்தையும் அழகாக இருக்க வேண்டும் என்று நினைத்து பேசியல் செய்வார்கள். ஒவ்வொரு விசேஷத்திற்கும் இந்த மாதிரி பேசியல் செய்யும் பொழுது அதனால் முகத்திற்கு பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. பண்டிகை விசேஷ நாட்களிலும் பிரகாசமாக தெரிய வேண்டும் என்று நினைப்பவர்கள் வீட்டிலேயே எளிய முறையில் பேசியல் எப்படி செய்யலாம் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

ஒரு விசேஷம் நடக்கும் இடத்திற்கு நாம் செல்லும் பொழுது நம்மை பார்த்து அழகா இருக்காலே என்று சொல்லும் பொழுது நம்மை அறியாமல் நம் மனதிற்குள் ஒருவித மகிழ்ச்சி தோன்றும். அந்த மகிழ்ச்சிக்காகத்தான் ஆடை அலங்காரங்கள் என்று பலவற்றையும் பெண்கள் செய்கிறார்கள். அப்படி பிரகாசமாக தெரிவதற்கு வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து எளிமையான முறையில் பேசியல் செய்யும் முறையை பார்ப்போம்.

- Advertisement -

பொதுவாக பேசியல் செய்வதற்கு நான்கு நிலைகள் இருக்கின்றன. கிளன்சிங், ஸ்கரப்பிங், ஸ்ட்ரீமிங், ஃபேஸ் பேக். இப்பொழுது கிளன்சிங் செய்வதற்கு ஒரு பவுலில் ஒரு டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பச்சை பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறை சேர்த்து நன்றாக கலந்து ஒரு காட்டன் துணியை பயன்படுத்தி முகத்தில் தடவி நன்றாக துடைத்து எடுக்க வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் அனைத்தும் நீங்கிவிடும்.

அடுத்ததாக ஸ்க்ரப்பிங் செய்வதற்கு இரண்டு ஸ்பூன் அளவு காபி தூளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு தேனை சேர்த்து அது பேஸ்ட் பதத்திற்கு வருவதற்கு தேவையான அளவு பன்னீரை ஊற்றி நன்றாக கலந்து முகத்தில் தடவ வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து கைகளை வைத்து மிருது மிருதுவாக வட்ட வடிவில் மசாஜ் செய்து முகத்தை கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் அனைத்தும் நீங்கிவிடும். காபித்தூள் வாசனை பிடிக்காதவர்கள் அதற்கு பதிலாக அரிசி மாவை உபயோகப்படுத்தலாம்.

- Advertisement -

மூன்றாவதாக ஸ்ட்ரீமிங் ஒரு அகலமான பாத்திரத்தில் பாதி அளவிற்கு தண்ணீர் பிடித்து நன்றாக சூடு பண்ணி அதில் 2 ஸ்பூன் பன்னீரை ஊற்ற வேண்டும். ஒரு கனமான போர்வையை பயன்படுத்தி முகத்தில் அந்த ஆவி படும்படி ஆவி பிடிக்க வேண்டும். கடைசியாக ஃபேஸ் பேக் இதற்கு இரண்டு ஸ்பூன் கடலை மாவை எடுத்து அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதில் ஒரு டீஸ்பூன் சந்தன பொடியை சேர்த்து கடைசியாக ஒரு டேபிள் ஸ்பூன் தக்காளி சாறையும் சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு தயார் செய்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி அரைமணி நேரம் வரை அப்படியே விட்டு விட வேண்டும். அரை மணி நேரம் கழித்து கழுவ முகத்தில் ஒருவித பிரகாசம் தென்படும்.

இதையும் படிக்கலாமே: முடி உதிர்வை தடுக்கும் கேசவர்த்தினி

பார்லருக்கு செலவு செய்யாமல் நாமே நம் வீட்டில் எளிமையான முறையில் பேசியல் செய்து கொள்ளலாம்.

- Advertisement -