- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசண்டை சச்சரவுகள் நீங்க ஆஞ்சநேயர் வழிபாடு

சண்டை சச்சரவுகள் நீங்க ஆஞ்சநேயர் வழிபாடு

- Advertisement -

வீட்டில் இருப்பதே ரெண்டு பேர் இருந்தாலும் எப்பொழுதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். ஏன் வீட்டிற்கு வரவேண்டும்? வெளியில் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் கூட தோன்றும். இதுவே அன்றைய காலத்தில் கூட்டு குடும்பமாக இருந்தாலும் சண்டை சச்சரவுகள் இல்லாமல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தார்கள்.

அப்படிப்பட்ட இல்லங்களில் எப்பொழுது நேரமாகும் வீட்டிற்கு செல்லலாம், மகிழ்ச்சியாக இருக்கலாம் என்ற எண்ணம் மேலோங்கும். அதுவே உண்மையான மகிழ்ச்சியாகவும் கருதப்படுகிறது. அப்படி நம்முடைய வீட்டில் மகிழ்ச்சி ஏற்படவும், நிம்மதி கிடைக்கவும், சண்டை சச்சரவுகள் நீங்கவும் ஆஞ்சநேயரை எப்படி வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

ஒரு வீட்டில் அதிகப்படியாக சண்டைகள் நடக்கிறது என்றால் அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். மேலும் இந்த சண்டையை தொடர்ந்து கொண்டே செல்லும் பொழுது கண்டிப்பாக முறையில் அந்த வீட்டில் எந்த வித தெய்வத்தின் அருளும் இருக்காது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களை நீக்கி சண்டைகள் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை அருள்வதற்கு ஆஞ்சநேயர் நமக்கு துணை புரிவார்.

வீட்டில் இருக்கும் சண்டைகள் நீங்க ஆஞ்சநேயர் வழிபாடு
இந்த வழிபாட்டை வியாழக்கிழமை அல்லது சனிக்கிழமையில் தொடங்கலாம். அன்றைய தினம் சந்திராஷ்டமம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த வழிபாட்டிற்கு நமக்கு ராம பஜனை செய்யும் ஆஞ்சநேயரின் படம் வேண்டும். அந்த படத்தை வாங்கி வீட்டு பூஜையில் வைத்துக்கொள்ள வேண்டும். அந்த படம் கிடைக்காத பட்சத்தில் சாதாரணமான ஆஞ்சநேயர் படமாக இருந்தாலும் பரவாயில்லை அதைக் கூட வாங்கி வந்து வைத்துக் கொள்ளலாம். முடிந்த அளவுக்கு ராம பஜனை செய்யும் ஆஞ்சநேயர் படத்தை உபயோகப்படுத்துவது நல்லது.

- Advertisement -

அடுத்ததாக இந்த வழிபாட்டிற்கு நமக்கு முக்கியமாக தேவைப்படுவது துளசி இலை. 21 என்று எண்ணிக்கையில் துளசி இலையை பறித்து அதை ஒரு நூலில் மாலையாக கட்ட வேண்டும். கட்டிய இந்த மாலையை கையில் வைத்துக் கொண்டு “ஸ்ரீராமா ஜெயராமா ஜெய் ஜெய் ராமா” என்னும் ராம மந்திரத்தை 21 முறை உச்சரிக்க வேண்டும். பிறகு நாம் கையில் வைத்திருக்கும் மாலையை எடுத்து ஆஞ்சநேயரின் படத்திற்கு போட்டு விட வேண்டும்.

இப்படி தொடர்ந்து 21 நாட்கள் நாம் முழு மனதுடன் ஆஞ்சநேயரை துளசியை வைத்து வழிபாடு செய்ய ஆஞ்சநேயரின் அருளால் வீட்டில் இருக்கக் கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கும். வீட்டில் இருக்கக்கூடிய சண்டை சச்சரவுகள் அனைத்தும் நீங்கி, ஒற்றுமையான மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும்.

இதையும் படிக்கலாமே: போட்டி பொறாமை, கண் திருஷ்டி விலக வெண்கடுகு பரிகாரம்

மிகவும் புனித தன்மை கொண்ட துளசியை வைத்து முழு நம்பிக்கையுடன் ஆஞ்சநேயரை இந்த முறையில் நாம் வழிபட கண்டிப்பான முறையில் நம் வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

சற்று முன்