தினேஷ் கார்த்திக்கே தோல்விக்கு முழுக்காரணம் – இணையத்தில் வெளுத்து வாங்கும் ரசிகர்கள்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று வெலிங்டனில் இன்று நடந்தது. டாஸ் வென்று முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா.அதன்படி நியூசிலாந்து பேட்டிங் செய்ய துவங்கியது.

Newzealand

அதிரடியாக ஆடிய நியூசிலாந்து அணி முதலில் 219 ரன்கள் என்ற இமாலய ரன்களை அடித்தது. பிறகு ஆடிய இந்திய அணி 139 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இந்த போட்டியின் தோல்விக்கு தினேஷ் கார்த்திக்கே முழு காரணம் என்று இணையத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர். முதலில் ஆடிய நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரரான செபர்ட் 43 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார் அவரது அதிரடியை அவ்வளவு பெரிய ஸ்கோர் வர காரணம்.

Karthick

ஆனால், அவர் வெறும் 17 ரன்களில் இருந்தபோது கைக்கு எளிதாக வந்த கேட்சை இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கோட்டை விட்டார். சிறியவர்கள் கூட எளிதாக பிடிக்கும் அந்த கேட்சை விட்டதால் தான் இந்திய அணி இவ்வளவு மோசமான தோல்வியை அடைந்தது என்று கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது கோபத்தினை தங்களது பதிவின் மூலம் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே :

சிறிய மைதானம் இருந்தும் நாங்கள் படுதோல்வி அடைந்ததுக்கு இதுவே காரணம் – ரோஹித் வேதனை

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்