சிறிய மைதானம் இருந்தும் நாங்கள் படுதோல்வி அடைந்ததுக்கு இதுவே காரணம் – ரோஹித் வேதனை

rohith-sad
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று வெலிங்டனில் இன்று நடந்தது. டாஸ் வென்று முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா.அதன்படி நியூசிலாந்து பேட்டிங் செய்ய துவங்கியது.

Team

அதிரடியாக ஆடிய நியூசிலாந்து அணி முதலில் 219 ரன்கள் என்ற இமாலய ரன்களை அடித்தது. பிறகு ஆடிய இந்திய அணி 139 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்திய அணியின் இந்த தோல்வி குறித்து பேட்டி ஒன்றினை அளித்தார்.

- Advertisement -

அதில் ரோஹித் கூறியதாவது : சிறிய மைதானம் என்பதால் சேசிங் செய்வது எளிது என்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்தேன். ஆனால், நியூசிலாந்து அணி பெரிய ஸ்கோரை இலக்காக நிர்ணயித்தது. நாங்கள் பேட்டிங் செய்ய இறங்கியபோது தொடக்கத்தில் விக்கெட்டை இழந்துவிட்டோம். மேலும், இதுபோன்ற சிறிய மைதானங்களில் ஆடும்போது பாட்னர்ஷிப் அவசியம் அதும் இந்த போட்டியில் நடக்கவில்லை.

Dhawan

மேலும், டாஸ் மற்றும் பீல்டிங் சொதப்பல் மற்றும் சரியான பாட்னர்ஷிப் அமையாதது என பல காரணங்களால் இந்த போட்டியில் நம் அணி தோல்வியை தழுவியது. ஆரம்பத்தில் விக்கெட்டை கொடுக்காமல் இருந்திருந்தால் கிட்டத்தட்ட நல்ல விகிதத்தில் நெருங்கி இருந்திருப்போம் என்று ரோஹித் வேதனையுடன் தெரிவித்தார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

151 கி.மீ அசுர வேகத்தில் வீசிய நியூசி வீரர் சாதனை. ஸ்டம்பை தகர்த்து வெளியேற்றப்பட்ட தவான்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -