உங்க ஃபேவரைட் கலர் இது தானா? அப்படின்னா நீங்க இப்படி தான் இருப்பீங்க!

favourite-colour-astro
- Advertisement -

ஒருவரின் ராசியை வைத்து அல்லது நட்சத்திரத்தை வைத்து அவர்களின் குணநலன்கள் இப்படித்தான் இருக்கும் என்கிற ஜோதிட பலன்களை கூறுவதை பார்த்திருப்போம். ஆனால் எல்லோருக்கும் எல்லா நிறமும் பிடித்திருந்தாலும் ஒரு சிலருக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமே அதீத விருப்பம் கொண்டதாக இருக்கும். அந்த நிறத்தின் மீது இவர்களுக்கு இருக்கும் மோகம் இவர்கள் எப்படிப்பட்டவராக இருக்கக்கூடும்? என்பதை காட்டிவிடும். அந்த வகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த நிறங்களை அதிகம் விரும்புபவர்கள் இப்படித்தான் பொதுவாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பச்சை:
பச்சை நிறம் கொண்டவர்கள் தங்களுடைய தோற்றத்தின் மீது அதிக விருப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள். குளித்து முடித்து பிரஷ்ஷாக இருந்தால் தான் போட்டோவுக்கு போஸ் கொடுப்பார்கள். இல்லையென்றால் என்னதான் கட்டாய படுத்தினாலும் இவர்கள் தன் முகத்தை கூட காட்ட விரும்புவதில்லை. நேர்மையும், துணிச்சலும் அதிகம் கொண்ட இவர்களுக்கு எல்லா மனிதர்களும் சமமானவர்களே! பாகுபாடு இல்லாமல் பழகும் இவர்களுக்கு பல பிரச்சனைகள் வந்தாலும் அதனை தன் சுய புத்தியால் எதிர் கொள்வார்கள். மற்றவர்களின் பேச்சை எளிதில் இவர்கள் நம்புவது இல்லை.

- Advertisement -

சிகப்பு:
சிகப்பு நிறத்தை அதிகம் விரும்புபவர்கள் எப்போதும் ஒருவித எச்சரிக்கை உணர்வுடன் இருப்பார்கள். தங்களை சுற்றி எல்லாம் சரியாக நடக்கிறதா? இல்லையா? என்பதில் கூர்ந்து கவனித்து கொண்டிருப்பார்கள். ஆளுமை திறன் உள்ள இவர்களுக்கு எப்போதும் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்வதில் விருப்பம் இருக்கும். எவ்வளவு பேர் இருந்தாலும் தனியாக நின்று எல்லோரையும் சமாளித்து விடுவார்கள். பேச்சால் மற்றவர்களை எளிதாக கவரும் இவர்களுக்கு மற்றவர்களை ஏமாற்றி பிழைப்பது அறவே பிடிக்காது. யாரையும் ஏமாற்றக் கூடாது என்று நினைக்கும் இவர்களை பலரும் பயன்படுத்திக் கொள்வது உண்டு.

வெள்ளை:
வெள்ளை உள்ளம் படைத்த இவர்கள் வெள்ளை நிறத்தை விரும்புவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. பல விஷயங்களை போட்டு குழப்பிக் கொள்ளாமல் ஒரே தெளிவான சிந்தனையுடன் முடிவு எடுப்பதில் வல்லவர்கள். பத்து பேர் சேர்ந்து இவர்களை குழப்ப நினைத்தாலும் சாமர்த்தியமாக தன்னுடைய அறிவாற்றல் மூலம் தனக்கு எது சரி என்று படுகிறதோ அதை மட்டுமே செயல்படுத்துவார்கள். கொடை உள்ளம் கொண்ட இவர்களுக்கு மற்றவர்களுக்கு உதவுவதில் நாட்டம் அதிகம் இருக்கும். யார் எதைக் கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் கொடுத்து விடுவார்கள். அதிலும் குறிப்பாக இவர்களுக்கு பிடித்தவர்கள் மீது தனி கவனம் செலுத்தி விடுவார்கள்.

- Advertisement -

கறுப்பு:
கறுப்பு நிறத்தை விரும்புபவர்கள் எப்போதும் அன்பைத்தேடி செல்பவர்களாக இருப்பார்கள். அன்பு ஒன்றே தவிர வேறு எதற்கும் இவர்கள் அடிமை ஆவது இல்லை. காரணம் இல்லாமல் இவர்கள் யாரிடமும் பழகுவதும் இல்லை. ஒருமுறை இவர்களுக்கு ஒருவரை பிடித்து விட்டால் கடைசி வரை அவர்களை அப்படியே பிடித்துப் போய்விடுகிறது. தன்னை ஏமாற்றியவர்களை கூட மன்னிக்கும் குணம் படைத்த இவர்களின் கண்களுக்கு பலரும் அடிமையாகி போயிருப்பார்கள். குறிப்பாக கறுப்பு நிறத்தை விரும்பும் பெண்களுக்கு மீன் போன்ற கண்கள் இருக்கும்.

நீலம்:
நீல நிறத்தை விரும்பும் நபர்கள் எப்போதும் கவர்ச்சியாக தோற்றமளிப்பார்கள். மற்றவர்களின் பேச்சை எளிதில் நம்பிவிடுவார்கள் ஒரு விஷயத்திற்கு முடிவு எடுத்துவிட்டால் அதிலிருந்து பின் வாங்குவது இல்லை. எந்த ஒரு முடிவையும் மற்றவர்களுடன் ஆலோசிக்காமல் இவர்கள் தீர்க்கமாக எடுப்பது இல்லை. பரந்து விரிந்த மனம் கொண்ட இவர்களுக்கு கஷ்டப்படுபவர்களை கண்டால் கண்கள் கலங்கிவிடும். இவர்களுக்கென ஒரு தனி நட்பு வட்டம் எப்போதும் தனித் தன்மையுடன் காணப்படும். சிறகுகள் விரித்து சுதந்திரமாக பறக்க நினைக்கும் இவர்கள் தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

ஆரஞ்சு:
ஆரஞ்சு நிறத்தை விரும்பும் இவர்களுக்கு அழகிய தோற்றம் கண்டிப்பாக இருக்கும். தன் கள்ளம் கபடம் இல்லாத அன்பை பலரும் பயன்படுத்தி ஏமாற்றி விடுவது உண்டு. பல தடைகளை தாண்டி வெற்றிக்கான இலக்கை நோக்கிப் பயணிக்கும் இவர்களுக்கு எவ்வளவு துன்பங்கள் வந்தாலும், அடிமேல் அடிவாங்கி தன்னை திடப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் அதிகரிக்கும். குடும்பத்தை அதிகம் நேசிப்பவர்களாக இருக்கும் இவர்களுக்கு யாரிடமும் குறை கண்டுபிடிக்க தெரிவதில்லை. அதனால் தான் என்னவோ பலருக்கும் இவர்களை பிடிப்பதில்லை.

பிங்க்:
பொதுவாக இந்த நிறத்தை ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் விரும்புகின்றனர். உடையாக இருந்தாலும், அவர்கள் பயன்படுத்தும் எந்த பொருளாக இருந்தாலும் அதில் பிங்க் நிறம் இருந்தால் உடனே வாங்கிவிடுவது உண்டு. பிங்க் நிறத்தில் மீது மோகம் கொண்ட பெண்கள் பொதுவாக குழந்தை மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். சட்டென கோபப்பட்டாலும் இவர்கள் எதையும் மனதில் வைத்துக் கொள்வதில்லை. பிங்க் நிறத்தை விரும்பும் ஆண்களுக்கு பெண்களின் குணத்தை புரிந்து கொள்ளும் ஆற்றல் சற்று அதிகமாகவே இருக்கும். பெற்ற அன்னையையும், கட்டிய மனைவியையும் இரு கண்களாக கருதி மரியாதை கொடுத்து பழகுவார்கள்.

- Advertisement -