பிப்ரவரி மாத பலன்கள் – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

feb-month-rasi-palan
- Advertisement -

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு அமைப்பை கொடுக்கக் கூடியதாக இருப்பதால் ராசிபலன் பொதுவாக கணிக்கப்படுகிறது. கிரகங்களின் நிலைக்கு ஏற்ப 12 ராசிகளுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைக் கூறிவிட முடிகிறது. அந்த வகையில் ஆங்கில மாதமான பிப்ரவரி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கப்போகிறது? என்பதைத்தான் இந்த பதிவில் காண இருக்கிறோம்.

மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் அற்புதமான நல்ல பலன்கள் உண்டாக போகிறது. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யாமல் நிதானமாக யோசித்து எந்த ஒரு முடிவையும் எடுப்பது உசிதமானது. தொழில் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்பது கைக்கு கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். எதையும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. வியாபாரத்தில் விருத்தி உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை அதிகரித்தாலும் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பொருளாதாரம் படிப்படியாக ஏற்றம் காணும் என்பதால் கவலை கொள்ளத் தேவையில்லை. விநாயகரை வழிபடுதல் நல்லது.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் இனிய மாதமாக அமைய இருக்கிறது. நீங்கள் இதுவரை நடக்கவில்லையே என்று நினைத்த ஒரு விஷயம் உங்கள் கண் முன்னே நடக்க இருக்கிறது. சுபகாரியத் தடைகள் விலகி பெற்றோர்களுடைய கனவு நிறைவடையும் யோகம் உண்டு. தொழில் ரீதியான பண வரவு திருப்தியாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் என்பதால் எதிர்காலம் பற்றிய கவலையை தவிர்ப்பது நல்லது. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்குவதில் எச்சரிக்கை தேவை. சண்டிகேஸ்வரரை வழிபடுங்கள்.

மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நீங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை, சச்சரவுகள் ஏற்படலாம் என்பதால் கூடுமானவரை விட்டுக் கொடுத்து செல்ல முயற்சிப்பது நல்லது. புதிய வரவு ஒன்று குடும்பத்தில் உங்களை குதூகலப்படுத்த இருக்கிறது. வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் முன் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற வீண் பழிகள் ஏற்படும் என்பதால் உத்தியோகஸ்தர்களுக்கு கவனம் தேவை. சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் பெறலாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் நன்மதிப்பு பெறுவதற்கு இடையூறுகள் ஏற்படலாம் என்பதால் விழிப்புணர்வு தேவை. ஆரோக்கியம் படிப்படியான முன்னேற்றம் காணும்.

- Advertisement -

கடகம்:

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் கடமையில் கூடுதல் அக்கறை தேவை. அலட்சியம் உங்களுக்கு பல்வேறு இழப்புகளை ஏற்படுத்தி விடக்கூடும் என்பதால் பொறுப்புணர்வுடன் செயலாற்றுவது நல்லது. கணவன், மனைவிக்கு இடையே இருக்கும் அவசியமான சந்தேகத்தை தவிர்ப்பது பல பிரச்சனைகளை எதிர்கொள்ள உதவும். சுய தொழிலில் ஏற்றம் காணும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் முன் கோபத்தை குறைத்து நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. புதிய முயற்சிகளுக்கு பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் உங்கள் பாதையை நோக்கி பயணிப்பது நல்லது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் துணிச்சலான முடிவுகளை எடுக்கக் கூடிய நல்ல மாதமாக அமைய இருக்கிறது. திடீர் திடீரென சில உங்களை குழப்பத்திற்கு உள்ளாக்கும். எதற்கும் தளர்வடைந்து உங்கள் சுய அறிவை பயன்படுத்துவது உத்தமம். கணவன், மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகளை பேசி தீர்த்துக் கொள்வீர்கள். சுயதொழிலில் தொழில்ரீதியான பரிமாற்றம் நட்பு வட்டத்தை விரிவடையச் செய்யும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலும் உங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். வம்பு வழக்குகளில் சாதக தீர்ப்பு காணலாம். எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை அளிக்கும் என்பதை நினைவில் வைத்து செயல்படுவது நல்லது.

கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் அனுகூலம் தரும் அமைப்பாக இருப்பதால் உங்களுக்கு மகிழ்ச்சியான மாதமாக அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பேச்சுவார்த்தைகளில் கடுமையை குறைத்துக் கொள்வது நல்லது. அனாவசிய வம்பு வழக்குகளில் மூக்கை நுழைக்காமல் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது உத்தமம். தொழில் ரீதியான கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சினைகளை சுமுகமாக முடித்துக் கொள்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபார விருத்தி ஏற்படுவதற்கு புதிய யுத்திகளை பயன்படுத்துவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தி அடையக் கூடியதாக இருப்பதால் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் ஏற்றும் தரக்கூடிய அமைப்பு என்பதால் புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். நீங்கள் எதிர்பார்ப்பதை விட லாபம் பன்மடங்கு பெருகும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் ஏற்றம் காணும் என்பதால் வீட்டு தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் மேலும் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது. சுய தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கை வசப்படும். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் தொல்லை ஊட்டுவதாக அமையும் என்றாலும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். செவ்வாய்க் கிழமையில் துர்க்கை வழிபாடு செய்வது உத்தமம்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நீங்கள் நினைத்ததை நினைத்தபடி சாதித்துக் காட்டும் யோகமுண்டு. சுய தொழிலில் நீங்கள் புதிய பங்குதாரர்களுடன் இணையும் பொழுது கவனத்துடன் இருப்பது நல்லது. மூன்றாம் மனிதர்களை நம்பி ஒப்படைக்கும் காரியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உங்கள் திறமை மேலும் மெருகேறும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே புரிதலை வளர்த்துக் கொள்வது நல்லது. வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் சாதகப் பலன் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு.

தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நீங்கள் அக்கறையுடன் செயல்பட வேண்டியது மிகவும் முக்கியம். பொறுப்பற்ற தன்மை அவமானங்களை ஏற்படுத்தலாம். குடும்ப பாரம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பெற்றோர்களுக்கு மதிப்பு கொடுத்து நடந்து கொண்டால் ஏற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகளுக்கு வரவேற்பு உண்டாகும். வெளியிட பயணங்களின் பொழுது உடைமை மீது கவனம் தேவை. பொருளாதார ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளித்து வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்து விடுவீர்கள். தகுந்த சமயத்தில் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் மனதில் இருக்கும் குழப்பங்களுக்கான விடை கிடைக்கும் அற்புத மாதமாக இருக்கிறது. நீண்டநாள் இழுபறியில் இருந்து வந்த ஒரு காரியம் முடிவுக்கு வர இருக்கிறது. குடும்பத்தில் தந்தை வழி உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீர்வதற்கான வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி பிரச்சினைகள் படிப்படியாக குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ள உங்களை இதுவரை புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். உத்யோகஸ்தர்களுக்கு சக பணியாளர்கள் உடைய ஆதரவு கிடைக்கும். சமுதாயத்தில் நன்மதிப்பு உண்டாகும். ஆரோக்கியத்தை கவனிப்பது நல்லது.

கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் அனுகூல தரக் கூடிய அற்புத மாதமாக அமைய இருக்கிறது. நீங்கள் இதுவரை கிடைத்திராத அங்கீகாரத்தை பெற இருக்கிறீர்கள். தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புத வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் சாதகப் பலன் உண்டு. சுய தொழிலில் இருப்பவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் தீரும். தேவையற்ற கடன்கள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் விருத்தி உண்டாகும். புதிய யுக்திகளை கையாளுவீர்கள். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் உண்டு. பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். நீலகண்டேஸ்வரரை வழிபடுவது நல்லது.

மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நல்ல மாதமாக அமைகின்றது. நீங்கள் எதிர்பார்க்கும் தனலாபம் பெருகும். பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்டநாள் நண்பர் ஒருவரைக் காணும் யோகம் உண்டு. சுபகாரிய முயற்சிகளில் தடை இல்லாத வெற்றி உண்டாகும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுபச் செய்திகள் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு சக பணியாளர்களுடன் இருந்து வந்த போட்டி, பொறாமைகள் குறையும். வெளியூர் பயணங்களின் போது கவனம் தேவை. நண்பர்களின் உதவிக்கரம் கிடைக்கக்கூடும். எதையும் போட்டு அலட்டிக் கொள்ளாமல் வருவது வரட்டும் என்று இருப்பது நல்லது. சனிக்கிழமையில் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -