வீட்டில் வற்றாத செல்வ வளத்தை பெற, பெண்கள் புதன்கிழமை அன்று கட்டாயம் இதை செய்ய வேண்டும்..

perumal-venthayam

பொதுவாகவே ஒரு குடும்பத்தை, நல்ல முறையில் வழிநடத்திச் செல்ல வேண்டிய கடமை குடும்பத் தலைவிக்கு உள்ளது. அதாவது ஒரு வீட்டின் தலைமைப் பொறுப்பை எடுத்து நடத்தக்கூடிய அந்த பெண்ணாக பட்டவள், கட்டாயமாக புத்திக்கூர்மையோடும், தெளிவோடும் இருக்க வேண்டியது மிக மிக அவசியம். ஏனென்றால் அறிவாற்றலும், திறமையும் நிறைந்த ஒரு பெண்ணால் மட்டுமே குடும்பத்தை பக்குவமாக முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முடியும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இப்படி இருக்க, இத்தனை பொறுப்புகளை உடைய ஒரு பெண்ணின் புத்தி கூர்மையாக இருக்க வேண்டும் என்றாலும், அவள் வழிநடத்திச் செல்லும் குடும்பமானது எப்போதுமே தன தானியம் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்றாலும், புதன்கிழமை அன்று குடும்பத்தலைவி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

wednesday

இந்த பரிகாரத்தை செய்யாத பெண்மணிகள் எல்லாம் புத்திசாலித்தனம் இல்லாதவர்கள் என்று சொல்ல வரவில்லை. புதன்கிழமை அன்று இந்த ஒரு விஷயத்தை செய்தால், அந்தப் பெண்ணின் புத்திக்கூர்மை மேலும் அதிகரிக்கும். அவருடைய அறிவாற்றல் மேலும் அதிகரிக்கும் என்பதை குறிப்பிடுவதற்காக இந்த பதிவு. நம்பிக்கையுள்ளவர்கள் இதை தொடர்ந்து 11 வாரங்கள் முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கு நல்ல பலன் அளித்தால் வாழ்நாள் முழுவதும் இந்த ஒரு விஷயத்தை கடைப்பிடிப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை. நம்முடைய குடும்ப நன்மைக்குத் தானே!

புதன்கிழமை அன்று, பெண்கள் வெந்தய குளியலை எடுத்துக்கொள்வது, மிகவும் நல்லது என்று சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது செவ்வாய்க் கிழமை இரவே, சிறிதளவு வெந்தயத்தை தண்ணீரில் போட்டு ஊற வைத்துக் கொள்ளவும். அதன் பின்பு புதன்கிழமை, அந்த வெந்தயத்தை நன்றாக அரைத்து, காலை 6.00 மணியிலிருந்து 6.30 மணிக்குல், தலையில் தேய்த்து, தலைக்கு குளித்து விட வேண்டும். வெகுநேரம் தலையில் வெந்தயத்தை ஊற வைத்துவிட வேண்டாம். குளிர்ச்சியான உடல்வாகு கொண்டவர்களுக்கு காய்ச்சல் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Venthayam

இப்படி வாரந்தோறும் புதன்கிழமை அன்று வெந்தய குளியலை குளித்து வர, அந்தப் பெண்ணின் புத்தி கூர்மையையும் அதிகரிக்கும், அந்தப் பெண்மணி வசிக்கும் வீட்டின் தன தானிய திருக்கும் எந்த ஒரு குறைபாடும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இதோடு சேர்த்து புதன்கிழமை அன்று உங்கள் வீட்டின் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து வந்தால், மேலும் அதிக பலனை அடையலாம்.

- Advertisement -

அதாவது, வீட்டில் எதிர்பாராமல் ஏதாவது ஒரு பிரச்சனை என்று வந்தால், அதற்கான நல்ல முடிவினை எடுக்க வேண்டிய கடமை அந்த வீட்டின் குடும்பத் தலைவியான பெண்ணுக்குத்தான் உள்ளது. இப்படிப்பட்ட இந்தப் பெண், “எந்த நேரத்தில் எந்த முடிவை எடுக்க வேண்டும். எந்த நேரத்தில் எந்த முடிவை எடுக்கக் கூடாது”. என்பதையும் தெளிவாக தீர்மானிக்க வேண்டும். தன் கணவர் தன் கையில் கொடுக்கும் வருமானத்தை வைத்து, சிக்கனம் பிடித்து, தன்னுடைய குடும்பத்தை எப்படி மேலோங்க செய்ய வேண்டும்?

Venthayam

இப்படி பல வகையான புத்திசாலித்தனமான முடிவுகளை எடுப்பதற்கும் இந்த வெந்தய குளியல் மிகவும் உதவியாக இருக்கும். வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமியை நினைத்து, நெல்லிக்காயை தலைக்கு தேய்த்து குளித்தால் எவ்வளவு நல்லதோ, அதே போல் புதன்கிழமை வெந்தயக் குளியலிடேவது என்பது, ஒரு பெண்ணுக்கு மிக மிக நல்ல பலனைக் கொடுக்கும். திருமணம் ஆன பெண்கள் தான் வெந்தய குளியலிட வேண்டுமா? என்ற சந்தேகம் வேண்டாம். திருமணமாகாத பெண்களும் வெந்தய விழுதை தலையில் தேய்த்துக் குளிப்பதில் தவறில்லை.

இதையும் படிக்கலாமே
இந்த உடைகளை மட்டும் சுமங்கலி பெண்கள் கட்டாயம் உடுத்தவே கூடாது. குடும்பத்திற்கு தரித்திரத்தை ஏற்படும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Venthayam benefits for hair in Tamil. Venthayam Tamil. Fenugreek hair mask benefits. Venthayam benefits in Tamil. Venthayam uses for hair.