பூக்காத செம்பருத்தியும் கொத்துக் கொத்தாக பூக்க அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் இந்த ஒரே 1 பொருள் போதுமே!

sembaruthi-venthayam

செம்பருத்தி செடியை வளர்ப்பவர்களுக்கு அதன் முக்கியத்துவம் தெரிந்து வைத்திருப்பது மிகவும் நல்லது. செம்பருத்தி செடியில் ஆன்மீக ரீதியாகவும், ஆரோக்கிய ரீதியாகவும் எண்ணற்ற பலன்களை நாம் பெறலாம். தலைமுடி வளர்ச்சிக்கும், குளியல் பவுடர் தயாரிப்புக்கும் அதிகம் பயன்படும் செம்பருத்தி அனைவரது வீட்டிலும் வளர்ப்பது நல்ல ஒரு அதிர்ஷ்டத்தையும் தரும். அதிர்ஷ்ட செடிகளில் செம்பருத்திச் செடியும் குறிப்பிடத்தக்க செடியாக இருந்து வருகிறது. செம்பருத்தி செடியை வீட்டில் வளர்ப்பவர்களுக்கு நல்ல அதிர்வலைகள் கிடைக்கும்.

உங்களுடைய செம்பருத்தி செடியில் மொட்டுக்கள் துளிர்ப்பது தடைபட்டு இருந்தால் அதற்கு உங்கள் வீட்டில் இருக்கும் சமையலறையில் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தக் கூடிய மற்றும் அஞ்சறைப் பெட்டியில் இருக்கக் கூடிய இந்த ஒரு பொருள் நல்ல ஒரு தீர்வாக அமையும். இந்த பொருளை சரியாக பயன்படுத்தினால் பூக்காத செம்பருத்தி செடி கூட கொத்துக் கொத்தாக நிறைய மொட்டுகளை துளிர்த்து, பெரிது பெரிதான பூக்களை உங்களுக்கு கொடுக்கும். செம்பருத்தி செடிக்கு அப்படி என்ன கொடுக்கலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

செம்பருத்தி செடியை பொறுத்தவரை நல்ல வெயில் தேவைப்படும் ஒரு செடி ஆகும். வெயில் குறைவாக இருக்கும் இடங்களில் செம்பருத்தி செடி அவ்வளவாக செழிப்பை தருவதில்லை. நன்கு செழிப்புள்ள செம்பருத்தி செடி வெயில் படும் இடங்களில் தான் வளரும். அதிகமாக பூக்களையும் நமக்கு கொடுக்கும். நல்ல வெயில் உள்ள இடத்தில் செம்பருத்தி செடியை வைத்து பாருங்கள். அடிக்கடி அதற்கு தேவையான தண்ணீரை தெளித்துக் கொண்டே வர வேண்டும். எந்த ஒரு செடிக்கும் முதன்மையான டிப் என்றால் அது மண்ணின் வளத்தை நாம் சரி பார்ப்பது தான்.

uram4

இறுக்கமாக இருக்கும் மண் கொண்ட செடிகள் நிறைய பூக்களை நமக்கு கொடுப்பதில்லை. மண்ணை நன்கு தளர்வாக இருக்குமாறு கிளறி வைத்துக் கொள்ளுங்கள். மண்ணுக்கு தேவையான காற்று கிடைத்தால் தான் செடிகளும் செழிப்புடன் வளரும். மண்ணில் இருக்கும் நுண் துளைகள் மூலமாக வேர் பகுதிக்கு தேவையான காற்று கிடைக்கப் பெறுகின்றன. செம்பருத்தி செடியில் இருக்கும் தண்டுகளில் வளரும் சிறிய அளவிலான இலைகளை அடிக்கடி வெட்டி விட்டு கொண்டு இருக்க வேண்டும். வாரம் ஒரு முறை தண்டுகளில் இருக்கும் குட்டி குட்டியாக தனியாக இருக்கும் இலைகளை வெட்டிவிட்டால் செம்பருத்தி செடியின் வளர்ச்சி இன்னும். அபரிமிதமாக இருக்கும்.

- Advertisement -

அஞ்சறைப் பெட்டியில் நாம் பயன்படுத்தும் வெந்தயம் சிறிதளவு பவுடர் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பவுடரை உங்களுடைய செம்பருத்தி செடியை சுற்றிலும் இருக்கும் மண்ணை கிளறி விட்டு அதில் லேசாக ஒரு ஸ்பூன் அளவிற்கு தூவிவிட்டால் போதும். பிறகு நன்கு மண்ணின் அடிப்பகுதி வரை ஈரப்பதம் புகுமாறு தண்ணீரை பாய்ச்ச வேண்டும். இப்படி செய்யும் பொழுது வெந்தயத்தில் இருக்கும் அதிகப்படியான பொட்டாசியம் சத்து பூக்காத பூச்செடிகளையும் வேகமாக பூக்க வைக்கிறது.

Venthayam4

இந்த வெந்தயம் பவுடர் செய்த உரத்தை செம்பருத்தி செடி மட்டும் இல்லாமல் எல்லா வகையான பூச்செடிகளுக்கும் நாம் பயன்படுத்தலாம். பொட்டாசியம் சத்து தேவைப்படும் செடிகளுக்கு சிறிதளவு வெந்தயத்தை பவுடர் செய்து போட்டால் போதும். செடிகள் நன்கு செழித்து வளர ஆரம்பிக்கும். மேலும் இந்த வெந்தய உரம் போடுவதால் அதில் எறும்பு தொல்லையும் இருப்பதில்லை. ரோஜா, மல்லி, முல்லை போன்ற வீட்டில் வளர்க்கக் கூடிய எல்லா வகையான பூச்செடிகளுக்கு சிறந்த ஒரு உரமாக நிச்சயம் இந்த வெந்தயம் இருக்கும். நீங்களும் பயன்படுத்தி பயன் பெறலாமே!

இதையும் படிக்கலாமே
கொத்தமல்லித் தழையை 6 மாதங்கள் ஆனாலும் கெட்டுப் போகாமல் பாதுகாத்து சமையலுக்கு எப்படி பயன்படுத்துவது? உங்களுக்காக சூப்பர் டிப்ஸ் இதோ!

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.