- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநெகட்டிவ் எனர்ஜி விலக சித்ரா பௌர்ணமி பரிகாரம்

நெகட்டிவ் எனர்ஜி விலக சித்ரா பௌர்ணமி பரிகாரம்

- Advertisement -

பல நாட்களாக உங்களைத் துரத்திக் கொண்டிருக்கும் பிரச்சனை, பல நாட்களாக உங்களைத் துரத்திக் கொண்டிருக்கும் நெகட்டிவ் எனர்ஜி, பல நாட்களாக உங்களை துரத்திக் கொண்டிருக்கும் கண் திருஷ்டி, பல நாட்களாக உங்களிடம் தங்கி இருக்கும் சோம்பேறித்தனம், கெட்ட எண்ணம், பொறாமை குணம் இப்படி எல்லா எதிர்மறை சக்திகளையும் உங்களை விட்டு வெளியேற்றி, உங்களுடைய ஆராவை நீங்களே ஒரு முறை சுத்தம் செய்து கொள்ள வேண்டுமா.

அதற்கு ஒரு வாய்ப்பை கடவுள் உங்களுக்கு கொடுத்திருக்கின்றான். அதுதான் இந்த சித்ரா பௌர்ணமி. சித்ரா பௌர்ணமியில் இரவு நேரத்தில் நிலவு ஒளியில் அமர்ந்து அந்த சந்திர பகவானை கண்குளிர பார்த்து, மனதார தரிசனம் செய்தாலே போதும். உங்களுடைய நெகட்டிவ் எனர்ஜி, உங்கள் உடம்பை விட்டு முழுமையாக நீங்கிவிடும். இதோடு சேர்த்து பின் சொல்லக்கூடிய பரிகாரத்தை செய்யும் போது, மேலும் உங்களை நீங்கள் நெகட்டிவ் எனர்ஜியிலிருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

வருடம் முழுவதும் உங்கள் உடம்பில் சேர்ந்திருக்கும் அத்தனை நெகட்டிவ் எனர்ஜியையும் வெளியேற்ற இந்த எளிமையான பரிகாரம் நிச்சயம் உங்களுக்கு உதவியாக இருக்கும். இன்று நிலவு வெளிச்சம் படக்கூடிய ஒரு இடத்தில், சௌகரியமாக நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள். அது பால்கனி, மொட்டை மாடி அல்லது வீட்டிற்கு வெளிப்பக்கம், பின்பக்கம், எந்த இடமாக இருந்தாலும் சரி அது உங்களுடைய சௌகரியம்.

நிலவு வெளிச்சத்தில் அமர்ந்து, முதலில் இடதுகை மணிக்கட்டு பகுதியில், 7633121 என்ற நம்பரை எழுதிவும். (இடது கையில் உள்ளங்கைகளுக்கு கீழ்ப்பக்கம் இருக்கும் மணிக்கட்டு. நாடித்துடிப்பு பிடித்து பார்ப்பார்கள் அல்லவா அந்த இடத்தில்). ஒரு வெள்ளை காகிதத்தில், உங்களை விட்டு வெளியேற வேண்டிய 5 தேவையற்ற விஷயங்களை எழுத வேண்டிம். நீங்கள் அந்த பேப்பரில் எழுதக்கூடிய 5 விஷயங்களும் உங்களை விட்டு வெளியேற வேண்டும் அவ்வளவுதான்.

- Advertisement -

பிறகு எழுதியதை ஒரு முறை படியுங்கள், பிறகு கையில் எழுதி வைத்திருக்கும் இந்த நம்பரை 5 முறை படித்துவிட்டு, பேப்பரை சுக்கு நூறாக கிழித்து குப்பையில் போடுங்கள். அடுத்தபடியாக I release, I release, I release என்று இந்த வார்த்தைகளை சொல்லி விடுங்கள். உங்களுக்கு தேவை இல்லாத 5 விசயங்களும் உங்களை விட்டு விலகி விடும்.

உதாரணத்திற்கு குறிப்பிட்ட இந்த எதிரி என்னை விட்டு விலக வேண்டும். என்னுள் இருக்கும் சோம்பேறித்தனம் நீங்க வேண்டும். கண்திருஷ்டி நீங்க வேண்டும். சில பேருக்கு தேவை இல்லாத கெட்ட பழக்கங்கள் இருக்கும், அதெல்லாம் என்னை விட்டு விலக வேண்டும் என்று எழுதிக் கொள்ளலாம். உங்களுடைய இஷ்டம் தான் உங்களுக்கு புரியும் படி ஒவ்வொரு வரியில் சுருக்கமாக 5 வரிகளில், ஐந்து விஷயங்கள் அடங்கும்படி, எழுதி அதை கிழிக்கும்போதே உங்களை பிடித்த கெட்டது உங்களை விட்டு விலகிவிடும்.

- Advertisement -

நிலா வெளிச்சத்தில் இன்று இரவு இந்த ஒரு விஷயத்தை செய்ய மறக்கவே மறக்காதிங்க. வேண்டிய விஷயங்களை எல்லாம் கூட இறைவனிடம் இருந்து வேண்டி பெறுவது சுலபம். வேண்டாத விஷயங்களை நம்மிடம் இருந்து தூக்கிப் போடுவது ரொம்ப ரொம்ப கஷ்டம். உங்களிடம் இருக்கும் கெடுதல் விலக, இன்றைய தினத்தில் இந்த எளிமையான பரிகாரம் நிச்சயம் உங்களுக்கு வழி வகுக்கும். எந்த பரிகாரமாக இருந்தாலும் அதற்கு குலதெய்வத்தின் ஆசி தேவை. இந்த பரிகாரத்தை செய்வதற்கு முன்னும் குலதெய்வத்தின் நாமத்தை சொல்லி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: 12-05-2025 இன்று சித்ரா பௌர்ணமி. அதிசக்தி வாய்ந்த 44 நிமிட வழிபாடு.

குலதெய்வத்தின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள். பிறகு இந்த பரிகாரத்தை செய்யுங்கள். இன்று மே மாதம் 12ஆம் தேதி. சித்ரா பௌர்ணமி. இன்று இரவு 7:00 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் இந்த பரிகாரத்தை எப்போது வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்