151 கி.மீ அசுர வேகத்தில் வீசிய நியூசி வீரர் சாதனை. ஸ்டம்பை தகர்த்து வெளியேற்றப்பட்ட தவான்

Ferguson

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று வெலிங்டனில் துவங்கியது. டாஸ் வென்று முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா.அதன்படி நியூசிலாந்து பேட்டிங் செய்ய துவங்கியது.

Newzealand

அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 219 ரன்களை குவித்தது. இதனால், இந்திய அணிக்கு 220 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. நியூசிலாந்து மொத்தம் 14 சிக்ஸர்கள் மற்றும் 14 பவுன்டரிகள் அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரரான ரோஹித் 1 ரன்னில் அவுட் ஆனார். அதன்பிறகு நியூசிலாந்து வீரர் பெர்குசன் வீசிய 151 கி.மீ. வேகப்பந்தில் 29 ரன்னில் தவான் ஸ்டம்புகள் சிதற வெளியேறினார்.

Dhawan

இந்திய அணி மோசமான தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தோனி மட்டும் சிறிது ஆறுதலான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறார்.

தெய்வீகம் வீடியோ : Dheivegam
இதையும் படிக்கலாமே :

இமாலய இலக்கு. சோபிக்க தவறிய ரோஹித், தவான் மற்றும் பண்ட். இது வேலைக்காகாது என்று களமிறங்கிய தல தோனி

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்