இமாலய இலக்கு. சோபிக்க தவறிய ரோஹித், தவான் மற்றும் பண்ட். இது வேலைக்காகாது என்று களமிறங்கிய தல தோனி

Ms
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று வெலிங்டனில் துவங்கியது. டாஸ் வென்று முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா.அதன்படி நியூசிலாந்து பேட்டிங் செய்ய துவங்கியது.

Team

அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 219 ரன்களை குவித்தது. இதனால், இந்திய அணிக்கு 220 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. நியூசிலாந்து அணி மொத்தம் 14 சிக்ஸர்கள் மற்றும் 14 பவுன்டரிகள் அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 8.4 ஓவர்களில் 65 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறிவருகிறது. ரோஹித் 1, தவான் 2, பண்ட் 4 ரன்கள் என அனைவரும் எளிதில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

Newzealand

தற்போது களத்தில் நம்ம தல தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் விளையாடி வருகின்றனர். இன்னும் இந்திய அணி வெற்றிக்கு 64 பந்துகளுக்கு 153 ரன்கள் தேவை. சாதிக்குமா இந்திய அணி? சீக்கிரம் முடிவு தெரியும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

சிக்ஸரை தடுத்து பவுண்டரி லைனில் அபாரமான கேட்ச் செய்த தினேஷ் கார்த்திக் – வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -