IND vs AUS 1st ODI : 100 ஆவது ஒருநாள் போட்டியில் டக் அவுட் ஆகி சோகத்துடன் வெளியேறிய ஆஸி கேப்டன்

Finch
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் துவங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி அதன்படி ஆஸ்திரேலிய அணி துவக்க வீரர்கள் ஆட்டத்தை துவங்கினர். நேற்றைய வலைப்பயிற்சியில் காயமடைந்த தோனி இன்றைய போட்டியில் களமிறங்கினார்.

Toss

அதன்படி துவக்க வீரர்களாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் மற்றும் கவாஜா ஆகியோர் களமிறங்கன்னார்கள். கேப்டன் பின்ச்க்கு இது 100 ஆவது சர்வதேச ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. தனது 100 ஆவது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய பின்ச் சந்தித்த 3ஆவது பந்திலேயே பும்ரா பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் ஆகி ரன் ஏதும் எடுக்காமல் டக் ஆகி சோகத்துடன் வெளியேறினார்.

- Advertisement -

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பின்ச் 100 ஆவது போட்டியில் டக் அவுட் ஆகி வெளியேறிய முதல் கேப்டன் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரரானார். பிறகு கவாஜாவுடன் ஸ்டோனிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இதுவரை 14 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்களை குவித்துள்ளது. இந்த ஜோடி தற்போது நிதானமாக விளையாடி வருகிறது.

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றியடைய வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். பும்ரா சிறப்பாக பந்துவீசி வருகிறார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

Virat Kohli : உலகக்கோப்பை அணியில் ஆட விருப்பம் இருந்தால் இதனை செய்யுங்கள் – கோலி எச்சரிக்கை

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

English Overview : Finch got duck out his Hundreath odi

- Advertisement -