இவரைப்போன்ற ஒரு வீரர் எங்கள் அணியில் இருந்தால் நாங்கள் அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் வெற்றிபெறுவோம். தோல்வி குறித்து – பின்ச் பேட்டி

Finch-2

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நாக்பூர் மைதானத்தில் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது ஆஸ்திரேலிய அணி அதன்படி விளையாடி இந்திய அணி 250 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கோலி 116 ரன்களும், விஜய் ஷங்கர் 46 ரன்களும் குவித்தனர்.

Toss

அடுத்தது ஆடிய ஆஸ்திரேலிய அணி துவக்க வீரர்கள் சிறப்பான துவக்கம் அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 83 ரன்களை குவித்தது. அதற்கடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 242 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

தோல்வி குறித்து பேசிய பின்ச் : நாங்கள் பெற்றிபெறும் சூழ்நிலையிலேயே இருந்ததாக கருத்தினேன். ஸ்டோனிஸ் அருமையாக ஆடினார். அவருடன் ஒருவர் சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்திருந்தால் இந்த போட்டியின் முடிவு மாறி இருக்கும். மேலும், விராட் கோலி போன்று சதம் அடிக்கும் வீரர் எங்கள் அணியில் இல்லாதது வெற்றிக்கு பெரும் இடையூறாக இருக்கிறது. இதுவே இரு அணிக்கும் இருக்கும் வித்தியாசமாக இருக்கிறது.

Kohli

மேலும், எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். இலக்கு இந்த மைதானத்தில் அடிக்கக்கூடியதாக இருந்தாலும் இந்திய மண்ணில் அவர்களை எதிர்த்து ஆடுவது எப்போதும் சிரமமே என்று கூறினார் பின்ச்.

இதையும் படிக்கலாமே :

46 ஆவது ஓவரை யாரை வீசவைக்கலாம் என்று இவர்களிடம் கேட்டேன். அதனாலே வெற்றி கிடைத்தது – இந்திய கிரிக்கெட் கேப்டன் கோலி

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்