46 ஆவது ஓவரை யாரை வீசவைக்கலாம் என்று இவர்களிடம் கேட்டேன். அதனாலே வெற்றி கிடைத்தது – இந்திய கிரிக்கெட் கேப்டன் கோலி

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நாக்பூர் மைதானத்தில் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது ஆஸ்திரேலிய அணி அதன்படி விளையாடி இந்திய அணி 250 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கோலி 116 ரன்களும், விஜய் ஷங்கர் 46 ரன்களும் குவித்தனர்.

Toss

அடுத்தது ஆடிய ஆஸ்திரேலிய அணி துவக்க வீரர்கள் சிறப்பான துவக்கம் அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 83 ரன்களை குவித்தது. அதற்கடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 242 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

- Advertisement -

வெற்றி குறித்து பேசிய கோலி : இந்த வெற்றி உண்மையிலே மகிழயை தந்தது. விஜய் ஷங்கர் மிகச்சிறப்பாக விளையாடினர். அவருடன் அமைத்த பாட்னர்ஷிப் தான் வெற்றிக்கான அடித்தளமாக அமைந்தது. மேலும் 46 ஆவது ஓவரை ஷங்கரை வீச வைக்கலாம் என்று முடிவு செய்தேன். அப்போது ரோஹித் மற்றும் தோனியிடம் சென்று யாரை பந்து வீச வைக்கலாம் என்று ஆலோசனை செய்தேன் அப்போது அவர்கள் இருவரும் பும்ராவை வீச வைக்கலாம் என்று கூறினர்.

Finch

அதன்படி பும்ராவை வீச வைத்தேன். அவர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார். பிறகு கடைசி ஓவரில் ஷங்கர் சிறப்பாக வீசி வெற்றி தேடித்தந்தார். என்று மகிழ்ச்சியுடன் பேட்டி அளித்தார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

தோனியை கிரிக்கெட் மைதானத்தில் துரத்திச்சென்று கட்டிப்பிடித்த ரசிகர் – வைரல் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -