இருண்ட குகைக்குள் ஐந்து தலை நாகத்தை கண்ட மக்கள்

- விளம்பரம்1-

தருமபுரி மாவட்டத்தில் உள்ள நெருப்பூர் என்ற கிராமத்தை ஒட்டி ஒரு அடர்ந்த வனப்பகுதி உள்ளது. அந்த வனப்பகுதிக்குள், பார்ப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் இருண்ட குகை ஒன்று உள்ளது. அந்த குகைக்குள் ஓடும் வற்றாத நீரூற்றில் எழுந்தருளியிருக்கும் சாமி சிலைகளின் வரலாறு 500 ஆண்டுகள் கடந்தவை என்று கூறப்படுகிறது.

 

- Advertisement -

பல நூறு ஆண்டுகளாக பல மர்மங்கள் புதைந்துகிடக்கும் இந்த முத்தையன் குகை கோயிலில் திகிலுக்கு பஞ்சமில்லை. வெறும் 20 அடி நீளமும் 6 அடி அகலமும் கொண்ட இந்த குகைக்கோவிலில் ஒரே சமயத்தில் 6 பேர் மட்டுமே வழிபாடு செய்யமுடியும்.

இந்த குகைக்குள் பல நூறு வவ்வால்கள் ஆங்காங்கே தொங்கிக்கொண்டிருக்கிறது. அவை எல்லாம் தவம் செய்துகொண்டிருப்பதாக அந்த ஊர் மக்கள் நம்புகின்றனர். அதோடு அந்த வவ்வால்கள் அனைத்தும் எப்போது குகையை விட்டு வெளியே போகிறது எப்போது திரும்பி வருகிறது என்பதெல்லாம் மர்மமாகவே உள்ளது என்கிறார்கள் அந்த ஊர் மக்கள்.

அதோடு இந்த குகை கோவிலில் ஐந்து தலை நாகம் ஒன்று வசித்து வருகிறதாம். சாமிக்கு பின்னல் இருட்டான ஒரு இடத்தில் தான் இது பெரும்பாலும் இருக்கிறதாம். அதோடு அவ்வவ்போது அந்த நாகம் குகையை சுற்றி சுழன்று வருவதாகவும் அந்த ஊர் மக்கள் கூறுகின்றனர்.

அந்த ஊரில் வாழும் வேறு சிலரோ அங்கு ஐந்து தலை நாகம் எதுவும் இல்லை என்றும் மாறாக ஐந்து நாகங்கள் இருக்கின்றது எனவும் அதை தான் ஐந்து தலை நாகம் என்று சிலர் கூறிவருகின்றனர் எனவும் கூறுகின்றனர்.

இதுகுறித்து கோவில் பூசாரி கூறுகையில், அங்கு ஐந்து நாகங்கள் வாழ்வது உண்மை தான். அதை நான் அடிக்கடி பார்த்ததுண்டு. அது பக்தர்களை எதுவும் செய்யாது என்று கூறியுள்ளார். இந்த கோவில் சந்தன கடத்தல் வீரப்பனுக்கு  இஷ்டமான கோவில் என்றும் அவ்வப்போது அவர் இங்கு வந்து தெய்வத்தை வணங்கி சென்றார் என்றும் ஊர் மக்கள் கூறுகிறார்கள்.

Advertisement