உங்க வீட்டு ஃபிளாஸ்க் உள்ளே கறை பிடிச்சு, கெட்ட வாடை அடிக்குதா? அந்த ஃபிளாஸ்கை இனி தூக்கி போட வேண்டாம். புதுசு போல மாற்ற சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக!

flask1

உங்கள் வீட்டு ஃபிளாஸ்க் உள்ளே கரைப்பிடித்து இருந்தாலும் சரி, அதேசமயம் ஃபிளாஸ்க் வாங்கி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. ஃபிளாஸ்குக்கு உள்ளே ஊற்றி வைக்கும் சுடு தண்ணீரோ, டீ வெகு நேரம் சூடு தங்கவில்லை என்றாலும், அந்த ஃபிளாஸ்கை தூக்கி போட வேண்டாம். அதை மீண்டும் பயன்படுத்துவதற்கு என்ன செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஃபிளாஸ்கை எல்லாம் நாம் சில தினங்களில் பயன்படுத்திவிட்டு, தூக்கி போட்டு விட முடியாது. வருடக்கணக்கில் பயன்படும் ஒரு பொருள் தான் இந்த ஃபிளாஸ்க். முறையாக பராமரிப்பு இருந்தால் அதை பத்திரமாக நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தலாம்.

flask2

முதலில் உங்கள் வீட்டில் உள்ள ஃபிளாஸ்கில் உள்ளே அடியில் அதிகப்படியான கறை படிந்திருந்தால் அது எப்படி சுத்தம் செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம். ஃபிளாஸ்குக்கு உள்ளே சோடா உப்பு 2 ஸ்பூன், வினிகர் 2 மூடி, சமையலுக்கு பயன்படுத்தும் அரிசி 2 ஸ்பூன், உப்பு 2 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டுக் கொள்ளுங்கள். இறுதியாக நன்றாக சுட வைத்த தண்ணீரை இந்த ஃபிளாஸ்க் உள்ளே ஊற்றி விடுங்கள்.

அதன் பின்பு இறுக்கமாக மூடியை போட்டு இரண்டு குலுக்கு குலுக்கி அரைமணி நேரத்திலிருந்து ஒருமணி நேரம் வரை ஊற விட்டு விடலாம். ஊரும் இந்த சமயத்தில் நீங்கள் ஃபிளாஸ்டிக்குக்கு உள்ளே போட்ட பொருட்கள் எல்லாம் அடியில் தங்கியிருக்கும் அல்லவா? இப்போது ஃபிளாஸ்கை குளிக்காமல் மூடியைத் திறந்து மேலே இருக்கும் தண்ணீரை முக்கால் பாகம் வரை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள்.

flask4

அடியில் தங்கியிருக்கும். 1/4 கப் தண்ணீரோடு உப்பு அரிசி எல்லாம் நிற்கும். மீண்டும் ஃபிளாஸ்கை மூடி விட்டு உள்ளே இருக்கும் 1/4 கப் தண்ணீரை நன்றாகக் குலுக்கி சுத்தம் செய்ய வேண்டும். உங்கள் வீட்டில் வாட்டர் கேன் கழுவுவதற்காக, ஏதாவது நீளமான பிரஷ் இருந்தால், இப்போது இறுதியாக உள்ளே விட்டு தேய்த்தாலும், உள்ளே இருக்கும் அழுக்குகள் மொத்தமாக வெளியேறிவிடும். கெட்ட வாடையும் வராது.

- Advertisement -

இறுதியாக நல்ல தண்ணீரை விட்டு கழுவி உலர விட்டு விடுங்கள். சரி உங்களுடைய ஃபிளாஸ்க் சூடு நிற்காமல் போகிறது என்றால் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் எவர்சில்வர் ஃபிளாஸ்கை பயன்படுத்தினாலும் சரி, உள்ளே கண்ணாடி இருக்கும் ஃபிளாஸ்டிக் பயன்படுத்தினாலும் சரி, எல்லாத்துக்கும் மேலே போடக்கூடிய மூடியில் ரப்பர் போல ஒரு பொருள் இருக்கும்.

flask3

ஃபிளாஸ்க் மூடியை திறந்து பார்த்தீர்களென்றால் உள்பக்கத்தில் வெள்ளை நிறத்தில் ரப்பர் போல வாஷர் இருக்கும். அந்த வாஷரின் தன்மை மாறிவிட்டாலும், ஃபிளாஸ்க் உள்ளே சூடு தங்காது. சரி செய்யும் கடைகளில் கொண்டு போய் கொடுத்தால், மூடியில் இருக்கும் வாஷரை மட்டும் தனியாக மாற்றிக் கொடுப்பார்கள். அதன் பின்பு உங்களது ஃபிளாஸ்க் மீண்டும் புதுசு போல, உள்ளே ஊற்றக்கூடிய பொருள் சூடாக இருக்கும்.

flask

உங்க வீட்டு ஃபிளாஸ்கை மூடி போட்டு எடுத்து பத்திரப்படுத்த போகிறீர்கள் என்றால், ஃபிளாஸ்கின் உள்ளே, 1 ஸ்பூன் சர்க்கரையை போட்டு மூடி போட்டு வையுங்கள். மீண்டும் பயன்படுத்தும் போது கெட்ட வாடை அடித்தது. உங்க வீட்டு ஃபிளாஸ்கில் இப்படிப்பட்ட கோளாறுகள் இருந்தால் இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணி சரி செய்து பாருங்க! நிச்சயம் நல்ல ரிசல்ட் கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே
பெண்கள், மன குழப்பமான நேரங்களிலும், தெளிவான முடிவை எடுக்க இந்த 1 பொருளை கையில் வைத்துக் கொண்டாலே போதும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.