பெண்கள், மன குழப்பமான நேரங்களிலும், தெளிவான முடிவை எடுக்க இந்த 1 பொருளை கையில் வைத்துக் கொண்டாலே போதும்.

women2

ஆண்களினால் கூட சில சமயங்களில் குழப்பமான பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவை எடுக்க முடியாது. வீட்டில் இருக்கும் ஆண்கள், குழப்பமான சமயங்களில் தங்களுடைய அம்மாவிடமோ, தங்களுடைய மனைவியிடமோ, இருக்கக்கூடிய பிரச்சனையை சொல்லி, என்ன செய்யலாம் என்ற தீர்வினை கேட்பார்கள். சில பேர் தங்களுடைய பெண் குழந்தையிடம், அதாவது தன்னுடைய மகளிடம் கூட கஷ்டத்தை சொல்லி, குழப்பமான பிரச்சினைக்கு தீர்வினை கேட்டுக் கொள்வார்கள். ஏனென்றால், சிக்கலான குழப்பங்களுக்கான தெளிவினை கொடுக்கக்கூடிய சக்தி பெண்களிடம் இயல்பாகவே உள்ளது. எந்த வீட்டில் பெண்களை மதித்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்துகிறார்களோ, அவர்களுக்கு இந்த விஷயம் நன்றாகவே புரிந்திருக்கும்.

sad-crying

ஆனால் அடுத்தவர்களுக்கு ஒரு பிரச்சினை என்று வரும் போது உதவி செய்யும் பெண்களுக்கு, தங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்து விட்டது என்றால் சில சமயங்களில் அதை சமாளிக்க முடியாமல் தினறுவார்கள். சிலசமயங்களில் தடுமாற்றமும், பயமும் பெண்களுக்கு வந்துவிடும். பெண்கள் எப்போதுமே கோபமாக இருக்கும் போதும் சரி, சந்தோசமாக இருக்கும் போதும் சரி, தன்னிலை மாறாமல் கவனத்தோடு செயல்பட வேண்டியது மிக மிக அவசியம்.

பெண்கள் கோபத்தில் எடுக்கக்கூடிய முடிவும் தவறாகத்தான் இருக்கும். சந்தோஷத்தில் எடுக்கக்கூடிய சில முடிவுகளும் தவறாகப் போய் முடிவதற்கு வாய்ப்பு உள்ளது. தீர்க்க முடியாத பிரச்சினை என்று வரும்போது, எப்போதுமே அமைதியாக இருக்கும் சூழ்நிலையில் முடிவு எடுக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் எடுக்கக்கூடிய எந்த முடிவாக இருந்தாலும் அது உங்களை மட்டும் பாதிக்கப் போவது கிடையாது. உங்களது குடும்பத்தையே பாதித்துவிடும்.

copper-thandai

சரி, இப்போது நீங்கள் தடுமாற்றம் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் எந்த அணிகலனை அணிய வேண்டும். எப்படி அணிய வேண்டும் என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம். செம்பு, இது சூரியனுக்கு உகந்த உலோகமாக சொல்லப்பட்டுள்ளது. தடுமாற்றம் இல்லாத தெளிவான முடிவை எடுக்க, மனக்குழப்பம் நீங்க சூரியனின் ஆசீர்வாதம் நமக்குத் தேவை.

- Advertisement -

சுத்தமான செம்பில் செய்யப்பட்ட ஒரு காப்பு வாங்கிக் கொள்ள வேண்டும். அந்த காப்பினை பெண்கள் தங்களுடைய இடது காலில் அணிந்து கொள்ள வேண்டும். நீங்கள் அணிந்திருக்கும் வெள்ளிக்கொலுசோடு சேர்த்து இந்த செம்பு காப்பை அணிந்து கொள்ளலாம். சிலருக்கு காலில் அணிய விருப்பம் இருக்காது எனும் பட்சத்தில், இடது கையில் செம்பு வளையலாகவும் அணிந்து கொள்ளலாம். தவறு ஒன்றும் கிடையாது.

copper-kappu

நவீனமயமாகிக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் காப்பை எப்படி அணிவது என்று சங்கடப் படும் பெண்கள் இந்த காப்பை உங்களுடைய பர்ஸில் கூட வைத்துக்கொள்ளலாம். முடிந்த வரை எந்த சங்கடத்தையும் பார்க்காமல், உங்களுடைய வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்றால், உங்களுடைய இடது காலில் அணிந்து கொள்வது முழு பலனை உங்களுக்கு தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

kungumam-kumkum

இந்தக் காப்பை புதன், வியாழன், வெள்ளி இந்த மூன்று கிழமைகளில் நல்ல நேரம் பார்த்து பூஜை அறையில் வைத்து குல தெய்வத்தை வேண்டிக்கொண்டு, இஷ்டதெய்வத்தை வேண்டிக் கொண்டு, அதன் பின்பு நீங்களே உங்களது இடது காலில் அணிந்து கொள்ளுங்கள். இதை அணிந்து கொண்ட சில தினங்களிலேயே உங்களால் நல்ல வித்தியாசத்தை உணர முடியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
பெருமாள் அருள் பெற்ற இந்த 3 பொருட்களை வீட்டு வாசலில் கட்டுவதால் செல்வ வளம் பெருகுமாம்! நீங்களும் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.