- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilஆளி விதையுடன் நீங்கள் வேண்டாம் என்று தூக்கிப் போடும் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து...

ஆளி விதையுடன் நீங்கள் வேண்டாம் என்று தூக்கிப் போடும் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து பயன்படுத்தி பாருங்கள். அழகே பொறாமைப்படும் பேரழகியாக மாறிடுவீங்க.

- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள், ஆண்கள் என அனைவருமே தங்களை அழகாகவும், நல்ல நிறத்துடனும், காட்டிக் கொள்ள அதிக அளவில் மெனக்கெடுக்கிறார்கள். இதற்காக அவர்கள் முதலில் தேர்ந்தெடுப்பது அழகு நிலையம் தான். அங்கு சென்று அதிக அளவில் பணத்தையும் வாரி இறைக்கிறார்கள். இனி இதற்கெல்லாம் அவசியமே இல்லை. இந்த அழகுக் குறிப்பு பதிவில் நம் வீட்டில் மிகவும் எளிமையான முறையில் நம்முடைய நிறத்தை அதிகப்படுத்திக் கொள்ள என்ன செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இதற்கு நாம் பயன்படுத்தும் பொருள் ஆளி விதை தான். இந்த ஆளி விதை இருந்தால் போதும் உங்களை நல்ல நிறமாகவும்,சருமத்தை மென்மையாகவும் மாற்றி உங்களை பார்ப்பவர்களை ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு உங்களின் அழகை இது அதிகப்படுத்தி விடும்.

- Advertisement -

ஆளி விதைகளை ஃபேஸ் பேக்காக பயன்படுத்தலாம். இதில் விதைகள் ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். ஆளி விதைகள் சருமத்தை மென்மையாக்கி சருமத்தின் வறட்சியை தடுக்கிறது.

முகம் வெள்ளையாக ஆளி விதை ஃபேஸ் பேக்:
இந்த பேக் தயாரிக்க ஆளி விதை ஒன்னரை டீஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் பாதி ஆரஞ்சு பழத்தோலையும் எடுத்துக் கொள்ளுங்கள் (இதற்கு ஆரஞ்சு நிறம் அல்லது பச்சை நிறம் இரண்டு நிறத்தில் உள்ள தோலையும் பயன்படுத்தலாம்). இப்போது அடுப்பில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடானவுடன் ஆளி விதையும், ஆரஞ்சு பழ தோலையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். இந்தத் தண்ணீர் நன்றாக கொதித்து ஒரு ஜெல் பதத்திற்கு வந்து விடும் அப்போது அடுப்பைஅணைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த ஜெல்லை சிறிது நேரம் வரை ஆறவைத்த பிறகு ஒரு பவுலில் மெல்லிய காட்டன் துணி வைத்து ஊற்றி வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டும் போது இது துணியிலே தங்கி விடும். கரண்டிஒன்றை வைத்து நன்றாக அழுத்தி ஜெல் முழுவதுமாக எடுத்து கொள்ளுங்கள். இதை முழுவதுமாக ஆறிய பின்பு வடிகட்டினால் ஜெல் தனியாக வராது எனவே கொஞ்சம் சூடாக இருக்கும் போது தான் வடிகட்ட வேண்டும்.

இதை உங்கள் முகத்தில் தேய்ப்பதற்கு முன்பாக முகத்தில் சுத்தமாக கழுவி துணி வைத்து துடைத்து விடுங்கள் அதன் பிறகு எந்த ஜெல்லில் இருந்து கொஞ்சம் எடுத்து உங்கள் முகம் கழுத்து கை போன்ற இடங்களில் எல்லாம் தேய்த்து விடுங்கள். முகம் தவிர மற்ற இடங்களில் இந்த ஜல்லை தேய்க்கும் பொழுது இரண்டு மூன்று லேயர் தேய்த்துக் கொள்ளுங்கள். முகம் தவிர மற்ற இடங்களில் இருக்கும் தோல் சற்று தடிமனாக இருக்கும் எனவே இரண்டு மூன்று லேயர் போடும்போது தான் அவை விரைவாக வேலை செய்யும்

- Advertisement -

இந்த ஜெல்லை தேய்த்த பின் ஐந்து நிமிடம் வரை மசாஜ் செய்து பிறகு முகத்தை சுத்தமான தண்ணீர் கொண்டு அலம்பி விடுங்கள். இந்த முறையை முடிந்த வரையில் இரவு உறங்க செல்வதற்கு முன் செய்த பின் உறங்கினால் முகத்தில் சீராக இரத்த ஓட்ட பரவி விரைவில் முகம் பளிச்சென்று மாறும்.

இதையும் படிக்கலாமே: ஒரு ஸ்பூன் சந்தன பௌடர் இருந்தால் போதும் உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகப்பருக்கள் என அனைத்தையும் நீக்கி ஹீரோயின் போல ஜொலிக்கலாம்.

இதை வாரம் ஒரு முறை பயன்படுத்தி வந்தாலே போதும் உங்கள் முகத்தின் நிறம் பல மடங்கு கூடி விடும். இது முழுக்க முழுக்க இயற்கையான முறையில் தயாரிப்பதால் உங்கள் சருமத்திற்கு எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்தாது.

சற்று முன்