ஒரு ஸ்பூன் சந்தன பௌடர் இருந்தால் போதும் உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகப்பருக்கள் என அனைத்தையும் நீக்கி ஹீரோயின் போல ஜொலிக்கலாம்.

Santhanam powder for face in Tamil
- Advertisement -

பெண்களின் உடல் மற்றும் முகம் தோற்றம் அழகாக இருந்தால் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பொதுவாக நம் வீடுகளில் சந்தன பவுடரை ஆன்மீக விடயங்களுக்கு பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த சந்தன பவுடரை பயன்படுத்தி பெண்களின் அழகை மேம்படுத்த என்னென்ன செய்யலாம் என்பன குறித்த விடயங்களை இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

முகத்திற்கு சந்தன பௌடர்
பெண்களின் தோலின் நிறம் நன்கு பளபளப்பாக மின்ன, ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு சுத்தமான சந்தன பவுடரை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் 1 டேபிள்ஸ்பூன் அளவிற்கு கடலை மாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு ரோஸ் வாட்டர் சேர்த்து அனைத்தையும் ஒரு பேஸ்ட் பதத்தில் கலந்து கொள்ள வேண்டும். பிறகு இந்த பேஸ் பேக்கை பெண்கள் தங்களின் முகம் முழுக்க நன்கு தடவிக் கொண்டு, ஒரு 15 நிமிடம் வரை அப்படியே விட வேண்டும். பிறகு இதமான நீரைக் கொண்டு முகத்தை கழுவிக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

பெண்களின் முகத்தில் முகப்பருக்கள் நீங்கினாலும், அதனால் ஏற்பட்ட கரும்புள்ளிகள் முகத்தின் அழகையே கெடுக்கும். முகத்தில் ஏற்பட்டிருக்கின்ற கரும்புள்ளிகள் நீங்கி முகம் அழகு பெற, சம அளவு சந்தன பவுடர் மற்றும் கருப்பு உளுந்து மாவை எடுத்து, அதில் சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் போல் தயாரித்து, தினமும் இரவு நேரத்தில் கரும்புள்ளிகள் இருக்கின்ற பகுதிகளின் மீது தடவி கால் மணி நேரம் அப்படியே விட்டு, பிறகு குளிர்ந்த நீரை கொண்டு கழுவி வந்தால் முகத்தில் இருக்கின்ற கரும்புள்ளி தழும்புகள் நீங்கி முகம் அழகு பெறும்.

வெயில் நேரத்தில் பெண்கள் வெளியில் சென்று விட்டு வீடு திரும்பும் பொழுது அவர்களின் சருமம் கருத்து போய்விடும் சூரிய வெப்பத்தினால் ஏற்படுகின்ற தோல் கருமையை போக்க, ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு சந்தன பொடி, 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு ஆரஞ்சு பழ தோல் பொடி மற்றும் 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு கட்டித் தயிர் ஆகிய இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து, நன்கு கலந்து இந்த கலவையை தோல் கருத்து போயிருக்கின்ற பகுதிகளில் நன்கு பூசி மசாஜ் செய்ய வேண்டும். பூசிய இந்த கலவை நன்கு காய்ந்த பிறகு, குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவிக் கொள்ள வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வர சூரிய வெப்பத்தால் ஏற்படுகின்ற தோலின் கருமை நிறம் நீங்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: கண் கருவளையங்கள் நீங்க காபி தூளை இப்படி பயன்படுத்தலாம்

ஒரு சில பெண்களின் உடலில் முகத்தின் தோல் பகுதி ஒரு நிறமாகவும், கழுத்து, கைகளில் தோல் ஒரு நிறத்திலும் இருக்கும். இப்படி சமச்சீர் இல்லாத தோல் நிறம் கொண்டிருக்கும் பெண்களின் முகம், கழுத்து கைகளில் ஒரே நிறத்தில் மாற, ஒரு கிண்ணத்தில் தேவையான அளவிற்கு சந்தன பவுடர் மற்றும் தேவையான அளவு ரோஸ் வாட்டர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து, பெண்களின் முகம், கழுத்து, கை பகுதிகளில் பூசிக்கொள்ள வேண்டும். 20 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீரைக் கொண்டு முகம், கழுத்து, கைகளை கழுவிக் கொள்ள வேண்டும். இப்படி தினந்தோறும் செய்து வரும் பெண்களின் முகம், கழுத்து, கைகளில் இருக்கின்ற தோல் ஒரே நிறமாக மாறும்.

- Advertisement -