1400 வருடங்களாக நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை. அறிவியலை மிஞ்சிய அதிசயம்

floating-vishnu
- Advertisement -

பொதுவாக பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பது போன்ற விஷ்ணு சிலைகளையும் படங்களையும் நாம் பார்த்திருப்போம். ஆனால் மனிதர்களை போல் மல்லாக்க படுத்துக்கொண்டு கிட்டத்தட்ட 14 நூற்றாண்டுகளாக நீரில் மிதந்துகொண்டிருக்கும் ஒரு அதிசய விஷ்ணு சிலையை பற்றியும் அந்த சிலை எங்கு உள்ளது அந்த கோவிலின் தல வரலாறு என்ன இப்படி பல சுவாரஸ்யமான தகவலைகளை பற்றியும் இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.

flaoting vishnu

நேபால் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து கிட்டத்தட்ட 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சிவபுரி மலை. இந்த மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு அற்புதமான கோவில் தான் புத்தானிகந்தா கோவில். இந்த கோவிலில் உள்ள விஷ்ணு சிலை ஆதிசேஷன் மேல் படுத்துக்கொண்டிருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் என்ன ஆச்சர்யம் என்றால், கிட்டதட்ட 14 அடியில் உயரத்தில் மிகவும் பிரமாண்டமாக ஒரே கல்லால் செய்யப்பட்டுள்ள இந்த சிலை எப்படி இவளவு வருடங்களாக நீரில் மிதந்தபடியே உள்ளது என்பது இன்றுவரை ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.

- Advertisement -

ஆதிசேஷன் தன் உடம்பை முறுக்கி வளைத்திருப்பது போலவும், பகவான் விஷ்ணு தன்னுடைய ஒரு காலை மற்றொரு கால்மேல் போட்டு படுத்துக்கொண்டு ஓய்வெடுப்பதுபோலவும் இந்த சிலை உள்ளது. இந்த கோவிலின் பெயரான புதனிகாந்தாவிற்கு என்பதற்கு பழைய நீல தொண்டை என்பது தான் பொருள். நீல தொண்டை என்பது சிவபெருமானை குறிக்கும் சொல் என்பது நாம் அறிந்ததே.

maha vishnu

அந்த கோவிலின் புராண கதைப்படி, தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது அதில் இருந்து வந்த விஷத்தை சிவன் அருந்தினார். அதன் விளைவாக அவரது தொண்டை கடுமையாக எரிய துவங்கியது. அதனால் அவர் தனது திரிசூலத்தை சிவபுரி மலையின் அடிவாரத்தில் குத்தி அங்கு ஒரு குளத்தை உண்டாக்கி அதில் இருந்து நீரை அருந்தி தன்னுடைய தொண்டை எரிச்சலை போக்கிக்கொண்டார் என்று கூறப்படுகிறது. சிவனால் உருவாக்கப்பட்ட அந்த குளத்தில் தற்போதும் ஒரு சிவலிங்கம் இருப்பதாகவும், காலப்போக்கில் அது விஷ்ணு கோவிலாய் மாறி ஒரு பிரமாண்ட விஷ்ணு சிலை அங்கு உருவாக்கப்பட்டதாகவும் உள்ளூர் வாசிகள் கூறுகின்றனர். 7 ஆம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆண்ட விஷ்ணு குப்தா என்ற மன்னன் தான் பிரமாண்ட விஷ்ணு சிலையை இங்கு நிறுவியதாக வரலாறு கூறுகிறது.

- Advertisement -

சிவன் அங்கு ஏரியை உண்டாக்கியதை போற்றும் வகையில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் அங்கு சிவனுக்கு ஒரு திருவிழா நடைபெறுகிறது. அச்சமயத்தில் ஏரியின் நீரின் கீழ் சிவனின் சாய்ந்த உருவம் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். சிவனுக்கு ஒரு திருவிழா இருப்பதை போல, வருடம் தோறும் கார்த்திகை மாதம் 11 ஆம் தேதி இங்கு விஷ்ணுவிற்கு ஒரு மிகப்பெரிய விழா கொண்டாடப்படுகிறது. அந்த சமயத்தில் பகவான் விஷ்ணு தன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து எழுந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக ஒரு நம்பிக்கை இங்கு உண்டு.

vishnu

நேபாளம் இந்து மன்னர் ஆட்சியில் கீழ் இருந்த வரை, ஒரு இந்து மன்னர் கூட இந்த கோயிலிற்கு சென்றதில்லை. காரணம், இந்த கோயிலிற்கு சென்றால் மன்னர்கள் இறந்துவிடுவார்கள் என்பது அவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருந்தது. இப்படி பல நம்பிக்கைகளும் சட்டங்களும் சம்பிரதாயங்களும் நிறைந்த இந்த கோவிலில் உள்ள விஷ்ணு சிலை இன்று வரை எப்படி நீரில் மிதந்துகொண்டே இருக்கிறது என்பது விஞ்ஞானிகளுக்கு ஆச்சர்யம் தான். இங்குள்ள சிலை நீரில் மிதந்த வண்ணம் இருந்தாலும் அதற்கான அர்ச்சனைகளும் அபிஷேகங்களும் தினமும் நடந்தவண்ணமே உள்ளன.

- Advertisement -