இத மட்டும் 1 டம்ளர் உங்க செடிகளுக்கு ஊற்றி பாருங்க! வெறும் 15 நாட்களில் உங்களுடைய பூ செடி முழுவதும் பூக்கள், மொட்டுக்கள் தான் நிரம்பி வழியும்.

rose

இப்போது வெயில் சீசன் தொடங்கிவிட்டது. நிறைய பேர் வீடுகளில் உள்ள செடிகள் பழுப்பு நிறத்தில் மாறியிருக்கும். இலைகள் பசுமையாக இருக்காது. சீசனுக்கு பூக்கும் பூக்கள் கூட பூக்காமல் மொட்டுக்கள் வைக்காமல் இருக்கும். இப்படிப்பட்ட செடிகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக வளர்ச்சி தடைப்படும். ஊட்டச்சத்தை சரியாக கொண்டுபோய் வேர்ப் பகுதிகளில் சேர்க்க ஒரு டம்ளர் இந்த தண்ணீரை வாரத்தில் 2 முறை ஊற்றினால் போதும். இந்த தண்ணீரை தயார் செய்ய, தேவையான பொருட்களை கடைகளுக்கு சென்று தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. உங்களுடைய வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு பொருளை தான் செடிகளுக்கு ஊற்ற போகின்றோம். அது என்ன பொருள். அதை எப்படிப் பயன்படுத்துவது தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

keerai

உங்களுடைய வீட்டில் சமையலுக்கு  பயன்படுத்தக் கூடிய அந்த ஒரு பொருள் கீரை கட்டு தான். வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாளோ பெரும்பாலும் நிறைய பேர் வீடுகளில் கீரை சமைக்கப்படும். சமைப்பதற்கு தேவையான கீரைகளை கிள்ளி எடுத்துக்கொண்டு அந்த காம்பு வேர் தண்டு பகுதிகளை கீழே குப்பையில் தான் தூக்கிப் போடுவோம் அல்லவா?

அதை இனி குப்பையில் தூக்கி போட வேண்டாம். அந்த தண்டு பகுதிகளை வேர் பகுதிகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். அதை மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இதில் வேர்ப் பகுதிகள் சரியாக அரை படாது. தண்டுப் பகுதிகள் அனைத்தும் நன்றாக அரைந்துவிடும்.

keerai1

இதை ஒரு வடிகட்டியில் வடிகட்டி தண்ணீரை மட்டும் பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு டம்ளர் அளவு கீரை தண்டிலிருந்து எடுக்கப்பட்ட சாறு கிடைத்தால், அதை ஒரு டம்ளர் அளவு நல்ல தண்ணீரில் அந்த கீரை சாறை கலந்து விடுங்கள். இந்த ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீரை உங்களுடைய பூச்செடிகள் காய்கறி செடிகளுக்கு வேர்ப்பகுதியில் அப்படியே ஊற்றி விடுங்கள். அவ்வளவு தான். வாரத்தில் இரண்டு நாட்கள் இப்படி ஒரு செடிக்கு ஊற்றினால் போதும். (எந்த கீரை வகையை வேண்டும் என்றாலும் இதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.)

உங்களுடைய செடி வெறும் 15 நாட்களில் செழிப்பாக வளர தொடங்கும். குறிப்பாக மல்லி செடி ரோஜா செடி, முல்லை, ஜாதி மல்லி, இப்படி உங்களுடைய வீட்டில் எந்த செடி இருக்கின்றதோ சாமந்திப்பூ செடி எல்லா பூச்செடிகளுக்கு இந்த ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீரை ஊற்றி பாருங்கள். பிறகு நடக்கக்கூடிய அதிசயத்தை.

rose

இந்த ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீரை காலை சூரிய உதயத்திற்கு முன்பு அதாவது முடிந்தவரை 7 மணிக்கு முன்பாக ஊற்றி விடுங்கள். அப்படி முடியவில்லை என்றால் மாலை 5 மணிக்கு மேல் ஊற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக பூக்காத செடிகள் கூட நன்றாக பூக்கும். செழிப்பாக வளராத செடிகள் கூட செழிப்பாக வளரும். உங்கள் வீட்டு தோட்டத்தை பார்ப்பதற்கு உங்களுடைய மனம் மிக மிக சந்தோஷப்படும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.