நித்திய மல்லி, மல்லி, முல்லை, ரோஜா போன்ற பூச்செடிகள் அதிக பூக்கள் தருவதற்கு இந்த 2 பொருட்களை பயன்படுத்தினால் போதுமே!

flower-plants

உங்களுடைய வீடுகளில் மல்லி, முல்லை, நித்திய மல்லி, ஜாதி மல்லி, ரோஜா போன்ற வாசனை மிகுந்த பூச்செடிகளை வளர்த்து வந்தால் அவைகள் நிறைய பூக்கள் பூக்க இந்த 2 பொருட்களை பயன்படுத்தி பாருங்கள். நம்முடைய வீடுகளிலேயே நாம் பயன்படுத்தும் நிறைய பொருட்கள் சத்து மிகுந்தவை தான். ஆனால் அவற்றை வீணாக தூக்கி எறிவது வேதனைக்குரிய விஷயம். நித்தியமல்லி செடியை கொடி போல படர விடுவதை விட, ரோஜா செடி போல நிறைய கிளைகள் விட்டு படர்ந்து தொட்டிக்குள் அடங்குவது போல வளர்த்தால் நிறைய பூக்களை எளிதாக நாம் பறித்துவிட முடியும்.

nithya-malli

அது போல் ரோஜா, மல்லி செடிகளிலும் நிறைய பூக்கள் கொத்துக் கொத்தாக பூப்பதற்கு இந்த 2 பொருட்கள் சிறந்த டானிக்காக இருக்கும். அப்படியான பொருட்கள் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம். சமையலுக்கு பெரும்பாலும் வெள்ளை உளுந்து பயன்படுத்துகின்றோம். ஆனால் உண்மையில் வெள்ளை உளுந்தை விட தோலுடன் கூடிய கருப்பு உளுந்து தான் மிகவும் சத்து மிகுந்தவை.

கருப்பு உளுந்தை பயன்படுத்தி இட்லி தோசை மாவு அரைததால் சுவையும் கூடும், ஊட்டச்சத்தும் அதிகரிக்கும். இப்படி கருப்பு உளுந்தை ஊற வைத்து பயன்படுத்தி விட்டு மீதமிருக்கும் தோல் வீணாக வடிகட்டி வெளியில் சென்று கொட்டாமல் அதை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி நைஸாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளலாம். அதனுடன் ஒரு லிட்டர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து பூச்செடிகளுக்கு தெளித்து வந்தால் அவ்வளவு அருமையாக கொத்துக் கொத்தாக பூக்கள் பூக்கும்.

karuppu ulunthu

பூக்காத செடிகள் கூட புத்தம் புது மலர்களை உங்களுக்கு தினமும் தந்து கொண்டே இருக்கும். அது போல நீங்கள் தினமும் பயன்படுத்தும் காய்கறி கழிவுகளை மிக்ஸியில் அரைத்து இதே போல ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொண்டு ஊற்றி வரலாம். காய்கறி கழிவுகளை பொறுத்தவரை கத்தரிக்காய் காம்பு, பூண்டு தோல், கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு போன்ற காய்கறிகளை தவிர்த்து மற்ற எதுவாக இருந்தாலும் அவற்றை தாராளமாக பயன்படுத்தலாம். மேலே கூறியவற்றை பயன்படுத்தினால் வேர் பூச்சி வருவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. மேலும் பூண்டு தோலில் உஷ்ணத் தன்மை இருப்பதால் செடிகளுக்கு உஷ்ணத்தை கொடுக்கும் என்பதால் அதையும் தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.

- Advertisement -

காய்கறி கழிவுகள் கலந்த தண்ணீர் மற்றும் கருப்பு உளுந்து கலந்த தண்ணீர் இவைகளை சிறந்த டானிக்காக உங்கள் வீட்டுச் செடிகள் மற்றும் பூச்செடிகளுக்கு ஊற்றி வர நிறைய பூக்களும், காய்களும், கனிகளும் உங்களுக்கு கொடுக்கும். நித்தியமல்லி செடியை பொறுத்தவரை வளர வளர அவற்றை வெட்டி கொண்டே வாருங்கள். இவ்வாறு வெட்டிவிட வெட்டிவிட கிளைகள் தனியாக முளைக்கத் துவங்கும்.

veggitable-waste

கொடி போன்று படராமல் செடி போன்று இருக்கும் பொழுதே நமக்கு நிறைய பூக்களை கொடுக்கும். எந்த வகையான செடிகள் ஆக இருந்தாலும் உரத்தில் உலர் தன்மை மற்றும் உதிரி உதிரியான பதத்தில் மண் கலவை இருப்பது நன்மை தரும். மண்ணிற்கு எந்த அளவிற்கு காற்றோட்டம் இருக்கிறதோ! அந்த அளவிற்கு செடி கொடிகள் செழிப்பாக வளரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மண்ணில் காற்றோட்டம் இல்லை எனில் செடிகள் செழிப்பாக வளர பூக்களும் நிறைய பூக்காது போய் விடும். இந்த இரண்டு விஷயங்களை பயன்படுத்தி பாருங்கள் நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு உங்கள் வீட்டுச் செடிகள் கொத்துக் கொத்தாய் மலரும்.

இதையும் படிக்கலாமே
இந்த செடிகளை மட்டும் வீட்டிற்குள் வைத்து வளர்த்தால் நல்லதா? கெட்டதா? தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்!

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.