இந்த செடிகளை மட்டும் வீட்டிற்குள் வைத்து வளர்த்தால் நல்லதா? கெட்டதா? தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்!

indoor-plants1
- Advertisement -

செடிகளை பொதுவாக வீட்டிற்கு வெளியே வைப்பது தான் வழக்கம். வீட்டிற்கு வெளியே வைத்து வளர்ப்பதற்கு ஆயிரம் ஆயிரம் செடிகள் இருந்தாலும் வீட்டிற்கு உள்ளே வைப்பதற்கு என்று தனியாக நிறைய செடி வகைகள் உள்ளன. அவைகளை வீட்டிற்குள் வளர்ப்பதால் நல்லதா? கெட்டதா? என்கிற சந்தேகம் அனைவருக்கும் நிச்சயம் எழும். இவ்வகையில் வீட்டிற்கு வளர்க்கும் செடி வகைகளை பற்றியும், அவைகளை வீட்டிற்குள் ஏன் வளர்க்கிறார்கள்? அது நல்லதா? கெட்டதா? என்பதை பற்றியும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

indoor-plants

அதிக வெளிச்சம் அல்லது காற்று தேவைப்படாத செடி வகைகளை தாராளமாக வீட்டிற்குள் வளர்க்கலாம். இவ்வகையான செடிகள் வீட்டிற்குள் வளர்ப்பதற்கு என்றே பிரத்தியேகமாக விற்பனைக்கு உள்ளன. இந்தச் செடி வகைகளை மண் கூட இல்லாமல் தண்ணீரிலேயே வேர் விட செய்து பின்னர் மண்ணில் நட்டு வைக்கலாம்.

- Advertisement -

வீட்டுக்குள் வளர்க்கப்படும் இவ்வகை செடியானது வீட்டிற்குள் இருக்கும் அசுத்த காற்றை சுத்தம் செய்வதற்கு பெரும்பாலும் பயன்படுகிறது. இயற்கையாகவே வீட்டிற்குள் இருக்கும் அசுத்த காற்றை தன்னுள் கிரகித்து சுத்தமான காற்றை வெளியிடுவதாக கூறப்படுகிறது. இதனால் தான் பெரும்பாலும் வீட்டிற்குள்ளும் இந்த வகையான செடிகள் வளர்க்கப்படுகிறது. மேலும் வீட்டிற்குள் பச்சை பசேலென பசுமை நிறைந்த செடிகளை வளர்ப்பதால் நேர்மறை அதிர்வலைகளும் அதிகரிக்கும். பார்ப்பதற்கே கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும் இந்த செடி வகைகளை வீட்டிற்குள் வளர்ப்பது நன்மையே தரும்.

இதில் விதிவிலக்காக முட்கள் நிறைந்த செடி வகைகளை தவிர்ப்பது நல்லது. அழகிற்காக வீட்டிற்குள் வளர்க்கப்படும் செடி வகைகளில் முட்கள் இருந்தாலும் அவைகள் எதிர்மறை எண்ணத்தை தரும் என்பதால் தவிர்ப்பது தான் மிகவும் நல்லது. வீடுகளில் வளர்க்கப்படும் செடி வகைகளில் வெளிநாட்டு வகை செடிகள் அதிகமாக இருக்கின்றன. நம்முடைய நாட்டிலேயே அனைவருக்கும் தெரிந்த சில செடி வகைகளையும் வீட்டிற்குள் வைத்து வளர்க்கலாம். அவ்வகையான செடிகள் என்ன? என்பதை பார்ப்போம்.

- Advertisement -

முதலாவதாக மருத்துவ குணம் அதிகம் நிறைந்துள்ள கற்றாழையை சிறிய தொட்டியில் அழகாக வீட்டிற்குள் வளர்க்கலாம். கற்றாழையை வீட்டில் வளர்க்கலாமா? என்கிற சந்தேகமும் இருக்கும். கற்றாழையை பொறுத்தவரை வீட்டிற்கு வெளியேயும் உள்ளேயும் எங்கு வேண்டுமானாலும் வளர்க்கலாம். அவ்வப்போது லேசாக தண்ணீர் தெளித்து வந்தாலே போதும். வீட்டில் சமையல் செய்யும் பொழுது திடீரென தீ காயம் ஏற்பட்டு விட்டால் கற்றாழையை தடவினால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

katralai

அது போல் கற்பூரவல்லி செடியை சிறிய பிளாஸ்டிக் தொட்டியில் வீட்டிற்குள் வளர்க்கலாம். கற்பூரவள்ளி போதுமான வெளிச்சம் இருந்தால் போதும். அப்பார்ட்மெண்ட்களில் அல்லது கண்ணாடி ஜன்னல்கள் இருக்கும் வீடுகளில் தாராளமாக வீட்டிற்குள் வளர்க்கும் செடி வகைகளை வளர்த்தால் நிறைய நல்ல பலன்கள் கிடைக்கும்.

- Advertisement -

karpooravalli

அது போல் மணி பிளான்ட் செடி வகை வீட்டிற்கு வெளியே வைத்து வளர்ப்பதை விட வீட்டிற்குள் வைத்து வளர்த்தால் செல்வச்செழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை. ஒரு இலையை தண்டோடு பறித்து வந்து வெறும் தண்ணீரில் போட்டு வைத்தால் வேர் விடத் துவங்கி விடும். இரண்டு நாளைக்கு ஒருமுறை புதிய தண்ணீர் மாற்றினால் போதுமானது. கொடி போல் வீட்டில் படரவிட்டால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். நன்கு வேர் விட்டதும் பின்னர் மண் தொட்டியில் மாற்றிக் கொள்ளலாம். ஸ்பைடர் ப்ளான்ட், ஸ்நேக் பிளான்ட் போன்ற எண்ணற்ற வகைகள் வீட்டில் வளர்க்கப்படும் செடி வகைகள் இருக்கின்றன. அதில் உங்களுக்கு பிடித்த செடி வகைகளை வளர்த்துப் பயன் பெறுங்கள்.

இதையும் படிக்கலாமே
உங்க வீட்டு செடிகளுக்கு தண்ணீர் ஸ்ப்ரே செய்வீங்களா? இந்த சூப்பரான ரகசியத்த முதல்ல தெரிஞ்சுகிட்டு அப்புறமா பண்ணுங்க!

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -