இந்த 3 பருப்பை, பணம் வைக்கும் இடத்தில் இப்படி வைத்தால் உடனடியாக சுக்கிர யோகம் அடிக்கும். உங்க வீட்டில் பண மழை பொழிவதை நீங்களே நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது.

money2

ஒருவருடைய வாழ்க்கையில் பண கஷ்டம் என்பது வருவதும் போவதுமாக தான் இருக்கும். நிரந்தரமாக ஒருவரால் பணக்காரராகவும் இருக்க முடியாது. நிரந்தரமாக ஒருவர் ஏழையாகவும் வாழ்ந்துவிட மாட்டார்கள். நிச்சயமாக என்றாவது ஒரு நாள் எதிர்பாராத சமயத்தில் சுக்கிர யோகம் அடித்து, குடிசையில் இருப்பவர்கள் கோபுரத்தில் போவதற்கு நிறையவே வாய்ப்பு உள்ளது. அந்த வரிசையில் சுக்கிர யோகம் அடிக்க ஒரு சுலபமான அதே சமயத்தில் சக்தி வாய்ந்த தாந்திரீக முறையைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். யோகத்தை தரக்கூடிய ஒரு பருப்பு, அது என்ன பருப்பு அதை எந்த நேரத்தில் பணப்பெட்டியில் எப்படி வைக்க வேண்டும். எப்படி வைத்தால் உடனடியாக சுக்கிரன் யோகத்தை நாம் அடையலாம் என்பதை பற்றிய ரகசியத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

cash-badam

நேரடியாகவே குறிப்பை பார்த்து விடலாம். நாம் எல்லோரும் அறிந்த பாதாம் பருப்பு தான் அது. இந்த பாதாம் பருப்புக்கு சுக்கிரனையும், பணத்தையும் வசியப்படுத்த கூடிய தன்மை உண்டு. 3 பாதாம் பருப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஹோரை வரக்கூடிய மதிய நேரம் 1.00 லிருந்து 2.00 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்து முடித்துவிட வேண்டும். ஒரு சிறிய காட்டன் பச்சை துணி அல்லது பச்சை பட்டு துணியை சதுர வடிவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தத் துணிக்கு நான்கு பக்கங்களிலும் வெறும் மஞ்சளை தடவி கொள்ளுங்கள்.

அதன்பின்பு மூன்று பாதாம் பருப்புகளை எடுத்து அந்த பச்சை துணிக்கு நடுவே வைத்து, பாதாமுடன் ஒரு பச்சை கற்பூரத்தை வைத்து அந்த பச்சை துணியை பச்சை நூல் கொண்டு ஒரு சிறிய முடிச்சு போல கட்டி வைத்துக் கொள்ளுங்கள். பூஜை அறையில் மகாலட்சுமியின் பாதங்களுக்கு முன்பு வைத்து மதியம் வரக்கூடிய சுக்கிர ஓரையில் ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு மனதார ‘பணக்கஷ்டம் தீர வேண்டும். வீண் விரயம் குறைய வேண்டும். உங்களுக்கு பண வருமானம் அதிகரிக்க வேண்டும்’ என்றபடி வேண்டுதலை வைக்க வேண்டும்.

sukkiran

வாசனை மிகுந்த தூபத்தை இந்த முடிச்சுக்கு காட்டி அதன் பின்பு சுக்கிர ஓரை முடிவதற்குள் இந்த முடிச்சை கொண்டுபோய் உங்கள் பணப் பெட்டியிலோ அல்லது பணம் வைக்கும் பர்ஸ் எதுவாக இருந்தாலும், நீங்கள் பணத்தை சேமிக்கும் இடத்தில் இந்த முடிச்சை வைத்து விடுங்கள்.

வாரம் வாரம் இந்த முடிவினை மாற்ற வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. பாதாம்பருப்பு நீண்ட நாட்களுக்கு நன்றாக இருக்கும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அந்த பழைய பாதாம் பருப்பை எடுத்து காக்கை குருவிகளுக்கு சாப்பிட போட்டுவிட்டு, மீண்டும் அதே பச்சை துணியை துவைத்து புதிய பாதாம் பருப்புகளை வைத்து கட்டி வைத்தாலும் சரி தான். இந்த பரிகாரம் தாந்திரீக ரீதியாக உடனடியாக பலனைக் கொடுக்கக்கூடிய பரிகாரம்.

mahalashmi

இந்த முடிச்சை வைத்த இரண்டு மூன்று வாரங்களிலேயே உங்களுக்கு இருக்கக்கூடிய பணக் கஷ்டங்கள் படிப்படியாக குறைவதை உங்களால் உணர முடியும். மூன்று பாதாம் பருப்புகளின் மூலம் உங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதற்கு எதுவுமே கிடையாது. ஆனால் லாபத்தை தருவதற்கு இந்த பரிகாரம் ஒரு உதவியாக இருக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் நம்பிக்கையோடு செய்து பலன் அடைய வேண்டும் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.