உங்களுடைய வாழ்க்கையில், வெற்றி நிரந்தரமாக இருக்க, எந்த கடவுளை, எந்த மந்திரத்தைச் சொல்லி, எந்த கிழமையில் வழிபட வேண்டும்?

பொதுவாகவே எவர் ஒருவர் வாழ்க்கையில் விரைவாக முன்னேற்றம் அடைகின்றாரோ, அவருக்கு, அந்த முன்னேற்றம், நிலைக்காது என்று சொல்லுவார்கள். குறிப்பிட்டு சொல்லப்போனால் அதி விரைவாக, முன்னேறினாலும் சரி, பெரிய பணக்காரராக மாறினாலும் சரி, ‘அதேவேகத்தில், சீக்கிரமாகவே அவருடைய வாழ்க்கையில் தோல்வியை தழுவி விடுவார்கள்’ என்பது, எல்லோராலும் சொல்லப்படும் ஒரு கூற்று. இந்தக் கூற்றை நாம் எல்லோரும் அறிந்திருப்போம். ‘எவ்வளவு சீக்கிரம் மேலே போனானோ, அவ்வளவு சீக்கிரம் பாதாளத்தில் விழுந்து விட்டான்’ குறிப்பாக இந்த நிலைமை பல பிரபலங்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. சாதாரண மனிதர்களும் சில விஷயங்களில், கட்டாயம் இதை உணர்ந்திருப்பார்கள். உங்களுக்கு வாழ்க்கையில் வந்துகொண்டிருக்கும் தொடர் வெற்றியை, நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றால், என்ன வழிபாடு செய்வது? என்பதைப்பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

murugan

உங்களுடைய வாழ்க்கையானது ஏறு முகத்திலேயே இருக்க வேண்டும் என்றால், நீங்கள் வழிபட வேண்டியது ஆறுமுகனை தான். தமிழ் கடவுள் முருகப் பெருமானை மனதார தினம் தோறும் வீட்டில் நினைத்து வழிபட வேண்டும். வீட்டில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் சிறந்தது. அரளிப் பூ, முடிந்தால் முல்லைப் பூவையும் சூட்டி முருகப்பெருமானை வழிபட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக மலைமேல் இருக்கும் ஏதாவது ஒரு முருகன் கோவிலுக்கு, செவ்வாய்க் கிழமை அன்றும் வெள்ளி கிழமை அன்றும் சென்று, தரிசனம் செய்ய வேண்டும். அந்த முருகருக்கு தேன் மற்றும் விபூதி வாங்கி தானமாக கொடுக்க வேண்டும். அந்த முருகப்பெருமானின் முன்பாக அமர்ந்து, அந்த சந்நிதானத்திலேயே மனதை அமைதிப்படுத்தி கொண்டு, பின்வரும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கான மந்திரம் இதோ!

Murugan_ Swamimalai

‘ஓம் ஸ்ரீம் சம் சரவணபவாய நம’

- Advertisement -

இத்தனை நாட்கள்தான் வெள்ளிக்கிழமையும், செவ்வாய்க்கிழமையும், மலைமேல் இருக்கும் முருகன் பெருமானை தரிசனம் செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. உங்களால் எப்போதெல்லாம் முடியுமோ, அப்போதெல்லாம் முருகப்பெருமானை தரிசனம் செய்ய வேண்டும். நியாயமான முறையில் உங்களுடைய முன்னேற்றம் இருந்தால், அந்த முன்னேற்றம் தடைபடாமல் தொடர்ந்து, உங்கள் பக்கத்தில் இருந்து கொண்டே செல்லும் என்பது மட்டும் உறுதி.

Swamimalai_Murugan_Temple

இந்தப் பதிவில் இன்னொரு சின்ன குறிப்பை பற்றியும் தெரிந்துகொள்வோம். சில பேர் கீழ் உதடை எப்போதுமே கடித்துக் கொண்டே இருப்பார்கள். அதாவது அவர்களுடைய பல்லால், கீழ் உதட்டை கடித்துக் கொண்டே இருப்பது தவறான விஷயம் என்று சொல்லப்பட்டுள்ளது. உங்களில் யாருக்காவது இந்தப் பழக்கம் இருந்தால் அதை திருத்திக் கொள்ளுங்கள்.

murugan5

உங்களது பிள்ளைகள் இந்தப் பழக்கத்தை திருத்திக் கொள்ளாமல் இருக்கும் பட்சத்தில், அவர்களது கையால் முருகப்பெருமானுக்கு நெய், விபூதி இந்த இரண்டு பொருட்களையும் வாங்கி தானமாக கொடுக்க வையுங்கள்! இப்படி உதடு கடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு ஆயுசு கம்மி என்ற ஒரு கூற்றும் உள்ளது. முருகப்பெருமானை வழிபட்டால் எந்த தோஷமும் நம்மை தாக்காது. சாஸ்திரப்படி எவருக்குமே உதடு கடிக்கும் பழக்கம் இருக்கக் கூடாது என்ற ஒரு கருத்தையும் முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
மஹாலக்ஷ்மி யாரை அடைகிறாள் தெரியுமா? துவாதசி அன்று இதை செய்தால் செல்வம் குவியுமாம்! மகாலட்சுமி பற்றி இதுவரை அறியாத தகவல்கள் இதோ!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Lord murugan mantra tamil. Muruga valipadu Tamil. Murugan valipadu muraigal Tamil. Lord murugan prayers