மஹாலக்ஷ்மி யாரை அடைகிறாள் தெரியுமா? துவாதசி அன்று இதை செய்தால் செல்வம் குவியுமாம்! மகாலட்சுமி பற்றி இதுவரை அறியாத தகவல்கள் இதோ!

mahalakshmi-devi

செல்வத்திற்கு அதிபதியாக விளங்கும் மஹாலக்ஷ்மி இவ்வுலக மக்களுக்கு தாயாகவும் இருக்கிறாள். அவளை சரணடைவது பெறற்கரிய பேற்றை பெற்றுத்தரும். நீங்கள் பகவானை சரண் அடைவதற்கு முதலில் தாயாரை சரணடைய வேண்டும். மகாலட்சுமி யாரிடம் சரணாகதி அடைய வேண்டுகிறார்? துவாதசியன்று நீங்கள் செய்யும் தானத்தின் பலன் என்ன? இதுவரை நீங்கள் அறியாத தகவல்கள் இப்பதிவில் காணலாம் வாருங்கள்.

aathisankarar

அம்மையார் ஒருவர் ஆதிசங்கரருக்கு நெல்லிக்கனியை தானமாக அளித்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அதனால் ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி மகாலட்சுமியின் அருளை அந்த அம்மையாருக்கு கிடைக்கச் செய்தார். இதனால் அந்த அம்மையாருக்கு பெருஞ்செல்வம் கிடைத்தது. அந்த அம்மையார் துவாதசி அன்று நெல்லிக்கனியை தானமாக அளித்தது கவனிக்க வேண்டிய ஒன்று. நெல்லிக்கனியில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. அதனால் தான் அந்த அம்மையார் பாக்கியம் பெற்றார்.

எவரொருவர் துவாதசியன்று நெல்லிக்கனியை தானம் செய்கிறார்களோ அவர்களுக்கு ஏகாதசி விரதமிருந்த பலன் கிட்டுமாம். நெல்லிக்கனியை தானம் செய்ய முடியாதவர்கள் தங்கள் உணவில் அன்றைய நாள் நெல்லிக்கனியை சேர்த்துக் கொள்ளலாம். நெல்லிக்கனியில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா? என்றால் ஆமாங்க! மகாலட்சுமியின் வடிவம் தான் நெல்லிக்கனி. தெய்வீக குணமுள்ள இம்மரத்தை வீட்டில் வளர்ப்பவர்கள் யோகம் பெற்றவர்கள்.

Nellikai benefits in tamil

அதேபோல் வில்வ மரத்திலும் ஸ்ரீ மஹா லக்ஷ்மி தேவி வாசம் செய்கிறாள். வில்வ மரத்தின் சிறப்பாக மகாலட்சுமியுடன் மஹாவிஷ்ணுவும் வாசம் செய்கிறார் அதனால்தான் இம்மரத்திலிருந்து இலைகளை அஷ்டமி, நவமி, பௌர்ணமி, அமாவாசை, சதுர்த்தி, மாதப்பிறப்பு போன்ற நல்ல நாட்களில் கட்டாயம் பறிக்கக் கூடாது. இந்த நாட்களில் இலைகளை பரிப்பவர்களுக்கு தோஷம் ஏற்படுகிறது.

- Advertisement -

மகாவிஷ்ணுவுக்கு உகந்த துளசி செடியில் மகாலட்சுமி வாசம் செய்வது அனைவரும் அறிந்ததே அதனால் தான் துளசிமாடம் வைத்து வலம் வந்து வழிபடுபவர்களுக்கு எல்லா செல்வ வளங்களும் கிடைக்கின்றதாக நம்பப்படுகிறது. எலுமிச்சம்கனி, வாழை இலை, மாவிலை இவைகளிலும் மகாலட்சுமி முழுமையாக நிறைந்திருப்பதால் சுபகாரியங்களுக்கு இவற்றை பயன்படுத்துகின்றனர்.

lakshmi

குபேரன் செல்வத்திற்கு எல்லாம் செல்வமாக இருந்தாலும் மகாலட்சுமி உயர்ந்தவராக போற்றபடுவதன் காரணம், உமையவள் செல்வத்தை மட்டுமல்ல அவற்றுடன் நல்வாழ்வு, ஆரோக்கியம், புகழையும் சேர்த்து உலக மக்களுக்கு வாரி வழங்குகிறாள். அதனால்தான் குபேரனை விட மகாலட்சுமியை அதிகம் வணங்குகின்றனர். நமக்கு செல்வம் மட்டும் இருந்தால் போதுமா? செல்வத்தை மட்டும் வைத்து ஒருவரால் உயர்நிலையை அடைந்துவிட முடியாது. செல்வத்துடன் கூடிய ஆரோக்கியமும், நல்லொழுக்கமும், அறிவாற்றலும், வீரமும் நிறைந்திருக்க வேண்டும். இவற்றால் ஒருவர் தன் வாழ்நாளை இனிமையாக வாழ முடியும்.

மகாலட்சுமி யாரை அடைய விரும்புகிறார் தெரியுமா? மகாலட்சுமி நிலையாக ஓரிடத்தில் இருப்பவர் அல்ல. அவளுக்கு பிடித்த இடத்தில், பிடித்த நேரத்தில் காட்சி தருவாள். அவள் எங்கு இருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது நாம் செய்யும் சில செயல்களில் தான் உள்ளன. வீரமிக்க ஒருவரிடம் மகாலட்சுமி இருப்பாள், சுறுசுறுப்புடன் சோம்பல் தனம் இல்லாத ஒருவரிடம் மகாலட்சுமி இருப்பாள், இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவும் ஈகை குணம் கொண்டவர்களுக்கு மஹாலட்சுமியின் அருள் நிச்சயம் கிட்டும். தவம் செய்பவர்களுக்கு லட்சுமியின் அருள் கிட்டும். மேற்கூறிய இவர்களை அடைவதற்கு மகாலட்சுமி நிச்சயம் விரும்புவாள்.

mahalakshmi

வியாழக்கிழமை மாலை நேரத்தில் வரும் குபேர காலம் லட்சுமிக்கு உகந்த காலம். அதேபோல் சுக்கிர பகவானுக்கு அதிதேவதையாக மகாலட்சுமி இருப்பதால் சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை அன்று சூரிய உதயமான பின்வரும் காலம், இரண்டு மணி நேரத்திற்குள் அக்காலம் இருக்கும். இந்த காலங்களில் பூஜை செய்வது, இறை தரிசனம் செய்வது மகாலட்சுமியின் அருள் கிடைக்கச் செய்து செல்வம் ஈட்டுவதற்கு வழிவகை செய்யும். வறுமை இல்லா வாழ்வு நிலைக்கும்.

indiran

நிலையில்லாத மகாலட்சுமியை இந்திரன் நான்கு பாகங்களில் நிலைபெற செய்தான் என்ற புராண கதையும் உண்டு. அதில் நான்கு பாகங்களில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வதாக கூறப்படுகிறது. அவை நிலம், நீர், நெருப்பு மற்றும் பொய் உரையா மனிதர்கள் அதாவது பொய் கலக்காமல் உண்மையை மட்டுமே பேசுபவர்களிடம் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வாள்.

kungumam

சுமங்கலிப் பெண்களின் நடு உச்சி வகிட்டில், அனைவரின் உள்ளங்கையில், முகம் பார்க்கும் கண்ணாடியில் உமையவள் வாசம் செய்வதால் இவற்றில் விழிப்பது அன்றைய நாள் முழுவதும் யோகத்தை பெற்று தரும். தேவாதி தேவர்களும், முதன்மை தெய்வங்களும் மகாலட்சுமியை பூஜை செய்வதுண்டு. அப்படி இருக்க மனிதர்களாகிய நாமும் சகல யோகங்களும், பெருஞ்செல்வமும் கிடைக்க வேண்டி மகாலட்சுமியை பூஜிப்போம் நலம் பெற்று வளம் பெறுவோம்.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டில், கடைபிடிக்க வேண்டிய சில ஆன்மிக குறிப்புகள். இவைகளை கடைபிடித்து வந்தால், என்றுமே பணவரவிற்கு குறைவிருக்காது!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Mahalakshmi vasam seiya. Mahalakshmi arul pera. Mahalakshmi kadatcham Tamil. Mahalakshmi pariharam. Mahalakshmi veetil thanga.